”நாடோடி, நவீன குகைமனிதன்” 16 ஆண்டுகளாக வீட்டைவிட்டு குகையில் வாழ்ந்த நபர் - எதற்காக?

குப்பைத்தொட்டிகளில் வீசப்பட்ட உணவுகள், சாலை விபத்துகளில் விலங்குகள் ஏதேனும் அடிபட்டு இறந்தால் அவை, மற்றும் தனது குகைக்கு அருகே அவரே விளைவித்த காய்கறிகள் பழங்களை சாப்பிட்டு உயிர்வாழ்ந்தார். இந்த 16 ஆண்டுகளில் அவர் எந்த தேவைக்கும் பணத்தை பயன்படுத்தவில்லை.
”நாடோடி, நவீன குகைமனிதன்” 16 ஆண்டுகளாக வீட்டைவிட்டு குகையில் வாழ்ந்த நபர் - எதற்காக?
”நாடோடி, நவீன குகைமனிதன்” 16 ஆண்டுகளாக வீட்டைவிட்டு குகையில் வாழ்ந்த நபர் - எதற்காக?ட்விட்டர்

வாடகை தருவதற்கு அலுப்பாக இருந்ததால், வீட்டைவிட்டு வெளியேறி, 16 ஆண்டுகளாக குகையில் வாழ்ந்துள்ளார் டேனியல் ஷெல்லாபார்ஜர் என்ற நபர்.

வாடகை வீட்டில் வசிப்பவர்களின் பெரும் பிரச்னை மாதம் பிறந்தால் வீட்டிற்கு வாடகை கொடுப்பது. ஹவுஸ் ஓனர்கள் சில சமயங்களில் வாடகை ஏற்றுவார்கள், வாடகை சரியான தேதியில் வரவில்லை என்றால் சண்டைக்கட்டுவார்கள்.

இப்படி வாடகையை சுற்றி ஒரு தீராத பிரச்னைகள் இருந்துகொண்டே இருக்கின்றன.

”நாடோடி, நவீன குகைமனிதன்” 16 ஆண்டுகளாக வீட்டைவிட்டு குகையில் வாழ்ந்த நபர் - எதற்காக?
”சிறுநீரை குடித்தேன்” 31 நாட்கள் அமேசான் காட்டில் சிக்கிய நபர் - தப்பித்தது எப்படி?

இந்த பிரச்னைகளால் சலிப்படைந்த அமெரிக்கர் ஒருவர், 16 ஆண்டுகளாக வீட்டை விட்டுவிட்டு குகையில் வாழ்ந்து வந்துள்ளார்.

டேனியல் ஷெல்லாபார்ஜர் என்ற இந்த நபரை மாடர்ன் கேவ்மேன் (நவீன குகைமனிதன்) என்றழைக்கின்றனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு வீட்டை வீட்டு வெளியேறினார் டேனியல். மேற்கு அமெரிக்காவின் உடா என்ற பகுதியை தேர்ந்தெடுத்து அங்கு ஒரு குகையில் வசிக்கத்தொடங்கினார்.

குப்பைத்தொட்டிகளில் வீசப்பட்ட உணவுகள், சாலை விபத்துகளில் விலங்குகள் ஏதேனும் அடிபட்டு இறந்தால் அவை, மற்றும் தனது குகைக்கு அருகே அவரே விளைவித்த காய்கறிகள் பழங்களை சாப்பிட்டு உயிர்வாழ்ந்தார். இந்த 16 ஆண்டுகளில் அவர் எந்த தேவைக்கும் பணத்தை பயன்படுத்தவில்லையாம்.

வாடகை கொடுக்க அலுப்பாக உள்ளது என்று மேம்போக்காக டேனியல் கூறினாலும், நிஜத்தில் நவீன உலகின் பழக்கவழக்கங்கள் மாற்றங்களால் அவர் அலுத்துவிட்டதாக சிஎன்என் நியூஸ் 18 தளம் கூறுகிறது.

அதிகப்படியான மனவுளைச்சல் மற்றும் டிப்ரஷனால் பாதிக்கப்பட்ட டேனியல், ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துகொள்ள கூட முயற்சித்திருக்கிறார்.

வாழ்வின் விளிம்பிற்கே சென்றுவிட்டு திரும்பியவர், ஒரு நாடோடியாக வாழத் தொடங்கினார்.

”நாடோடி, நவீன குகைமனிதன்” 16 ஆண்டுகளாக வீட்டைவிட்டு குகையில் வாழ்ந்த நபர் - எதற்காக?
சீனா: ரூ.1800 திருடிவிட்டு 14 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்த நபர் - இப்போது வெளியேவர காரணமென்ன?

90களின் மத்தியில் அமெரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் உடா என்ற இடத்தில் வாழ முடிவு செய்தார். இவருக்கு அரசு அளிக்கும் எந்த விதமான உதவிகளும் கூட கிடைக்கவில்லை. அவ்வப்போது நூலகத்தில் இருந்த கணினியை எழுதுவதற்காக மட்டும் பயன்படுத்திவந்தார்.

சில அண்டுகள் இப்படி வாழ்ந்தவர், 2009 ஆம் ஆண்டு தான் முற்றிலுமாக மனிதர்களின் உலகத்தைவிட்டு வெளியேறினார். தனக்கு சொந்தமான அனைத்தையும் விட்டுவிட்டு, குகையிலேயே வாழ்ந்துவிட முடிவு செய்தார். அவர் விட்டு வந்த பொருட்களில் அவரது பணமும் அடங்கும்.

“நான் பென்சில்வேனியாவில் இருக்கும் ஒரு ஃபோன் பூத்திற்கு சென்று, என்னிடம் இருந்த பணத்தை அங்கேயே வைத்துவிட்டு வந்துவிட்டேன். யாராவது அதை எடுத்துக்கொள்வார்கள் என நினைத்து இதை செய்தேன்” என்றார் டேனியல்.

பணத்தை அங்கு வைத்துவிட்டு வெளியேறிய போது ஒரு விதமான சுதந்திர காற்றை சுவாசித்ததாக டேனியல் கூறினார். முற்றிலும் சௌகரியமாகவும் சுதந்திரமாகவும் உணர்ந்ததாக அவர் தெரிவித்தார்.

இப்படி 16 ஆண்டுகள் மனிதத் தொடர்புகள் இல்லாமல் வாழ்ந்த டேனியல் தனது பெற்றோருக்கு வயதானதால் அவர்களை கவனித்துக்கொள்ள மீண்டும் மனிதர்கள் வாழும் பகுதிக்கு திரும்பினார்

ஒன்லி ஹ்யூமன் என்ற நிகழ்ச்சியில் டேனியல் தனது அனுபவங்களை பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

”நாடோடி, நவீன குகைமனிதன்” 16 ஆண்டுகளாக வீட்டைவிட்டு குகையில் வாழ்ந்த நபர் - எதற்காக?
”என் காதலி” 600 வருட பழமையான மம்மியை 30 ஆண்டுகளாக காதலித்த இளைஞர் - காத்திருந்த அதிர்ச்சி!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com