Mehran Karimi Nasseri: பாரிஸ் ஏர்போர்ட்டில் 18 ஆண்டுகள் வாழ்ந்த ஈரானியர் மரணம்; யார் இவர்?

கடந்த சனிக்கிழமை அதே விமான நிலையத்தில் 2 எஃப் டெர்மினலில் நண்பகல் நேரத்தில் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக பாரிஸ் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Mehran Karimi Nasseri
Mehran Karimi NasseriTwitter
Published on

ஹாலிவுட்டில் நடிகர் டாம் ஹாங்க்ஸ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் The Terminal. இந்த படத்தை எடுப்பதற்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த, உண்மை நாயகன் மெஹ்ரன் கரிமே நசீரி காலமானார்.

யார் இவர்? இவர் மரணத்துக்கு ஹாலிவுட் ரசிகர்கள் சலசலப்பது ஏன்?

மெஹ்ரன் கரிமே நசீரி. இவர் ஒரு பெரிய அரசியல்வாதியோ, ஹாலிவுட் பிரபலமோ அல்ல. ஆனால் இவர் கடந்த சனிக்கிழமை காலமானது ஜாலிவுட் ரசிகர்கள், குறிப்பாக தி டெர்மினல் பட ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

'தி டெர்மினல்' திரைப்படம்:

கடந்த 2004 ஆம் ஆண்டு ஸ்டீவன் ஸ்பீல்பர்க் என்கிற உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் தி டெர்மினல் என்கிற படத்தை இயக்கி வெளியிட்டார். அதில் பழம்பெரும் நடிகர் டாம் ஹாங்க்ஸ் நடித்திருந்தார். அவரது சிறந்த நடிப்பிற்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தது. அப்படி ஒரு திரைப்படம் உருவாவதற்கு அடிப்படையாக இருந்தவர் இரான் நாட்டைச் சேர்ந்த மெஹ்ரன் கரிமே நசீரி.

இவர் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் உள்ள சார்லஸ் டீ கலே (Charles de Gaulle) என்கிற விமான நிலையத்திலேயே 18 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வந்தார்.

Mehran Karimi Nasseri
”மாடலிங் வேண்டாம்” : உலகின் "மிக அழகான காவலர்" என்று அழைக்கப்படும் டயானா - யார் இவர்?

18 ஆண்டுகளாக விமான நிலையத்தில் வாழ்ந்தார்:

கடந்த சனிக்கிழமை அதே விமான நிலையத்தில் 2 எஃப் டெர்மினலில் நண்பகல் நேரத்தில் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக பாரிஸ் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மெஹ்ரன் கரிமே நசீரிக்கு மாரடைப்பு ஏற்பட்ட உடனேயே காவல்துறையினர் மற்றும் மருத்துவர்கள் விரைந்து சென்று முதலுதவி செய்த போதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

மெஹ்ரன் கரிமே நசீரி, கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை பாரீஸ் நகர விமான நிலையத்தில் வாழ்ந்து வந்தார். இவர் தன்னை ஒரு பிரிட்டன் நாட்டு பிரஜை என்று கூறிக் கொண்டாலும், இரான் நாட்டில் உள்ள குஷிஸ்தான் மாகாணத்தில் 1945 ஆம் ஆண்டு பிறந்திருக்கலாம் என 'தி கார்டியன்' பத்திரிக்கை கூறுகிறது.

பாஸ்போர்ட் முடக்கம்:

முதலில் பல்வேறு சட்ட சிக்கல்களால் பாரிஸ் நகர விமான நிலையத்தில் வாழ்ந்து வந்த மெஹ்ரன் கரிமே நசீரி, பிறகு பாரிஸ் நகர விமான நிலையத்துக்கு அருகில் உள்ள ஒரு விடுதியிலும், ஒரு அறுவை சிகிச்சைக்காக சிறிது நாட்கள் மருத்துவமனையிலும், வீடற்றவர்களுக்கான இல்லத்தில் சிறிது நாட்களும் வாழ்ந்து வந்தார். தி டெர்மினல் படத்தை எடுப்பதற்காக ஹாலிவுட் இவருக்கு ஒரு கணிசமான தொகையை வழங்கியதும் இங்கு நினைவு கூறத்தக்கது.

மெஹ்ரன் கரிமே நசீரி குறித்து கடந்த 2004 ஆம் ஆண்டு ஆண்ட்ரூவ் டான்கின் என்கிற பிரிட்டன் எழுத்தாளர் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை எழுதி உள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இளம் வயதிலேயே, பிரிட்டனில் படித்த மெஹ்ரன் கரிமே நசீரி, இரானில் ஷா அரச குடும்பத்திற்கு எதிரான கிளர்ச்சியில் பங்கெடுத்த காரணத்தால் பாஸ்போர்ட் முடங்கியது. 1981 ஆம் ஆண்டு பெல்ஜியம் நாடு இவருக்கு அகதி அந்தஸ்தை வழங்கியது.

Mehran Karimi Nasseri
Amou Haji: உலகின் அழுக்கான மனிதர் காலமானார்! பல வருடங்கள் குளிக்காமல் இருந்தது ஏன்?

தாயை தேடிய பயணம்:

ஈரான் நாட்டைச் சேர்ந்த தந்தைக்கும், ஸ்காட்லாந்தை சேர்ந்த ஒரு செவிலியர் தாய்க்கும் தான் பிறந்த விஷயம் தெரியவந்த போது, பிரிட்டனில் உள்ள தன் தாயைத் தேடிக் கண்டுபிடிக்க விரும்பினார்.

எனவே ஒரு கட்டத்தில் தன்னுடைய அடையாளங்களை உறுதிப்படுத்தும் எல்லா ஆவணங்களையும் களைந்து விட்டு இங்கிலாந்துக்குச் செல்லும் கப்பலில் பிரட்டனுக்குள் நுழைய முயன்றார். ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லாததால் ஒவ்வொரு முறையும் பிரிட்டனால் தடுத்து நிறுத்தப்பட்டு பெல்ஜியம் நாட்டுக்கு அல்லது பிரான்ஸ் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

ஒரு கட்டத்தில் பிரிட்டன் நாட்டில் உள்ள தன் தாயைத் தேடும் பணியை கைவிட்டு, பாரிஸ் நகரத்தில் உள்ள சார்லஸ் டி கலே விமான நிலையத்திலேயே வசிக்க தொடங்கினார். அப்போது 1988 ஆகஸ்ட் மாதம். ஒரு அகதியாக பிரான்ஸ் நாட்டு மண்ணில் மெஹ்ரன் கரிமே நசீரி நுழைந்திருப்பதால் அவரைத் திருப்பி அனுப்ப முடியாது என பிரான்ஸ் நாட்டின் நீதிமன்றம் 1992ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

ஈரானிய அடையாளங்கள் வேண்டாம்:

தன் இரானிய பாரம்பரிய அடையாளங்களை துறந்த மெஹ்ரன் கரிமே நசீரி, தன்னை ஒரு பிரிட்டிஷ் குடிமகனாகவே கருதினார். பிரான்ஸ் நாடு மற்றும் பெல்ஜியம் நாடு அவருக்கு குடியுரிமை வழங்க முன்வந்த போதும் அதை ஏற்க மறுத்தார், குடியுரிமை அலுவலக ஆவணங்களில் கையெழுத்திடவில்லை.

தன் வாழ்நாளில் பெரும்பாலான நேரத்தை பாரிஸ் நகரத்தில் உள்ள சார்லஸ் டி கலே விமான நிலையத்தில், கீழ் தளத்தில் வைக்கப்பட்டிருந்த சிவப்பு நிற பெஞ்சிலேயே கழித்த மெஹ்ரன் கரிமே நசீரி, எவரிடமிருந்து நன்கொடைகளையோ, பரிசுப் பொருட்களையோ பெறவில்லை. அவ்வப் போது விமான நிலைய அதிகாரிகளிடமிருந்து உணவுக் கூப்பன்களைப் பெற்றுக் கொண்டார் என்கிறது தி கார்டியன் வலைதளம். பாசப் போராட்டம் நடத்திய, ஆராவாரமில்லாமல் தேசங்களைத் துறந்த மெஹ்ரன் கரிமே நசீரி, சத்தமின்றி கடந்த சனிக்கிழமை தன் உயிரையும் துறந்தது, டெர்மினல் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

Mehran Karimi Nasseri
varisu : ரஞ்சிதமே பாடலில் கவனம் ஈர்த்த குரல் - யார் இந்த மானசி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com