Donald Trump: அமெரிக்க முன்னாள் அதிபர் கைதுக்கு காரணமான இந்த ஸ்டார்மி டேனியல்ஸ் யார்?

இந்த விஷயத்தை பற்றி வாய்திறக்காமல் இருக்க 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் பரப்புரையின் போது டிரம்ப்பின் வழக்கறிஞர் மைக்கல் கோஹென் தனக்கு 130,000 டாலர்கள் பணம் கொடுத்ததாகவும் நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் கூறினார்.
Donald Trump: அமெரிக்க முன்னாள் அதிபர் கைதுக்கு காரணமான இந்த ஸ்டார்மி டேனியல்ஸ் யார்?
Donald Trump: அமெரிக்க முன்னாள் அதிபர் கைதுக்கு காரணமான இந்த ஸ்டார்மி டேனியல்ஸ் யார்?ட்விட்டர்
Published on

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் அதிபர் பதவியிலிருந்தவர் கைது செய்யப்படுவது வரலாற்றில் இதுவே முதன்முறை.

டிரம்ப் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டாலும், அவர் கைது செய்யப்பட முக்கிய காரணம் நீலப் பட நடிகையான ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்த விவகாரத்தை மறைக்க நினைத்தது தான்.

தனக்கும் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் இருந்த ‘திருமணம் மீறிய உறவு’ குறித்து வெளியில் சொல்லாமல் இருக்க டிரம்ப் தரப்பு பணம் கொடுத்ததாக நடிகை வெளியிட்ட தகவலால் தான் கைது செய்யப்படும் அளவுக்கு பூகம்பமாக வெடித்தது இந்த பிரச்னை.

trump
trump

டிரம்ப் மீதான குற்றச்சாட்டு என்ன?

அதிபர் டிரம்ப் மீது 34 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. நியூயார்க் தண்டனைச் சட்டப் பிரிவு 175 இன் கீழ் வணிகப் பதிவுகளை பொய்யாக்கியதற்காக டிரம்ப் மீது 34 குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

அவை அனைத்துமே ஆபாசப்பட நடிகைக்கு 130,000 டாலர் பணம் வழங்கப்பட்ட விவகாரத்துடன் தான் இணைகிறது என்கிறது பிபிசி தளத்தின் அறிக்கை.

நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் கைது செய்யப்பட்ட டிரம்ப், சுமார் 57 நிமிடங்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார்.

அப்போது அவர் தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். விசாரணை முடிவடைந்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் டிரம்ப்.

டொனால்ட் டிரம்ப்: முன்னாள் அமெரிக்க அதிபர் கைது செய்யப்பட்டால் என்னவெல்லாம் நடக்கும்?

Donald Trump: அமெரிக்க முன்னாள் அதிபர் கைதுக்கு காரணமான இந்த ஸ்டார்மி டேனியல்ஸ் யார்?
விக்டோரியா மகாராணியின் இந்திய காதல்? யார் இந்த அப்துல் கரீம் - ரகசிய வரலாறு

நடிகை வெளியிட்ட தகவல்

கடந்த 2006ஆம் ஆண்டு வாக்கில் தனக்கும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கும் திருமணம் மீறிய உறவு இருந்ததாக ஆபாசப்பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் கூறினார்.

இந்த விஷயத்தை பற்றி வாய்திறக்காமல் இருக்க 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் பரப்புரையின் போது டிரம்ப்பின் வழக்கறிஞர் மைக்கல் கோஹென் தனக்கு 130,000 டாலர்கள் பணம் கொடுத்ததாகவும் நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் கூறினார்.

குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட வழக்கறிஞர் கைது செய்யப்பட்டாலும், டிரம்ப் எந்தவித பிரச்னையுமின்றி தப்பித்திருந்தார், ஆனால் தற்போது அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யார் இந்த ஸ்டார்மி டேனியல்ஸ்?

ஸ்டார்மி டேனியல்ஸின் நிஜப் பெயர் ஸ்டெஃபனி க்ளிஃபார்ட். இவர் பேடன் ரூஜ், லூசியானன் என்ற இடத்தில் பிறந்தவர். இவரை இவரது தாயார் தான் வளர்த்தார். ஸ்டார்மிக்கு 9 வயது இருந்தபோது, அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார்.

பத்திரிகையாளர் ஆகவேண்டும் என்றிருந்த ஸ்டெஃபனி, 17 வயதிருக்கும்போது ஸ்ட்ரிப் கிளப் ஒன்றில் தன் தோழியை சந்தித்தார்.

பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியிருந்த ஸ்டார்மி, தானும் அந்த கிளப்பில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். அதன் பிறகு அவர் பல கிளப்களில் பணியாற்றினார். கிளப்பில் இணைந்த பிறகு தனது பெயரையும் மாற்றிக்கொண்டார்.

மெல்ல ஆபாசப்பட நடிகையாக உருவெடுத்த ஸ்டார்மி டேனியல்ஸ், சில படங்களை இயக்கியும் உள்ளார். நீலப்படங்களில் நடிப்பதையும் தாண்டி, ஹாலிவுட் படங்கள், டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இவரை அங்கீகரிக்கும் விதமாக வெஸ்ட் ஹாலிவுட் மே 23ஆம் தேதியை ஸ்டார்மி டேனியல்ஸ் தினமாக அறிவித்தது.

Donald Trump: அமெரிக்க முன்னாள் அதிபர் கைதுக்கு காரணமான இந்த ஸ்டார்மி டேனியல்ஸ் யார்?
ராகுல் காந்தி : "மன்னிப்பு கேட்கப்போவதில்லை, என் பெயர் சாவர்கர் அல்ல" - என்ன பேசினார்?

நடிகையின் சுய சரிதை

டிரம்ப் உடனான தனது உறவுக் குறித்து நடிகை ஸ்டார்மி 60 மினிட்ஸ் என்ற தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். 2006 ஆம் ஆண்டு இவர்கள் சந்தித்துக்கொண்டதாகவும், டிரம்ப் தனக்கு நடிக்க வாய்ப்பளித்தாகவும் அவர் அப்பேட்டியில் கூறினார்.

அப்போது தான் அவர்கள் இருவரும் உடலுறவு வைத்துக் கொண்டதாக நடிகை தெரிவித்தார். அதன் பிறகு ஒரு முறை பார்ட்டி ஒன்றிற்கு டிரம்ப் தன்னை அழைத்ததாக தனது சுய சரிதை புத்தகமான “Full Disclosure”ல் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தான் டிரம்ப்புடன் உறவு வைத்திருந்த விவகாரத்தை வெளியில் சொன்னதை அதிபர் டிரம்ப் மறுத்திருந்தார். இதனை தொடர்ந்து 2018ல் அவர் மீது அவதூறு வழக்கு தொடுத்தார் ஸ்டார்மி.

இதனால் தான் ஒருவரால் மிரட்டப்பட்டதாகவும், அந்த நபர் பார்க்க எப்படியிருந்தார் என்ற உருவப்படத்தையும் நடிகை வெளியிட்டிருந்தார்

தற்போது நடிகைக்கு பணம் கொடுத்து அதனை மறைத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டிரம்ப், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

மேலும், “நான் நிரபராதி, அமெரிக்காவில் இப்படி நடக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

நாடு நரகத்திற்கு போகிறது. நான் செய்த ஒரே குற்றம், நம் நாட்டை அழிக்க நினைப்பவர்களுக்கு எதிராக அச்சமின்றி பாதுகாத்தது தான்” என கூறியுள்ளார்

Donald Trump: அமெரிக்க முன்னாள் அதிபர் கைதுக்கு காரணமான இந்த ஸ்டார்மி டேனியல்ஸ் யார்?
Zoho: “எனது சொத்துகளை ஏமாற்றி எடுத்துக்கொண்டார்” ஸ்ரீதர் வேம்பு மீது மனைவி குற்றச்சாட்டு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com