கம்போடியா அங்கோர் வாட்: பிரமிக்க வைக்கும் பொக்கிஷம் - சோழ மன்னர்கள் கட்டியதா?

அங்கோர் வாட் மற்றும் அதன் துணை நகரங்கள், கோவில்கள், நீர்த்தேக்கங்கள், மொட்டை மாடிகள், குளங்கள் மற்றும் அரண்மனைகள் 21 ஆம் நூற்றாண்டின் சுற்றுலாப் பயணிகளை காந்தம் போல ஈர்க்கும் அம்சமாக இருக்கிறது. இன்றும் உலகெங்கும் இலட்சக்கணக்கான மக்கள் அங்கோர் வாட் கோவில் நகரத்தைப் பார்க்க வருகின்றனர்.
Angor Wat
Angor WatNews Sense

ஆன்டோனியோ டா மாடலேனா என்பவர் போர்ச்சுக்கீசிய நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்க மத ஊழியர் ஆவர். இவர் இன்று வடக்கு கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் என்ற நினைவுச் சின்னம் மற்றும் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்து-பௌத்த கோவிலுக்கு வந்த முதல் மேற்கத்தியப் பார்வையாளர்களில் ஒருவர்.

அங்கோர் கோவில் நகரத்தைக் கண்டுபிடித்த போர்ச்சுகீசியர்கள்

இந்தக் கோவில் ஒரு "அசாதாரணமான கட்டுமானம்", என்று அவர் 1589 இல் வரலாற்றாசிரியர் டியோகோ டூ குடோவிடம் கூறினார். "இது ஒரு பேனாவால் எழுதி விவரிக்க முடியாத அளவுக்கு அழகானது, இதற்கு ஒப்பான வேறு எந்த கட்டிடமும் உலகில் இல்லை. இதன் கோபுரங்கள் மற்றும் அலங்காரங்கள் அனைத்தும் மனித மேதைகள் கற்பனை செய்யக்கூடிய அனைத்தையும் உள்வாங்கியிருக்கிறது.” என்று வியந்தார்.

மாடலேனாவின் வருகையின் போது, ​​அங்கோர் மற்றும் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட அதன் கோவிலைக் கட்டிய வலிமைமிக்க கெமர் பேரரசு ஒரு காலத்தில் வீழ்ச்சியடைந்தது. மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு, அங்கோரில் இந்தக் கோவிலைக் கண்ட ஐரோப்பியர்கள் குழப்பமடைந்தனர். ஹென்றி மௌஹவுட், 1861 இல் இங்கு இறந்த ஒரு இளம் பிரெஞ்சு இயற்கையியலாளர் மற்றும் ஆய்வாளர் ஆவார். அவரது எழுத்துக்கள், அவர் மரணத்திற்குப் பின் வெளியிடப்பட்டன. அந்த எழுத்துக்கள் தொலைந்துபோன பண்டைய நாகரிகத்தை கம்போடியாவில் ஆய்வு செய்வதற்கு, நவீன தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் முயற்சிகளை ஊக்குவித்தன.

Angkor Wat
Angkor WatTwitter

"இந்தக் கோவில்களில் ஒன்று - பைபிளில் கிமு முதல் நூற்றாண்டில் வரும் அரசன் சாலமோனுக்குப் போட்டியாக, சில பழங்கால மைக்கேலேஞ்சலோவால் கட்டப்பட்டிருக்கிறது. நமது மிக அழகான கட்டிடங்களின் வரிசையில் ஒரு கெளரவமான இடத்தை இந்த கோவிலுக்கு வழங்கலாம்" என்று அவர் எழுதினார். "இது கிரீஸ் அல்லது ரோம் எங்களுக்கு விட்டுச் சென்ற எதையும் விட பெரியது.," என்றார்.

கோவில்கள் மற்றும் அரண்மனைகள் சுமார் 500 ஏக்கர் (2 சதுர கிமீ) பரப்பளவில் பரவியிருப்பதை இறந்து போன பிரெஞ்சு ஆய்வாளர் மௌஹவுட்டுக்கு நினைத்துப் பார்க்க முடியாததாகத் தோன்றியது. ஆனால், அது 802 இல் நிறுவப்பட்ட அவர்களது பேரரசின் உச்சக்கட்டத்தில், 1431 இல் வீழ்ந்தது. எஞ்சியிருந்த கெமர் இராச்சியத்தின் இருப்பு இன்று கம்போடியாவின் தலைநகரான புனோம் பென்னுக்கு மாற்றப்பட்டது.

Angkor Wat
Angkor WatTwitter

காணாமல் போன மகேந்திரபர்வதம்

அங்கோர் வாட் மற்றும் அதன் துணை நகரங்கள், கோவில்கள், நீர்த்தேக்கங்கள், மொட்டை மாடிகள், குளங்கள் மற்றும் அரண்மனைகள் 21 ஆம் நூற்றாண்டின் சுற்றுலாப் பயணிகளை காந்தம் போல ஈர்க்கும் அம்சமாக இருக்கிறது. இன்றும் உலகெங்கும் இலட்சக்கணக்கான மக்கள் அங்கோர் வாட் கோவில் நகரத்தைப் பார்க்க வருகின்றனர்.

1960 களில் நாசா உருவாக்கிய தரை உணர்திறன் ரேடாரைப் பயன்படுத்தி 2007 ஆம் ஆண்டு முதல் டாமியன் எவன்ஸ் மற்றும் ஜீன்-பாப்டிஸ்ட் செவான்ஸ் ஆகியோரால் நடத்தப்பட்ட தடயவியல் வான்வழி வரைபடம் அங்கோர் வாட் பற்றிய ஒரு சித்திரத்தை வழங்கியது. அங்கோர் வாட் என்பது ஜெர்மனியின் பெர்லின் நகர அளவுக்கு பெரிய நகரத்தின் மையமாக இருந்தது என்பதை இப்போது நாம் அறிவோம். ஜெயவர்மன் VII (1181-1218) ஆட்சியின் போது அதன் உச்சத்தில், அங்கோர் வாட் மிகப்பெரிய பேரரசின் வலிமைமிக்க இதயமாக இருந்தது.

கோவில் சிலைகள்
கோவில் சிலைகள்Pixabay

2012 ஆம் ஆண்டில், சிட்னி பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் துறையின் ஆசிரிய உறுப்பினரும், கிரேட்டர் அங்கோர் திட்டத்தின் நிறுவன உறுப்பினரும் துணை இயக்குநருமான எவன்ஸ் மற்றும் தொல்பொருள் ஆய்வாளரான செவன்ஸ் ஆகியோர் காணாமல் போன புதிய நகரம் ஒன்றைக் கண்டுபிடித்தனர். அது புனோம் குலென் பீடபூமியில் இருக்கும் மகேந்திர பர்வதம்தான் அந்த 'இழந்த நகரம்'. அங்கோர் நகருக்கு வடக்கே இருபத்தைந்து மைல் தொலைவில் உள்ள இந்த திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரம் பல நூற்றாண்டுகளாகக் காடுகளால் மறைக்கப்பட்டிருந்தது.

இது 802 ஆம் ஆண்டில் மன்னர் இரண்டாம் ஜெயவர்மன் என்பவரால் நிறுவப்பட்டது. இது அங்கோர் மற்றும் அதன் பெரிய கோவிலின் 'வார்ப்புரு' ஆகும். 2012 முதல், எவன்ஸ் மற்றும் செவான்ஸ் போன்ற ஆய்வாளர்கள் முதலில் நினைத்ததை விட மகேந்திரபர்வதா இன்னும் பெரிதென நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர்களில் பொருத்தப்பட்டு, கீழே உள்ள தரை வழியாகப் பார்க்கும், வயல்கள் மற்றும் காடுகள் என அனைத்துத் தெருக்களையும் கட்டிடங்களையும் அடையாளம் காணும் வான்வழி லேசர் ஸ்கேனிங்கின் ஒரு வடிவமான லிடருக்கு மட்டுமே இந்த நகரத்தின் கண்டுபிடிப்பு சாத்தியமானது. சமீப காலம் வரை விலையுயர்ந்த தொழில்நுட்பம் இப்போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்குக் கிடைக்கிறது.

கோவில் சிலைகள்
கோவில் சிலைகள்Twitter

கம்போடியாவில் இது போன்ற கண்டுபிடிப்புகள் சில ஆண்டுகளுக்கு முன்பு சாத்தியமாக இருக்கலாம். ஆனால் 1998 வரை புனோம் குலேம் நகரம் போல் பாட் மற்றும் அவரது கொலைகார கெமர் ரூஜ் ஆகியோரின் கடைசி புகலிடமாக இருந்தது. 1975 முதல் 1979 வரை நாட்டை ஆட்சி செய்த கம்யூனிஸ்ட் அமைப்புதான் கேமரூஜ். கேமரூஜ் ஆட்சியில் பட்டினி, வறட்சி, பசியால் 20 இலட்சம் மக்கள் மரணமடைந்தனர். இன்றும் கண்ணிவெடிகளால் அப்பகுதி அபாயகரமாக இருக்கிறது.

மகேந்திர பர்வதத்தின் கண்டுபிடிப்பு ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக இருந்ததால் அங்கோர் வாட் கோவிலின் முழு பரிமாணத்தை வெளிக்கொணர்வது சாத்தியமானது. தாமரை மொட்டுக் கோபுரங்கள், முற்றங்கள் மற்றும் காட்சியகங்கள், போர்வீரர்கள், மன்னர்கள், போர்கள் மற்றும் மூவாயிரம் சொர்க்க பெண் கடவுள்கள் ஆகியவற்றைக் கொண்ட அதன் அகழி கோயிலிலிருந்து, இவை அனைத்தும் முப்பத்தேழு ஆண்டுகளில் 3,00,000 தொழிலாளர்கள் மற்றும் 6,000 யானைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று கல்வெட்டுகள் கூறுகின்றன. புனோம் குலனில் இருந்து கீழே இருக்கும் மில்லியன் கணக்கான மணற்கல் அடுக்குகள், அங்கோர் வரை பல மைல்களுக்கு நீண்டுள்ளது.

Angor Wat
KGF சொல்லும் எல் டொராடோ : தங்க நகரம் உண்மையில் இருந்ததா? - சாகச வரலாறு
சுற்றுலா பயணிகள்
சுற்றுலா பயணிகள்Twitter

அந்தக் காலத்திலேயே பிரமிப்பூட்டும் நகர்ப்புற திட்டமிடல்

கெமர் நகரங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. எனவே அங்கோர் "கட்டமைக்கப்பட்ட" பகுதி இன்று எவற்றையும் விட பெரியதாகத் தெரிகிறது. வெறுங்காலுடன் 16 ஆம் நூற்றாண்டின் போர்த்துகீசிய ஆய்வாளர்களால் கண்டுபிடிக்க முடிந்தது. எவன்ஸ் மற்றும் செவான்ஸ் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மகத்தான மற்றும் சிக்கலான நீர்ப்பாசன அமைப்பு அங்கோர்க்கு உணவை வழங்கியது நம்மைப் பிரமிக்க வைக்கிறது. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அங்கோர் தனது வளர்ச்சியாலேயே தன்னை பராமரிக்க முடியாமல் போனது.

எளிமையாகச் சொன்னால், இன்று உலகெங்கிலும் உள்ள பல நவீன நகரங்களைப் போல அங்கோர் தன்னை மிகைப்படுத்திக் கொண்டது. கெமர் பேரரசின் வீழ்ச்சியை விரைவுபடுத்தியது. ஆட்சியாளர்கள் மற்றும் நகரங்களின் ஆதிக்கம், மக்கள்தொகை பெருக்கம், நீடித்த காடழிப்பு, மேல் மண்ணின் சீரழிவு மற்றும் நீர்ப்பாசன முறையின் அதிகப்படியான வேலை ஆகியவை நகரம் தத்தளிப்பதற்குக் காரணமானது. இது போக நகரைப் பராமரிக்க பெரும் பணியாளர்கள் தேவைப்படுவார்கள்.

ஒவ்வொரு 15 கிமீ (9 மைல்) தொலைவிலும் ஒய்வில்லங்கள் அமைந்திருந்தன. மற்றும் அரசர் ஜெயவர்மன் VII ஆல் மருத்துவமனைகளும் கட்டப்பட்டன. கெமர் பேரரசின் நம்பிக்கை மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த நகரம் அமைக்கப்பட்டிருந்தது.

Angor Wat
இன்கா நாகரிகம்: துரோகத்தால் வீழ்ந்த ஒரு பெரும் நாகரிகத்தின் வரலாறு

சுற்றுலா பயணிகள்

அங்கோர் இன்று உலக மக்களுக்கு Lara Croft: Tomb Raider (2001) திரைப்படத்தின் மூலம் தெரிய வந்தது. அதன் பிறகு படையெடுப்பால் அல்ல மாறாக வெகுஜன சுற்றுலா மூலம் அங்கோருக்கு ஆபத்து வந்திருக்கிறது.ஏற்கனவே, புதிய 'ஆடம்பர' குளிரூட்டப்பட்ட சுற்றுலா ஹோட்டல்கள், நீச்சல் குளங்கள், சூடான தொட்டிகள் மற்றும் ஸ்பாக்கள், ஒரு காலத்தில் சிறிய பிரெஞ்சு காலனித்துவ நகரமான சியெம் ரீப்பில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் இந்த வழியாகச் செல்லும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தண்ணீரைப் பயன்படுத்துவதால் மணல் மண்ணின் கீழ் உள்ள பகுதியின் நீர்நிலை அச்சுறுத்தப்படுகிறது. அதன் சரிவு 12 ஆம் நூற்றாண்டு கோயிலின் கற்களைச் சேதப்படுத்துகிறது; இதற்கிடையில், பார்வையாளர்கள் தங்களைப் புகைப்படம் எடுத்து தங்கள் மொபைல் ஃபோன்களில் கத்துகிறார்கள்.

லேசர்-மேப்பிங் தொழில்நுட்பம் மிகவும் எளிதாகக் கிடைப்பதால், அங்கோர் வாட் நோக்கிச் செல்லும் மில்லியன் கணக்கானவர்களில் சிலரை கம்போடியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் வேறு இடங்களுக்குத் திருப்பத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உதவக்கூடும். அப்படியிருந்தும், அங்கோர் வைத்திருப்பது உலகிலேயே மிகப் பெரிய கோவிலாகும். -மேலும் அது இன்னும் புதிராகவே உள்ளது.

12 ஆம் நூற்றாண்டில் இவ்வளவு பெரிய நகரம், கோவிலை எப்படிக் கட்டினார்கள் என்பதுதான் அந்தப் புதிர். இன்று புராதான தொன்மை வாய்ந்த அந்த இடத்தை பாதுகாப்பாதும் அதன் மதிப்பை உணர்வதும் மக்களாகிய நமது கடமை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Angor Wat
பூடான்: ஒரு புதிரான தேசத்தின் பிரமிக்க வைக்கும் வரலாறு

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com