உலகின் தடைசெய்யப்பட்ட இடங்கள்: சுற்றுலா பயணிகள் வர கூடாது - மறைந்திருக்கும் மர்மம் என்ன?

எப்போதுமே நம்மில் பலருக்கும் மர்மத்தின் மீது, யாரும் செல்ல கூடாது என்று சொல்லும் இடங்களுக்கு செல்ல, அதிக ஆர்வம் இருக்கும். அப்படி உலகெங்கிலும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடைசெய்யப்பட்ட பல இடங்களை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.
Forbidden Place that you cannot visit
Forbidden Place that you cannot visitTwitter
Published on

பயணம் செய்வதில் கிடைக்கும் சந்தோஷமும் மன அமைதியும் வேறு எதிலும் கிடைக்காது. பயண காதலர்கள், தற்போது மர்மமான இடங்களை தேடி தேடி பார்த்து வருகின்றனர்.

எப்போதுமே நம்மில் பலருக்கும் மர்மத்தின் மீது, யாரும் செல்ல கூடாது என்று சொல்லும் இடங்களுக்கு செல்ல, அதிக ஆர்வம் இருக்கும்.

அப்படி உலகெங்கிலும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடைசெய்யப்பட்ட பல இடங்களை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

அவை ஆபத்தானவை அல்லது பிற வித்தியாசமான காரணங்களுக்காக தடைசெய்யப்பட்டவையாக இருக்கின்றன. இந்த இடங்கள் மர்மங்களால் மறைக்கப்பட்டுள்ளதா? என்னென்ன இடங்கள்? இங்கு தெரிந்து கொள்ளலாம்.

வடக்கு சென்டினல் தீவு, இந்தியா

சென்டினலீஸ் பழங்குடியினரின் தாயகம், அந்தமானில் உள்ள அழகான வடக்கு சென்டினல் தீவு, நீங்கள் ஒருபோதும் பார்க்கக்கூடாத தடைசெய்யப்பட்ட தீவுகளில் ஒன்றாகும்.

இங்குள்ள மக்கள் இன்னும் நவீன உலகத்தால் ஈர்க்கப்படவில்லை என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்

அவர்களுக்கு மொபைல் போன் அல்லது இணையம் பற்றி தெரியாது. சுருக்கமாகச் சொன்னால், அவர்களுக்கு வெளி உலகத்தைப் பற்றி எதுவும் தெரியாது.

தீவுக்கு வந்த பார்வையாளர்கள் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு.

பாம்பு தீவு, பிரேசில்

பிரேசிலில் உள்ள இந்த தீவில் ஆயிரக்கணக்கான கொடிய பாம்புகள் உள்ளன.

இந்த பாம்புகளுக்காக நீங்கள் பயப்படாமல் இருக்கலாம். ஆனால் அங்கு சென்றால் ஒரு நாள் கூட உயிருடன் இருக்க முடியாது. அவ்வளவு கொடிய பாம்புகள் இங்கு இருப்பதாக கூறப்படுகிறது.

மக்கள் இந்த தீவுக்குச் செல்வதை பிரேசில் அரசாங்கம் சட்டவிரோதமாக்கியுள்ளது. பதிவுகளின்படி, இங்கு தோராயமாக 4000 பாம்புகள் இருப்பதாக கணிக்கப்படுகிறது.

சர்ட்சி தீவு, ஐஸ்லாந்து

இது ஐஸ்லாந்தின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு.

சமீபத்தில் உலகில் உருவான புதிய தீவாக இது புகழ் பெற்றது. தற்போதைய நிலவரப்படி, சில புவியியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் மட்டுமே அதன் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.

மேலும் சுற்றுலாப் பயணிகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், தீவில் தற்போது நடந்து வரும் சுற்றுச்சூழல் காரணமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து எரிமலை வெடிப்பு நிகழ்கிறது.

Forbidden Place that you cannot visit
சீனா : மிகப்பெரிய கோடீஸ்வரரை 13 ஆண்டுகள் சிறையில் அடைத்த அரசு - உடையும் மர்மம்

ஐஸ் கிராண்ட் ஆலயம், ஜப்பான்

ஜப்பான் ஏறத்தாழ 8000 ஆலயங்களை கொண்டுள்ளது. ஜப்பானில் உள்ள அனைத்து ஆலயங்களை விட ஐஸ் கிராண்ட் ஆலயம் மிக முக்கியமான மற்றும் விலை உயர்ந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?

8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஷின்டோ மரபுகளைப் பராமரிக்க ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்குப் பிறகும் கோயில் மீண்டும் கட்டப்படுகிறது. இங்கு அரச குடும்பத்தைச் சேர்ந்தவராக இல்லாவிட்டால், சன்னதிக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டீர்கள் என்று கூறப்படுகிறது.

டூம்ஸ்டே வால்ட், நார்வே

இது ஆர்க்டிக் ஸ்வால்பார்ட் தீவுக்கூட்டத்தின் மையத்தில் அமைந்துள்ள ஒரு விதை வங்கி.

இது பலவகையான தாவர விதைகளைப் பாதுகாக்கப் பயன்படும் பாதுகாப்பு பெட்டகமாக செயல்படுகிறது. உலகளவில் நெருக்கடி அல்லது பேரழிவு ஏற்பட்டால் விதைகளைப் பாதுகாக்கும் முயற்சியில் பெட்டகம் கட்டப்பட்டுள்ளது.

நீண்ட கால சேமிப்பிற்காக உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் விதை பெட்டிகள் பெட்டகத்திற்கு அனுப்பப்படுகின்றன. இது குறிப்பிட்ட நாட்களில் சிறப்பு விருந்தினர்களுக்கு மட்டுமே திறக்கப்படும். சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

கின் ஷி ஹுவாங்கின் கல்லறை, சீனா

இது சீனாவின் முதல் பேரரசர் கின் ஷி ஹுவாங்கின் கல்லறை ஆகும், இது 2000 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பிரமிட்டின் கீழ் ஆழமாக புதைக்கப்பட்டது. அதன் கண்டுபிடிப்பு உலகின் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த தலம் வரலாற்றாசிரியர்களுக்கும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கும் மர்மமாக உள்ளது. அறிக்கைகளின்படி, கல்லறையின் உள்ளடக்கங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது, ஆய்வுகள் கூட செய்யப்படவில்லை.

சீன அரசு தனது அகழ்வாராய்ச்சியை நிறுத்தியுள்ளது. மேலும் அந்த இடத்தை யாரும் பார்வையிட அனுமதிக்கப்படவில்லை. இதற்கான காரணம் இன்றும் மர்மமாகவே இருக்கிறது.

Forbidden Place that you cannot visit
கடலில் மூழ்கிய போர்கப்பல் : 300 ஆண்டுகளுக்கு பிறகு விலகிய மர்மம் - ஒரு Adventure ஸ்டோரி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com