Twitter: பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியருக்கு பரிசளித்த நிறுவனம் - என்ன காரணம்?

அந்த வகையில் டிவிட்டர் நிறுவனம் அதன் ஊழியருக்கு நினைவு பரிசை கொடுத்துள்ளது. ஆனால் அந்த ஊழியரை சில தினங்களுக்கு முன்னர் தான் நிறுவனம் வேலையிலிருந்து நீக்கியுள்ளது.
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியருக்கு பரிசளித்த நிறுவனம்
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியருக்கு பரிசளித்த நிறுவனம்twitter
Published on

டிவிட்டரில் பணியாற்றி பத்து வருடங்களை நிறைவு செய்ததற்காக நிறுவனம் அதன் ஊழியருக்கு நினைவு பரிசை கொடுத்துள்ளது. ஆனால் அந்த ஊழியரை சில தினங்களுக்கு முன்னர் தான் நிறுவனம் வேலையிலிருந்து நீக்கியுள்ளது.

எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதிலிருந்து, டிவிட்டரை பற்றி நாம் பேசாத நாளில்லை. ஊழியர்கள் பணி நீக்கம், முக்கியமாக இந்தியக் குழுக்களின் நீக்கம், அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளுக்கு மாத சந்தா என தினம் ஒரு புதிய செய்தி வந்துக்கொண்டிருக்கிறது.

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியருக்கு பரிசளித்த நிறுவனம்
கூகுளில் அதிகம் தேடப்பட்ட "How To Delete Twitter?" - மஸ்க் தான் காரணமா?

அந்த வகையில் டிவிட்டரில் பணியாற்றி பத்து ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக நிறுவனம் ஒரு ஊழியருக்கு நினைவு பரிசை வழங்கியுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த ஊழியரை பணி நீக்கம் செய்து சில நாட்கள் தான் ஆகியிருக்கிறது.

எலன் ஃபிலாடெல்ஃபோ என்ற அந்த பெண் டிவிட்டரில் மேலாளராக பணியாற்றி வந்தவர். அவர் தனக்கு நிறுவனத்திலிருந்து வந்திருந்த பரிசையும், கடிதத்தையும் டிவிட்டரில் பகிர்ந்திருந்தார்.

அந்த கடிதத்தில், "Happy Twitterversary! ஒரு மிகப் பெரிய ட்வீப் மைல்கல்லை கடந்து வந்ததற்கு வாழ்த்துக்கள். இந்த வருடம் நீங்கள் ஆற்றப்போகும் சாகசங்களை பார்க்க நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம் #OneTeam" என்று எழுதியிருந்தது.

எலன் இதனை "இன்று ஒரு சிறப்பு டெலிவரி வந்தது எனக்கு" என்று தலைப்பிட்டு பகிர்ந்திருந்தார்.

இந்த பதிவு சற்று நகைச்சுவையாக இருந்தாலும், எலான் மஸ்க் எடுத்த பணி நீக்கம் என்ற நடவடிக்கை பலருக்கு அதிர்ச்சியானதாகவே இருக்கிறது. வேலை போனவர்கள் ஒரு பக்கம் வருத்ததிலிருந்தால், பணியில் இருப்பவர்களுக்கு வேலை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.

எலான் மஸ்க் நிர்ணயித்துள்ள இலக்குகளை முடிக்க வாரம் 7 நாட்களும், 12 மணி நேரம் பணியாற்றவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர் டிவிட்டரில் எஞ்சியிருக்கும் ஊழியர்கள்.

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியருக்கு பரிசளித்த நிறுவனம்
Twitter: இந்தியில் ட்வீட் செய்யும் எலான் மஸ்க்; குழப்பத்தில் இணையவாசிகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com