கணவரா? தோழியா? - கல்யாணத்தில் கலாட்டா - கலங்கிய மணப்பெண்

தனது தோழியின் திருமணத்திற்கு வந்திருந்த பெண் ஒருவர், மணமகனிடம் கடுமையாக நடந்துகொண்டதும் அல்லாமல், மணகளிடமும் கோபித்துக்கொண்டுள்ளார். இதற்கு அவர் சொன்ன காரணம் இணையவாசிகளை வியக்கச் செய்துள்ளது
wedding
wedding canva
Published on

என் நண்பனுக்கும் என் காதலிக்கும் ஆகாது....என் தோழிக்கும் என் காதலனுக்கும் ஆகாது...

இப்படியான அனுபவங்கள் எல்லாருக்கும் இருக்கும். நம் நண்பர்களின் காதலர்கள் பிடிக்கவில்லை என்றால் அவர்களுடன் எலியும் பூனையுமாக தான் இருப்போம்.

ஒரு பெண்ணுக்கு இந்த முரண் ஒரு படி அதிகமாகவே இருக்கிறது. தன் தோழி, திருமண நாளன்று, அவரை கவனிக்காமல், மணமகனுடன் அதிக நேரம் செலவிட்டதால், கோபமடைந்துள்ளார் ஒரு பெண்.

மம்ஸ்நெட் என்ற தளத்தில் ஒரு பெண் தன் கணவருக்கும், தனது தோழிக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கவில்லை என தெரிவித்திருந்தார். அதற்கான காரணம் சற்று சிக்கலாகவும், நீண்டதாகவும் இருப்பதால் அவரால் விளக்க இயலாது எனவும் தெரிவித்திருந்தார்.

கடந்த மாதம் இந்த பெண்ணுக்கு திருமணம் நடந்தது. தன் காதலனுக்கும் தன் தோழிக்கும் இருந்த மனஸ்தாபம் காரணமாக அவரை திருமணத்திற்கு அழைப்பதா என்பதில் தயக்கம் இருந்ததாக தெரிவித்தர். எனினும், தோழியை அழைக்காமல் இருக்க முடியாது என அவரை அழைத்திருக்கின்றனர்.

wedding
மணமகனிடம் ரூ.50 லட்சம் கேட்டு 'மான நஷ்ட ஈடு' வழக்கு தொடுத்த நண்பன் - காரணம் என்ன?

ஆனால், திருமணத்திற்கு வந்திருந்த தோழி, மனமகள் தன்னுடனும், தன்னை சார்ந்தவர்களுடனும் நேரம் செலவழிக்காமல், மணமகனுடனே இருந்ததால் கோபம் கொண்டுள்ளார்.

மேலும், தோழி மணமகளின் கணவரிடம் கடுமையாக நடந்துகொண்டதாக மணமகள் வருத்தம் தெரிவித்திருந்தார்.

இந்த கோபம் ஒரு படி மேலே போய், தன்னை கணவருடன் நிற்பதற்கு கூட தோழி அனுமதிக்கவில்லை எனவும், அப்படி அவர் அருகில் வந்து நின்றால், தன் கணவரை அவர்கள் ஒரு பொருட்டாகக் கூட கருதவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த கதையைக் கேட்ட இணையவாசிகள் அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறி, தோழிக்கு இப்படி நடந்துகொள்ள உரிமை இல்லை எனத் தெரிவித்தனர். இவர் நல்ல தோழமைக்கு உதாரணம் இல்லை எனவும் இப்படி ஒருவருடன் நீங்கள் நட்பை தொடரவேண்டாம், அவரது நட்பை முறித்துக்கொள்ளுங்கள் எனவும் தெரிவித்தனர்.

wedding
Band வாத்தியத்திற்கு யார் பணம் கொடுப்பது? - திருமணத்தை நிறுத்திய மணமகன்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com