சாப்பிடுவதில் கூட இவ்வளவு கண்டிஷனா? பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் கெடுபிடி கட்டுப்பாடுகள்!

இங்கிலாந்து அரசக் குடும்பத்திற்கு என்று ஒரு சில விதிமுறைகள் இருக்கின்றன. இந்த விதிமுறைகள் மக்களுக்கு அல்ல. குடும்பத்தாருக்கு மட்டுமே. அவை என்ன என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்...
The Royal Family
The Royal FamilyTwitter
Published on

இங்கிலாந்து அரச குடும்பம் உலகளவில் எல்லோராலும் வியந்துப் பார்க்கப்படும் குடும்பமாகும். சர்ச்சைகளுக்கும் தலைப்புச் செய்திகளுக்கும் குறை வந்தததில்லை.

இளவரசி டயானா மரணம் முதல், இளவரசர் ஹாரி-மேகன் அரச பதவிகளை துறந்தது வரை, எப்போதும் மக்களின் நினைவுகளில், பேச்சுக்களில் இருந்து தான் வருகின்றனர்.

Queen Elizabeth II
Queen Elizabeth IITwitter

சமீபத்தில் உடல நலக் குறைவால், அரசி இரண்டாம் எலிசபெத் காலமானார். இவருக்கு பிறகு இவரது மகன் சார்லஸ் அரசராக பொறுப்பேற்றார்.

இங்கிலாந்து அரசக் குடும்பத்திற்கு என்று ஒரு சில விதிமுறைகள் இருக்கின்றன. இந்த விதிமுறைகள் மக்களுக்கு அல்ல. குடும்பத்தாருக்கு மட்டுமே. அவை என்ன என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்...

கண்டிப்பாக தொப்பி அணிய வேண்டும்:

அரசு சார்ந்த நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் பெண்கள் கண்டிப்பாக தொப்பி அணிய வேண்டும். 1950களில் இருந்து துவங்கிய இந்த பழக்கம், தற்போது சற்று தளர்வடைந்துள்ளது. அதாவது, பெண்கள் அரசு நிகழ்ச்சிகள் அல்லாத நிகழ்வுகளில் பங்கேற்றாலும் ஹேட் அணிய விரும்பினால் அணிந்து கொள்ளலாம். உயர் வர்க்க, அரசக் குடும்ப பெண்கள், தங்களது தலைமுடியை பிறர் பார்க்கும்படி வைத்திருப்பது அந்த காலத்தில் ஒழுக்கமற்றதாக கருதப்பட்டதால் இந்த விதி கடைப்பிடிக்கப்பட்டது.

இங்கிலாந்து ராணி எலிசபெத், தான் இறக்கும் வரை இந்த பழக்கத்தை பின்பற்றி வந்தார். மேலும் இவர் அணியும் உடையும் ஹேட்டும் ஒரே நிறத்தில் தான் இருக்கும்!

கிரீடம் (Tiara) அணியும் நேரம்:

அரச குடும்ப பெண்கள், மாலை 5 மணிக்கு மேல் டியாரா எனப்படும் அவர்களது சிறிய வகை கிரீடத்தை அணிய வேண்டும். காரணம், மாலை நேரங்களில் இவர்கள் பெரும்பாலும் உயர் வர்க்க, அல்லது அரச குடும்பத்தாரின் நிகழ்ச்சிகள், டின்னர் பார்ட்டிகளுக்கு செல்வது வழக்கம். ஆகையால் டியாராவை அணிய வேண்டும். இந்த டியாராக்களில் வைர கற்கள் பதிக்கப்பட்டிருக்கும். இந்த டியாராவை அவர்கள் திருமணத்தின் போது அணிவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்றாக பயணிக்கக் கூடாது:

அரச குடும்பத்தின் நேரடி வாரிசுகள் இருவர் ஒரே சமயத்தில் பயணிக்க அனுமதி இல்லை. அப்படி பயணிக்க விரும்பினால் அரசரின்/அரசியின் சிறப்பு அனுமதியை பெற வேண்டும். தற்போது வரை இளவரசர் வில்லியம் அவரது மூன்று குழந்தைகளுடன் பயணிக்க சிறப்பு அனுமதி இருக்கிறது. வில்லியம்மின் மூத்த மகன் இளவரசர் ஜார்ஜ் 12 வயதை எட்டியப் பிறகு அவர் தனியாகத் தான் பயணிக்க வேண்டும்.

சீஃபுட் நோ:

அரச குடும்பத்தினர் வெளியில் அல்லது பயணங்களின் போது சீஃபுட் சாப்பிடக் கூடாது. அவர்களது உடல நலத்தை கருத்தில் கொண்டு இந்த பழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.

அரசரோ அரசியோ சாப்பிட்டு முடித்த பிறகு வேறு யாரும் சாப்பிடக் கூடாது:

அரசி விக்டோரியாவின் காலத்திலிருந்து இருக்கிறது இந்த பழக்கம். விருந்தாளிகளுடன் அமர்ந்து ராயல் மீல் நடக்கும் நேரத்தில், அரசரோ அரசியோ சாப்பிட்டு முடித்துவிட்டால், மற்றவர்களும் சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும். அப்போது பணியாளர்கள், விருந்தாளிகள் சாப்பிட்டு முடித்திருந்தாலும் இல்லை என்றாலும், அவர்களது தட்டுகளை எடுத்து விடுவார்களாம் !

நல்ல விருந்தோம்பல்!

The Royal Family
பிரிட்டிஷ் அரச குடும்பம் எப்படி பணம் சம்பாதிக்கிறது? - வியக்க வைக்கும் தகவல்கள்

நிமிர்ந்த நன்னடை:

அரச குல பெண்கள் எப்போதும் தங்களது தலையை குனிந்தவாறு நடக்க அனுமதியில்லை. படிகளில் இறங்கும்போது மட்டும் அவர்கள் தலை குனியலாம். மற்ற நேரங்களில் அவர்கள் நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையோடு இருக்கவேண்டும்.

இதை பின்பற்ற காரணம், பெண்கள் தங்களை சுற்றி நடப்பவை குறித்து விழிப்புடன் இருக்கவேண்டும் என்பதே. முக்கியமாக அரச குல பெண்கள்!

கட்டாயமாக தற்காப்பு பயிற்சி:

அரச குடும்ப பெண்கள் நிச்சயமாக ராணுவ பயிற்சி பெற வேண்டும். அதாவது அவர்களுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்பதால், எந்த வித சூழ்நிலைக்கும் அவர்கள் தயாராக இருக்கவேண்டும். இளவரசர் வில்லியம்மின் மனைவி கேட், மற்றும் ஹாரியின் மனைவி மேகன் மார்கலுக்கு இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டன. மேலும், தங்களது எதிரிகளை வாய்மொழியால் எப்படி கையாள வேண்டும், ஆபத்தான நேரங்களில் எப்படி வாகனம் ஓட்டவேண்டும் என்பதும் கற்றுக்கொடுக்கப்பட்டது.

பரிசுபொருட்கள்:

அரச குடும்பத்தினருக்கு யார் என்ன பரிசு கொடுத்தாலும் அதை பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் மதிப்பு குறித்தோ, அல்லது தரம் குறித்தோ அவர்கள் அவர்கள் விவாதிக்கக் கூடாது.

வெங்கயாம் பூண்டு சாப்பிடக் கூடாது

அரச குடும்பத்தினர் வெங்காயம் மற்றும் பூண்டை அவர்கள் உணவில் சேர்த்து கொள்வதில்லை. அவர்கள் எப்போதும் மற்றவருடன் பேச நேரிடும் என்பதால் அவர்களது சுவாசத்தில் துர்நாற்றம் வரக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். அதனால் அவர்களது உணவில் பூண்டு நிச்சயமாக இருக்காது.

The Royal Family
Queen Elizabeth : இங்கிலாந்து ராணியின் இறப்பை முன்கூட்டியே கணித்த மர்ம நபர் - வைரல் ட்வீட்

கைகள் கோர்க்ககூடாது:

அரசரோ அரசியோ பொது வெளியில் தங்களது இணையருடன் கைக் கோர்த்துக்கொள்ளக் கூடாது. PDA எனப்படும் Public Display of Affectionஐ இவர்கள் கடைப்பிடிக்க அனுமதி இல்லை.

செல்ஃபி எடுக்கக் கூடாது:

அரசக் குடும்பத்தை சார்ந்தவர்களுடன் யாரும் செல்ஃபி எடுத்துக்கொள்ளக் கூடாது. அரசக் குடும்பத்தினருக்கு புறமுதுகை காண்பிப்பது அவர்களை அவமதிக்கும் செயலாக கருதப்படுவதால், செல்ஃபி எடுக்க அனுமதியில்லை.

வாக்களிக்க அனுமதி இல்லை:

அரசர் அல்லது அரசிக்கு வாக்களிக்க அனுமதி இல்லை. இவர்கள் அப்போதும் நடுநிலைத் தன்மையுடன் இருக்கவேண்டும். அரசு சார்ந்த முக்கிய விஷயங்களில் இவர்களுக்கு பெரும் பங்கு இருந்தாலும், ஒரு வேட்பாளருக்காக அவர்கள் வாக்களிக்க அனுமதி இல்லை

பயணத்தின்போது கண்டிப்பாக கருப்பு உடை:

அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் எங்கு பயணம் மேற்கொண்டாலும், அவர்கள் கருப்பு நிற உடை ஒன்றை வைத்திருக்கவேண்டும்.

1952ல் இளவரசியாக இருந்தபோது எலிசபெத்தும் அவரது கணவரும் ஆப்ரிக்க சென்றிருந்தனர். அப்போது எலிசபெத்தின் தந்தை அரசர் ஆறாம் ஜார்ஜ் காலமானார். அந்த பயணத்தின்போது எலிசபெத்திடம் கருப்பு உடை இல்லை (இறுதிச் சடங்குகளில் கருப்பு உடை அணியும் வழக்கம்). இதனால் வெகு நேரமாக விமானத்திலேயே காத்திருந்து கருப்பு உடை கிடைத்த பின்னர் அவர் உடை மாற்றிக்கொண்டு இறுதிச் சடங்கிற்கு வந்தார்.

அப்போது முதல், அரச குடும்பத்தார் எங்கு பயணம் மேற்கொண்டாலும், அவர்கள் கருப்பு நிற உடையை கட்டாயமாக எடுத்துச் செல்லவேண்டும்.

The Royal Family
King Charles III : லீக்கான பேனா மை - கோபமடைந்த இங்கிலாந்து மன்னர் சார்லஸ் - வைரல் வீடியோ

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com