பிரிட்டிஷ் அரச குடும்பம் எப்படி பணம் சம்பாதிக்கிறது? - வியக்க வைக்கும் தகவல்கள்

2018 – 2019 நிதியாண்டில் ராணிக்கு கிடைத்த வருமானம் 82.2 மில்லியன் பவுண்டுகள். 2020ஆம் ஆண்டில் ராணிக்கு கிடைத்த வருமானம் முந்தைய ஆண்டை விட 20 மில்லியன் பவுண்டுகள் குறைந்துள்ளதாக நிதி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
The Royal Family
The Royal FamilyTwitter
Published on

பல நூற்றாண்டுகளாக பிரிட்டிஷ் குடும்பம் காலத்திற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு வந்துள்ளது. அவர்கள் மக்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப நடந்து கொண்டதோடு நாட்டில் அரசியல் மாற்றம் கடுமையாக ஏற்பட்ட போதும் அதை ஏற்றுக் கொண்டவர்களாக இருந்தார்கள். அதே நேரம் அவர்களுடைய ராயல் அரசப் பெருமையும் நீடிக்கவே செய்தது. ஆனால் இந்த அரசப் பெருமையை காப்பாற்றுவதற்குத் தேவையான செல்வமும், பணமும் இல்லாமல் இது சாத்தியமா? நிச்சயம் இல்லை.

நீங்கள் பிரிட்டிஷ் அரச குடும்பத்தைப் பற்றி ஆழமாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவர்களுக்கு எப்படி பணம் வருகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் வருமான ஆதாரம் என்ன?

பிரிட்டிஷ் அரச குடும்பம் அரசு அல்லது மக்கள் பணத்தோடு தங்களது தனிப்பட்ட பண வருவாயையும் கொண்டிருக்கின்றனர். இதில் அவர்கள் பரம்பரை பரம்பரையாக வைத்திருக்கும் சொத்து மற்றும் வருமானம் தனி.

2011 இல் பிரிட்டன் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட இறையாண்மை மானிய சட்டத்தின் படி பிரிட்டிஷ் அரச குடும்பத்திற்கு அதிகாரப்பூர்வ அலுவலை பார்ப்பதற்காக பிரிட்டிஷ் அரசு நிதி கொடுக்கிறது. லான்காஸ்டர் டச்சி என்பது பிரிட்டிஷ் இறையாண்மை பெற்ற ஒரு தனியார் தோட்டமாகும். இந்த தோட்டத்தின் மூலம் அரச குடும்பத்திற்கு வருவாய் வருகிறது. அதே போன்று இங்கிலாந்தின் தென்மேற்கு முனையில் உள்ள கார்ன்வால் மாவட்டத்தின் வருமானமும் பிரிட்டிஷ் அரச குடும்பத்திற்கு அளிக்கப்படுகிறது. 

The Royal Family
எலான் மஸ்க்: சிறு வயதில் மோசமான நெருக்கடிகள் முதல் உலகின் No 1 பணக்காரர் வரை - யார் இவர்?

ராணியின் செலவுகளுக்கு இறையாண்மையின் பெயரில் செலுத்தப்படும் தொகை

பிரிட்டிஷ் மக்கள் செலுத்தும் வரிப்பணத்திலிருந்து இங்கிலாந்து ராணி ஆண்டு தோறும் இறையாண்மை மானியம் என்ற பெயரில் பணத்தைப் பெறுகிறார். இத்தொகை ராணியின் அதிகாரப்பூர்வ பணிகளுக்கும், அரண்மனைகளைப் பராமரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தின்படி இறையாண்மை மானியத்திற்கான நிதியானது கிரவுன் எஸ்டேட் வருவாயின் இலாபத்திலிருந்து வருகிறது. கிரவுன் எஸ்டேட்டில் இருந்து கிடைக்கும் அனைத்து இலாபத்தையும் அரசாங்கத்திற்கு விட்டுக் கொடுப்பதற்கு ஈடாக ராணி மானியத்தை பெறுகிறார். 

2018 – 2019 நிதியாண்டில் ராணிக்கு கிடைத்த வருமானம் 82.2 மில்லியன் பவுண்டுகள். 2020ஆம் ஆண்டில் ராணிக்கு கிடைத்த வருமானம் முந்தைய ஆண்டை விட 20 மில்லியன் பவுண்டுகள் குறைந்துள்ளதாக நிதி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

லான்காஸ்டரின் பிர்வி பர்ஸ் மற்றும் டச்சி என்றால் என்ன?

பிர்வி பர்ஸ் என்பது ராணியின் உண்மையான வருமானம் ஆகும். இதில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அரச குடும்பத்திற்குச் சொந்தமான சொத்துக்களின் வருமானம் அடங்கும். இதன் மூலம் 2018 ஆம் ஆண்டில் சுமார் 20 மில்லியன் பவுண்டுகள் வருமானம் ராணிக்கு கிடைத்தது.

பிரிட்டிஷ் ராணி தனது செலவுகளை மேற்கொள்வதைத் தவிர தனது குழந்தைகளான இளவரசர் ஆண்ட்ரூ, இளவரசர் எட்வர்ட் மற்றும் இளவரசி ஆன் ஆகியோருக்கு உலகம் முழுவதும் பயணம் செய்து தங்களது அரச கடமையை ஆற்ற பணம் கொடுக்கிறார். 

The Royal Family
கௌதம் அதானி : இரண்டே ஆண்டுகளில் 15 மடங்கு அதிகரித்த சொத்து மதிப்பு - எப்படி?

ராணிக்கு மதிப்பு மிக்க மற்ற சொத்துக்களும் உண்டு

பிரிட்டிஷ் அரச பரம்பரை சென்ற நூற்றாண்டு வரை பல காலனிய நாடுகளை ஆண்டு வந்ததால் பல கலைப் பொருட்கள் அவர்களிடம் உள்ளன. சான்றாக இந்தியாவின் விலை மதிப்பற்ற கோஹினூர் வைரம் அவர்களிடம் உள்ளது. அரச பரம்பரையின் மூதாதையர் வழங்கிய மதிப்பு மிக்க சொத்துக்களும் அவர்களிடம் உள்ளன. பல்மோரல் மற்றும் சாண்ட்ரிங்ஹாம் தோட்டங்கள் போன்று பல தோட்டங்கள் அரச வம்சத்தின் கைவசம் உள்ளன.

இளவரசர் சார்லஸுக்கு அவரது சொந்த வருமான ஆதாரம் உள்ளது

டச்சி ஆஃப் கார்ன்வால் என்பது சார்லஸ் மற்றும் அவரது மனைவி, வாரிசுகளுக்கு செலவுகளைக் கவனித்துக் கொள்ளும் பண வழிமுறையாகும். 2019ஆம் ஆண்டில் சார்லஸ் தனது குடும்பத்திற்கு மொத்தம் 5 மில்லியன் பவுண்டுகள் வழங்கினார். பொதுவில் அரச குடும்பத்தின் மீது ராணி மற்றும் வேல்ஸ் இளவரசர் சார்லஸ் ஆகியோருக்கு அதிக அதிகாரம் உண்டு. 

இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்கலுக்கு அரச நிதி இல்லை

இந்த ஆண்டு இளவரசர் ஹாரி அமெரிக்க தொலைக்காட்சி பிரபலமான ஓப்ரா வின்ஃப்ரேவுடன் அமர்ந்து நேர்காணல் கொடுத்தது பரபரப்பாக பேசப்பட்டது. அதில் தான் எப்படி பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் நிதியிலிருந்து துண்டிக்கப்பட்டேன் என்பதைப் பற்றி விரிவாக பேசினார்.

அப்படி எனில் அவரது வாழ்க்கைச் செலவுக்கு என்ன வழி?

இளவரசர் ஹாரியின் குடும்பத்திற்கு அவரது தாயார் இளவரசி டயானா விட்டுச் சென்ற பரம்பரைப் பங்கு வருமானத்திலிருந்து நிதி வருகிறது. இளவரசர் ஹாரி அவருடைய 25 வயதில் அம்மா வழி வருமானமாக 13 பில்லியன் டாலர்களைப் பெற்றார். இந்த வருமானம் இல்லை என்றால் தங்களால் வாழ முடிந்திருக்காது என்று அவர் கூறினார். 

இவை போக பிரிட்டிஷ் ராயல் அரச பரம்பரையினர் தமது நிகழ்வுகளை டிஜிட்டல் மற்றும் டீவியில் காட்டுவதற்கும், ஆவணப்படங்கள் தயாரிப்பதற்கும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர். இதன் மூலமும் வருமானம் வருகிறது. 

The Royal Family
Queen Elizabeth II : மறைந்த ராணியின் தனிபட்ட சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com