தூங்குவதற்கு சம்பளம் கொடுக்கும் நிறுவனம் : என்னென்ன தகுதிகள் வேண்டும்?

நியூயார்க்கைத் தளமாகக் கொண்ட காஸ்பர் என்ற நிறுவனம், மெத்தை, தலையணை போன்ற தங்களின் பொருட்களை வாங்க வைக்க இவ்வாறு ஒரு வேலையை உருவாக்கி அதற்கு ஊழியர்களைத் தேடியும் வருகிறது.
Sleep
SleepPixels
Published on

தங்களின் பொருட்களை விற்பனை செய்யவும், வாடிக்கையாளர்களைக் கவரவும் பல்வேறு யுக்திகளை ஆன்லைன் நிறுவனங்கள் கையாண்டு வருகிறது. இதற்காகப் பல விளம்பரங்கள் செய்து மக்களை ஈர்த்து வருகிறது.

அந்த வகையில் அமெரிக்காவின் பிரபல நிறுவனம் தூங்குவதற்கு சம்பளம் கொடுக்க முன்வந்துள்ளது. ஆம் சரியாகத் தான் படித்தீர்கள்!

நியூயார்க்கைத் தளமாகக் கொண்ட காஸ்பர் என்ற நிறுவனம், மெத்தை, தலையணை போன்ற தங்களின் பொருட்களை வாங்க வைக்க இவ்வாறு ஒரு வேலையை உருவாக்கி அதற்கு ஊழியர்களைத் தேடியும் வருகிறது.

Sleep
SleepCanva

வேலைஎன்ன?

நன்றாகத் தூங்க வேண்டும்.

அந்த கடைகளில் தூங்க வேண்டும் மற்றும் எங்கு கொண்டுபோய்விட்டாலும் தூங்க வேண்டும்.

அந்த ஸ்லீப்பர்கள் தூங்காமல் இருக்கும் போது தங்களின் அனுபவத்தை மற்றவர்களுடன் Casper என்ற அந்த நிறுவனத்தின் சமூக ஊடக சேனல்கள் மூலம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

தங்களின் உறங்கும் திறனை டிக்டாக் மூலம் வெளிப்படுத்த வேண்டும்.

Sleep
கேக்குடன் Resume கொடுத்து வேலை கேட்ட சொமேட்டோ ஊழியர் - எங்கே?
deep sleep
deep sleeptwitter

பகுதி நேர வேலை

தூங்குவதற்குப் பணம் கொடுப்பதுடன், நன்றாக இந்த வேலையை செய்பவர்களுக்கு

அந்த நிறுவனம் சார்பாக சில பொருட்கள் வழங்கப்படுமாம்.

மேலும் பகுதி நேர அட்டவணையில் வேலை செய்யலாம் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

தூங்குவதில் ஆர்வமுள்ளவர்கள் தங்கள் பயன்பாட்டின் ஒரு பகுதியாக TikTok இல் தூங்கும் திறன்களை வெளிப்படுத்த வேண்டும்.

ஆகஸ்ட் 11 வரை அந்த வேலைக்காக விண்ணப்பிக்கலாம் என்று காஸ்பர் நிறுவனம் கூறியுள்ளது.

Sleep
33 லட்சம் சம்பளத்தில் வேலை; வாய்ப்பை இழந்த 15 வயது சிறுவன் காரணம் என்ன?
Candy
CandyCanva

ஏற்கெனவே, கனடாவில் உள்ள ஒரு சாக்லேட் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் சுமார் 3,500 மிட்டாய்களை சுவைப்பதற்காக ஊழியர்களைத் தேடிவருகிறது.

புதிய மிட்டாய்களின் இருப்புகளை அங்கீகரிப்பது தான் அந்த ஊழியரின் பொறுப்பாக இருக்குமாம்.

ஐந்து வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம், முன் அனுபவம் தேவையில்லை. விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 31க்குள் விண்ணப்பிக்கலாம் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

Sleep
"கொடுத்த வேலை முடிந்ததா?" பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியரிடம் பாஸ் கேள்வி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com