Ukraine : 40 ரஷ்ய ஜெட்களை வீழ்த்திய 'கீவின் பேய்' மரணம் - கௌரவித்த உக்ரைன் அரசு

29 வயது இராணுவ வீரர் மேஜர் ஸ்டீபன் டரபல்கா கிட்டத் தட்ட 40 ரஷ்ய ஜெட்களை சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது. இவரைக் கௌரவித்த அரசு 'உக்ரைனின் ஹீரோ' என்ற பட்டத்தை இவருக்கு அளித்திருக்கிறது.
டரபல்கா
டரபல்காTwitter
Published on


ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. ரஷ்யாவுக்கு எந்த விதத்திலும் பணிந்து விடாமல் உக்ரைன் எதிர்த்துச் சண்டையிட்டு வருகிறது. ரஷ்யாவை விடச் சிறிய நாடான உக்ரைன் ஒரு வாரத்துக்குள் ரஷ்யாவின் கையில் வந்துவிடும் எனக் கூறப்பட்ட நிலையில் உக்ரைன் கணிப்புகளைப் பொய்யாக்கி இரண்டு மாதத்துக்கும் மேலாகச் சண்டையிட்டு வருகிறது.

உக்ரைனிலிருந்து ஆண்கள் வெளியேறத் தடை விதிக்கப்பட்டு பொது மக்களில் பலரும் இராணுவ வீரர்களாக ரஷ்யாவை எதிர்த்துச் சண்டையிட்டு வருகின்றனர். தாய் நாட்டை காக்கும் பொருட்டு தங்களை விடப் பல மடங்கு பெரிய இராணுவத்தை உக்ரைனியர்கள் எதிர்த்து வருகின்றனர். போரில் வீரதீர செயல்களைச் செய்பவர்களை உக்ரைன் அரசு கௌரவித்து வருகிறது.

அந்த வகையில் கௌரவிக்கப்பட்டவர் தான் 29 வயது இராணுவ வீரர் மேஜர் ஸ்டீபன் டரபல்கா (Ghost of Kivy). இவர் கிட்டத் தட்ட 40 ரஷ்ய ஜெட்களை சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது. இவரைக் கௌரவித்த அரசு 'உக்ரைனின் ஹீரோ' என்ற பட்டத்தை இவருக்கு அளித்திருக்கிறது.

Ghost of Kivy
Ghost of KivyTwitter

டரபல்கா இயக்கிய MiG-29 இராணுவ விமானம் கடந்த மார்ச் மாதம் வீழ்த்தப்பட்டிருக்கிறது. அதிரடியாக போராடிய டரபல்கா எதிரிக்கூட்டத்தின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததால் போரில் தாக்குபிடிக்க முடியவில்லை என உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.

போர் தொடங்கிய முதல் நாளில் ஆறு ஜெட் விமானங்களை வீழ்த்தி ரஷ்ய இராணுவத்துக்கு அதிர்ச்சியைக்கொடுத்தவர் டரபல்கா.

டரபல்கா
உக்ரைனுக்கு ஆயிரக்கணக்கில் அவசரமாக அனுப்பப்படும் கருத்தடை மாத்திரைகள் - காரணம் என்ன?

அவரது தீரத்தைப் போற்றும் விதமாகப் போரில் அவர் பயன்படுத்திய தலைக்கவசம் மற்றும் கண்ணாடி ஏலம் விடப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைன் இராணுவ அதிகாரி டரபல்கா குறித்த ட்விட்டில், “மக்கள் அவரை மிகச் சரியாக கீவ்வின் பேய் என்றழைத்தனர். டரபல்காவால் கீவ்வை ஆக்கிரமிப்பது ரஷ்ய இராணுவத்துக்கு வெறும் கனவாக மட்டுமே இருந்தது” என ட்விட் செய்துள்ளார்.

டரபல்காவின் பெற்றோர் அவரின் மறைவுக்குப் பிறகு அளித்த பேட்டியில், “அவன் சிறுவயது முதலே சண்டை விமானியாக வேண்டும் என்று தான் எண்ணினான். எங்களுக்குத் தெரிந்தவரை அவனுக்கு இராணுவத்தில் கடைசியாகக் கொடுக்கப்பட்ட திட்டத்தைச் சரியாக நிறைவேற்றிவிட்டுத் திரும்பும் போது தான் வீழ்த்தப்பட்டிருக்கிறான்” எனக் கூறியுள்ளனர்.

டரபல்கா
Russia Ukraine War: 'இதுவே எங்கள் கடைசி அறிமுகமாக இருக்கலாம்' - மரியுபோலில் உக்ரைன் தளபதி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com