Google, Microsoft, Amazon: லே ஆஃபால் பாதிக்கப்பட்ட டிபார்ட்மென்ட்கள் என்னென்ன?

லே ஆஃப் செய்த நிறுவனங்களின் எந்தெந்த நிர்வாகங்கள் அதிக பாதிப்படைந்தன என்று தரவுகள் எடுக்கப்பட்டது.
Google, Microsoft, Amazon: லே ஆஃபால் பாதிக்கப்பட்ட டிபார்ட்மென்ட்கள் என்னென்ன?
Google, Microsoft, Amazon: லே ஆஃபால் பாதிக்கப்பட்ட டிபார்ட்மென்ட்கள் என்னென்ன?twitter

கடந்த சில மாதங்களில் எங்கு திரும்பினாலும் கேட்பட்ட வார்த்தை லே ஆஃப்.

கொரோனா பெருந்தொற்று தொடங்கியபோது எப்படி லாக்டவுன், குவாரன்டைன் போன்ற வார்த்தைகளை கிரேக்க லத்தீன வார்த்தைப் போல பார்த்தோமோ, அப்ப்டி இருந்தது லே ஆஃப், சில காத்துக்கு முன்பிலிருந்து ட்ரெண்டிலிருக்கிறது.

ஆனால், கொரோனா, போர், பொருளாதார நெருக்கடி போன்ற காரணிகளால், அன்றாட வாழ்க்கையின் மொழியாகிவிட்டது இந்த பணி நீக்கம்.

பெரு நிறுவனங்களான ட்விட்டர், அமேசான், மைக்ரோசாஃப்ட், கோல்ட்மேன் சாக்ஸ், கூகுள் என அடுத்தடுத்து எல்லோரும் ஆயிரக்கணக்கில், இரவு பகல் பேதமின்றி ஊழியர்களை பணி நீக்கம் செய்தனர். இதற்கு முக்கிய காரணம் காஸ்ட் கட்டிங்!

இப்படியிருக்க, லே ஆஃப் செய்த நிறுவனங்களின் எந்தெந்த நிர்வாகங்கள் அதிக பாதிப்படைந்தன என்று தரவுகள் எடுக்கப்பட்டது.

மைக்ரோசாஃப்ட்
மைக்ரோசாஃப்ட்

மைக்ரோசாஃப்ட்:

ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட லே ஆஃப்கள், 'மறுசீரமைப்பின்' ஒரு பகுதியாகும். அதில், பல விளையாட்டு ஸ்டுடியோக்கள் மிகவும் பாதிக்கப்பட்டன

ஸ்டார்ஃபீல்ட் டெவலப்பர் பெதஸ்தாவும் பாதிக்கப்பட்ட டிபார்ட்மென்ட்களில் ஒன்று. தவிர, பத்திரிகையாளர் ஜேசன் ஷ்ரேயர் ஒரு ட்வீட்டில் ஹாலோ ஸ்டுடியோ 343 இண்டஸ்ட்ரீஸ் பணிநீக்கங்களால் பாதிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

Google, Microsoft, Amazon: லே ஆஃபால் பாதிக்கப்பட்ட டிபார்ட்மென்ட்கள் என்னென்ன?
கூகுள்: அதிகாலை 3 மணிக்கு! 16.5 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்; ஒரே நிமிடத்தில் பறிபோன வேலை
சுந்தர் பிச்சை
சுந்தர் பிச்சைTwitter

கூகுள்:

தி இன்ஃபர்மேஷன் அறிக்கையின்படி, கூகுளின் க்ரோம், சர்ச், ஆன்டிராய்ட், கூகுள் க்லவுட் உள்ளிட்ட டிபார்ட்மென்ட்களில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். கடந்த வெள்ளிக்கிழமையன்று 12,000 ஊழியர்களை ஒரே நேரத்தில் பணி நீக்கம் செய்தது நிறுவனம். இதில் அந்நிறுவனத்திற்காக 16.5 ஆண்டுகள் பணியாற்றிய மென்பொருள் மேலாளரும் ஒருவராவார்.

லே ஆஃப் செய்யப்பட்ட பெரும்பாலான ஊழியர்கள் "உயர் செயல்திறன் உடையவர்கள் பட்டியலில் இடம்பெற்றவர்கள். மேலும் ஆண்டுக்கு $ 500,000 முதல் $ 1 மில்லியன் வரை (~ ரூ.4-8 கோடி) சம்பாதித்த சில மேலாளர்களும் இதில் அடக்கம்

அமேசான்:

ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, அமேசானில், பணிநீக்கம் டிவைசஸ் அண்ட் சர்வீசஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெருவாரியாக அலெக்சா மற்றும் குழந்தைகளுக்கான வீடியோ அழைப்பு சாதனம் மற்றும் டெலிஹெல்த் சேவை உள்ளிட்ட அதன் எக்கோ ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் போன்ற தயாரிப்புகளுடன் தொடர்புடைய குழுக்களை பாதித்தன என்று வன்பொருள் தலைவர் டேவ் லிம்ப் சிஎன்பிசியிடம் தெரிவித்தார்.

பிரைம் ஏர் ட்ரோன் விநியோக திட்டத்தின் ஒரு பகுதியாக அதன் தலைமையகம் மற்றும் அதன் பென்டில்டன், ஓரிகான் சோதனை தளம் உள்ளிட்ட பல தளங்களில் ஊழியர்களிடையே பணிநீக்கங்கள் இருப்பதாக என்.பி.சி தெரிவித்துள்ளது.

Google, Microsoft, Amazon: லே ஆஃபால் பாதிக்கப்பட்ட டிபார்ட்மென்ட்கள் என்னென்ன?
மெட்டா முதல் ட்விட்டர் வரை: 2022ல் ஊழியர்களை லே ஆஃப் செய்த டாப் நிறுவனங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com