சிந்துவெளி தமிழர்கள் தொடர்பு : பாகிஸ்தானில் பேசப்படும் திராவிட மொழி - ஓர் ஆச்சர்ய வரலாறு

இப்படி பிராகுயி பேசும் மக்களுக்கும் அவர்களை சுற்றியுள்ள மக்கள் பேசும் இதர மொழிகளுக்கும் மொழியியல் ரீதியாக எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் பிராகுயி தொலைவில் உள்ள தென்னிந்தியாவுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது.
சிந்துவெளி தமிழர்கள் தொடர்பு
சிந்துவெளி தமிழர்கள் தொடர்புSocial Media

பிராகுயி என்பது பாகிஸ்தானின் மேற்கு மாநிலமான பலூச்சிஸ்தானில் 20 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பேசும் மொழியாகும். இது தவிர இரானின் பலூச்சிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தானில் உள்ள மார்வ் சோலை போன்ற பகுதிகளிலும் பிராகுயி மொழி பேசுபவர்கள் சிறிய அளவில் உள்ளனர்.

இப்படி பிராகுயி பேசும் மக்களுக்கும் அவர்களை சுற்றியுள்ள மக்கள் பேசும் இதர மொழிகளுக்கும் மொழியியல் ரீதியாக எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் பிராகுயி தொலைவில் உள்ள தென்னிந்தியாவுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது.

17 ஆம் நூற்றாண்டில் கலாட்டின் கானேட் ஒரு சுதந்திர சமஸ்தானமாக மாறியபோது, பிராகுயி மக்கள் வரலாற்றில் முதன்முறையாக தோன்றினர். அதற்கு முன் அவர்கள் மொகலாய ஆட்சியின் கீழ் வாழ்ந்ததாக யூகிக்கப்படுகிறது.

சிந்து சமவெளி நாகரிகத்தின் வழித்தோன்றல்கள்தான் பிராகுயிகள்.
வல்லுநர்கள்

திராவிட மொழி எப்படி உருவானது?

சிந்து சமவெளி நாகரிகத்தின் வழித்தோன்றல்கள்தான் பிராகுயிகள் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். சிந்து சமவெளி நாகரிகம் என்ன காரணங்களுக்காக அழிந்து போனது என்பது இதுவரை தெரியாது. ஆனால் அப்படி மறையும் காலத்தில் ஒரு பிரிவு மக்கள் குழு பலூச்சிஸ்தானுக்கு சென்று தங்களது மொழியை பாதுகாத்தனர். உறுதிப்படுத்தப்படாத மற்றொரு கோட்பாட்டின் படி பிராகுயிஸ் மக்கள் 12 ஆம் நூற்றாண்டில் குடியேறியிருக்கலாம். எனினும் ஆதாரம் இல்லை.

கலாட்டின் கானேட் சுமார் 1666 ஆம் ஆண்டு முதல் 1955 வரை பாகிஸ்தானில் இணைக்கப்பட்டது. இப்பகுதியில் மிர் அஹ்மத் கான் காம்ப்ரானி பலோச் என்பவரால் ஆட்சி நிறுவப்பட்டது. இவ் வம்சத்தின் கடைசி ஆட்சியாளர் மீர் அஹ்மத் யார் கான் அகமத்சாய் பலோச் ஆவார். காலாட்டின் கான் மக்களின் பெரும்பான்மையினர் பிராகுயி மொழி பேசினாலும் நிர்வாக – நீதிமன்ற மொழியாக பலூச் மொழியை மாற்ற விரும்பினர்.

பிராகுயி என்ற வார்த்தையே பிராகுயி மொழியில் இல்லாதது. இது இப்ராஹிமின் சிராய்க்கியின் மொழிபெயர்ப்பான சிராய்கி பிராஹோவிலிருந்து கடன் வாங்கப் பட்டது. பிராகுயி மக்கள் தற்போதைய பகுதிக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெயர்ந்த போது இந்தப் பெயர் தோன்றியிருக்கலாம். ஆனால் இதற்கும் உறுதியான ஆதாரம் இல்லை.

தற்போது 27 பழங்குடியினர் பிராகுயி மொழி பேசுகின்றனர். ஆனால் பிராஹுயிஸ் என்று அடையாளம் காணப்படும் அனைவரும் பிராகுயி மொழி பேசுபவர்கள் என்று பொருளில்லை. பிராகுயி என்ற வார்த்தைக்கு பழங்குடியினரின் குழு என்றும் பொருளுண்டு. சிலர் பிராகுயி மட்டும் பேசுகிறார்கள். சிலர் பிராகுயி மற்றும் பலூச் இரண்டு மொழியும் பேசுகிறார்கள். சிலர் பலூச் மொழி மட்டும் பேசுபவர்கள். ஒரு பிராகுயி பழங்குடியினரும், பிராகுயி பேசுபவரும் உண்மையில் ஒரே குழுவைக் குறிப்பிடுவதில்லை. இந்தக் குழப்பமான சூழ்நிலையானது பிராகுயி பேசுபவர்கள் எவ்வளவு பேர் என்று துல்லியமாக மதிப்பிட முடியாத படி இருக்கிறது.

சிந்துவெளி தமிழர்கள் தொடர்பு
பாகிஸ்தானில் வசிக்கும் தமிழர்கள் : ஓர் ஆச்சர்ய வரலாறு!
பிராகுயி அதைச் சுற்றி பேசப்படும் மொழிகளிலிருந்து வேறுபட்டது .
ஆங்கிலேயர்கள்

பிராகுயி மொழி திராவிட மொழி என்பதை கண்டுபிடித்த ஆங்கிலேயர்கள்

பிராகுயி அதைச் சுற்றி பேசப்படும் மொழிகளிலிருந்து வேறுபட்டது என்பதை ஆங்கிலேயர்கள் துணைக்கண்டத்தில் தமது ஆட்சியை நிறுவும் போக்கில் கண்டனர். 1816 ஆம் ஆண்டில் பிராகுயி மொழி மற்ற மொழிகளிலிருந்து வேறுபட்டது என்பதை எச்.போட்டிங்கர் முதலில் குறிப்பிட்டார். இ. ட்ரம்ப் பிராகுயி மொழியை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து அதை திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்பதை நிறுவினார்.

தற்போது பிராகுயி மொழி வட திராவிட துணைக் குழுவின் அங்கமாக சேர்க்ப்பட்டுள்ளது. இக்குழுவில் ஜார்க்கண்ட், மேற்கு வங்கத்தில் பேசப்படும் குருக் அல்லது ஓரான் மற்றும் பீகார், மேற்கு வங்கத்தில் பேசப்படும் ஓரான் போன்ற திராவிட மொழிகள் உள்ளன.

இன்றைக்கும் பிராகுயி வார்த்தைகளுக்கும் பிற திராவிட மொழிகளில் பயன்படுத்தப்படும் சொற்களுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இந்த ஒற்றுமை இவற்றுக்கிடையே உள்ள தொடர்பை தெளிவாக காட்டுகிறது. கீழே சில பிராகுயி சொற்கள் திராவிட சொற்களோடு ஒத்துப் போவதை காட்டும் வகையில் பட்டியிலிடப்பட்டுள்ளன.

Today – ஐனோ (பிராகுயி), இன்னு (தமிழ், மலையாளம்)
You – நீ (பிராகுயி), நீ (தமிழ், மலையாளம்)
Come – பா (பிராகுயி), வா (தமிழ், மலையாளம்)
Snore – குர்காவ் (பிராகுயி), குறட்டை (தமிழ்)
Eye – சான்(பிராகுயி), கண் (தமிழ்)
Stone – சால் (பிராகுயி), கல் (தமிழ்)
Milk – பால் (பிராகுயி), பால் (தமிழ்)
News – ஹவல் (பிராகுயி), தகவல் (தமிழ்)

பிற திராவிட மொழிகளிலிருந்து நீண்ட காலமாக தனிமைப்படுத்தப்பட்டதன் காரணமாக பிராகுயி மொழியின் உருவவியல் அதைச் சுற்றியுள்ள மொழிகளால் ஈர்க்கப்பட்டுள்ளது. அதன் சொற்களஞ்சியத்தில் சுமார் 15% மட்டுமே திராவிடமாக உள்ளது. மீதமுள்ள சொற்கள் பலூச்சி, பாரசீகம், சிந்தி, உருது போன்ற அருகாமை மொழிகளில் இருந்து எடுக்கப்பட்டவை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பிராகுயின் உயிரெழுத்து அமைப்பு முற்றிலும் பலூச்சிலிருந்து எடுக்கப்பட்டது. அதே போன்று பிராகுயி மொழியிலிருந்து பலூச் மொழியும் பல வார்த்தகளை பெற்றிருக்கிறது.

பிராகுயி அடிப்படையில் பேச்சு மொழி என்பதாலும் அதனைப் பேசுபவர்கள் பெரும்பாலும் படிப்பறிவில்லாதவர்கள் என்பதாலும் இலக்கியப் பாரம்பரியம் அதிகம் கிடையாது. 1759-60 இல் மாலிக்தாத் கர்சின் கலாட்டி என்பவரால் எழுதப்பட்ட துஹ்ஃபத் அல் அஜைப் (அதிசயங்களின் பரிசு) பிராகுயியில் எழுதப்பட்ட முதல் படைப்பாகும். அதன் அசல் தொலைந்து போனதால் 1916 இல் மறுபதிப்பு செய்து மீட்கப்பட்டது.

சிந்துவெளி தமிழர்கள் தொடர்பு
மும்பை தாராவி முதல் பாகிஸ்தான் ஒரங்கி டவுன் வரை : உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதிகள்

Facebook

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிராகுயியின் எழுத்து முறை பெர்சிய அரெபிய முறையால் உருவாக்கப்பட்டது. இந்த எழுத்து முறைதான் இந்த வட்டாரத்தின் மற்ற மொழிகளுக்கும் உள்ளது. பிறகு சர் டெனிஸ் பிரேஸ் எனும் ஆங்கிலேயர் பிராகுயி மொழியின் அடிப்படை இலக்கணத்தை முதலில் எழுதினார். மக்களிடம் படிப்பறிவின்மை நிலவுவதால் பிராகுயி மொழியில் வெளியிட்டு முயற்சிகள் சிரமமாக உள்ளன.

இன்று பிராகுயி மொழி ஐ.நா.வின் யுனெஸ்கோவால் அழிந்து வரும் மொழியாக பட்டியலிடப்பட்டுள்ளது. வாழ்வாதரப் பிரச்சினைகள் மற்றும் அரசின் ஆதரவின்மை காரணமாக பிராகுயி பேசும் மக்கள் குறைந்து வருகின்றனர். பலூச்சிகளின் மேலாதிக்கத்தால் பிராகுயி பேசும் மக்கள் பலூச்சை பேசும் நிலை அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் அரசு உருது மொழிக்கு முதன்மை அந்தஸ்து வழங்கியுள்ள நிலையில் மற்ற தாய்மொழிகள் அரசியல் காரணங்களால் ஓரங்கட்டப் பட்டுள்ளன.

இவற்றையும் மீறி பிராகுயி பல நூற்றாண்டுகளாக உயிர் பிழைத்திருப்பது அதிசம். அதை இறக்க அனுமதித்தால் அது நிச்சயம் பெரும் வரலாற்றுச் சோகமாக இருக்கும். ஏனெனில் சிந்து சமவெளி - திராவிடம் ஆகியவற்றின் மொழி ஆதராமாக பாகிஸ்தானில் பிராகுயி மட்டுமே உள்ளது. அதைக் காப்பாற்ற வேண்டியது திராவிட மொழி பேசுபவர்கள் குறிப்பாக தமிழர்களின் கடமை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com