Muana Lao : 40 ஆண்டுகளுக்கு பின் வெடித்த உலகின் மிகப் பெரிய எரிமலை - என்ன நடக்கிறது?

உருகிய பாறைகள் மக்கள் வசிக்கும் பகுதிகளை அடைய ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் ஆகலாம் என்றாலும் எரிமலைக் குழம்பு கீழ்நோக்கிப் பாய்வதால் சுற்றுப்புறங்களை அடையலாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்துகின்றன.
Hawaii Volcano Muana Lao
Hawaii Volcano Muana LaoTwitter
Published on

ஹவாயில் உள்ள மவுனா லோவா என்ற உலகின் மிக பெரிய ராட்சத எரிமலை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்துள்ளது.

பூமியின் உட்புறத்திலுள்ள வெப்பமான கற்குழம்பு வெடித்து வெளியேறும் பகுதியை எரிமலை என்கிறோம். வெப்பமான பாறைகள் மேல் நோக்கி வருவதாலும் எரிமலைகள் உண்டாகின்றன. 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஹவாயில் உள்ள மவுனா லோவா எரிமலை வெடித்துள்ளது.

இப்போதைக்கு, எரிமலைக்குழம்பு எந்த வீடுகளையும் அச்சுறுத்தவில்லை மற்றும் மக்களை வெளியேற்ற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.

உருகிய பாறைகள் மக்கள் வசிக்கும் பகுதிகளை அடைய ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் ஆகலாம் என்றாலும் எரிமலைக் குழம்பு கீழ்நோக்கிப் பாய்வதால் சுற்றுப்புறங்களை அடையலாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்துகின்றன.

மவுனா லோவா, சல்பர் டை ஆக்சைடு மற்றும் பிற வாயுக்களை உமிழ்கிறது. அவை சூரிய ஒளியில் உள்ள நீராவி, ஆக்ஸிஜன் மற்றும் தூசியுடன் கலக்கும் போது எரிமலை புகை அல்லது வாயுக்கள் கொண்ட மூடுபனி உருவாகிறது.

Hawaii Volcano Muana Lao
டோங்கா எரிமலை வெடிப்பு: பசிபிக் பெருங்கடலில் உருவான புதிய நிலப்பரப்பு- என்ன நடக்கிறது?

இதன் விளைவாக, மாநில சுகாதார அதிகாரிகள்

வெளிப்புற பிற செயல்பாடுகளை மக்கள் தவிர்க்க வலியுறுத்தி வருகின்றனர். மவுனா லோவா கடைசியாக 1984 இல் வெடித்தது. ஆனால் ஹவாயில் இருக்கும் மற்றொரு எரிமலையான கிலாவியா எரிமலை செப்டம்பர் 2021 முதல் ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ந்து வெடித்து வருகிறது.

தொடர்ச்சியான பெரிய பூகம்பங்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மவுனா லோவா வெடிப்பு தொடங்கியது. இது பின்னர் பிளவு மண்டலத்தில் உருவாகும் துவாரங்களுக்கு பரவியது.

ஹவாய் எரிமலை ஆய்வகத்தின் விஞ்ஞானி கென் ஹான் கூறுகையில்

இந்த வெடிப்பின் போது எரிமலையின் தென்மேற்கு பிளவு மண்டலத்தில் கூடுதல் துவாரங்கள் உருவாகும் என்று எதிர்பார்க்கவில்லை என்றார்.

1984 இல் வடகிழக்கில் இருந்து மவுனா லோவா வெடித்தது. அந்த நேரத்தில், எரிமலைக் குழம்பு ஹிலோவை நோக்கிச் சென்றதே தவிர நகரத்திலிருந்து சில மைல்கள் தொலைவில் நின்றது என்றார்.

Hawaii Volcano Muana Lao
வெடிக்கும் எரிமலை : 4000 நிலநடுக்கங்களை எதிர்கொண்ட அச்சத்தில் ஐஸ்லாந்து - அச்சத்தில் உலகம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com