Hippie: இசை, இலக்கியம், கஞ்சாவில் வாழ்ந்த இளைஞர் கூட்டம்- இவர்களுக்கு என்ன நடந்தது?

இவர்கள் ஒவ்வொரு ஊருக்கும் சென்ற பிறகு அங்கிருக்கும் மிகக் குறைந்த விலையிலான ஹோட்டல்களில் தங்குவர். ஒரு அறையில் பத்து பதினைந்து பேர் நெருக்கடித்து இருந்தாலும் கஞ்சா புகைப்பது, கித்தார் வாசிக்க கேட்பது, புத்தகங்கள் வாசிப்பது, பாடல்கள் எழுதுவது என ஏதோ ஒன்றில் மூழ்கியிருந்தனர்.
Hippie: இசை, இலக்கியம், கஞ்சாவில் வாழ்ந்த இளைஞர் கூட்டம்- இவர்களுக்கு என்ன நடந்தது?
Hippie: இசை, இலக்கியம், கஞ்சாவில் வாழ்ந்த இளைஞர் கூட்டம்- இவர்களுக்கு என்ன நடந்தது?Twitter

"வானவில்லைப் போலே இளமையடா, தினம் புதுமையடா, அதை அனுபவிடா" என உலகெங்கும் சுற்றித் திரிந்த ஒரு கூட்டம் தான் ஹிப்பிகள்.

அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய இளைஞர்கள் உருவாக்கிய இயக்கம் தான் ஹிப்பி என்பது. இந்த இயக்கத்துக்கு தலைவர்கள் கிடையாது, செயலாளர்கள் கிடையாது, நிர்வாகிகள் கிடையாது, உறுப்பினர்களும் கிடையாது.

சுதந்திரமாக சுற்றித்திரியும் இளைஞர்கள் கூட்டம் தான் ஹிப்பி. இவர்களுக்கு என எந்த கட்டுப்பாடும் கிடையாது, முடி வெட்டாமல், குளிக்காமல், பாலியல் கட்டுப்பாடுகள் இல்லாமல், கையில் கித்தாரோ கவிதைப் புத்தகங்களோ ஏந்திக்கொண்டு, கஞ்சா புகைத்துக்கொண்டு உலகின் எல்லா தெருக்களையும் வலம் வந்த கூட்டம் ஹிப்பிகள்.

1950, 60களில் பல்கலைக்கழகங்களில் இருந்து மாணவர்கள் கிளம்பி இசை, கவிதைகள், ஓவியம், இலக்கியங்கள் என கலைகளுடன் பொருந்திய வாழ்க்கை தங்களுக்கு போதுமென முடிவெடுத்துத் திரிய பலக் காரணங்கள் இருந்தன.

அமெரிக்காவிலும் சரி ஐரோப்பாவிலும் சரி பல கலாச்சார மாற்றங்கள் உருவாகின. ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான குரல்கள் இளைஞர்களிடம் அதிகரித்தன.

படித்து வேலைக்கு செல்வது, யாரோ ஒரு முதலாளிக்கு உழைத்துக் கொட்டுவது, குடும்ப உறவுச் சிக்கல்களுக்குள் சிக்கித் தவிப்பதை விட தெருதெருவாக சுற்றுவதே மேல் என இளைஞர்கள் நினைத்தனர்.

ஒரு சமூகத்தில் மேல்தட்டில் இருக்கும் வர்கம் மட்டுமே எல்லா இன்பத்தையும் அனுபவிக்கும் பொருள்முதல்வாதத்துக்கு எதிரான வாழ்க்கை முறையை ஏற்படுத்திக்கொண்டனர். குறிப்பாக அமெரிக்காவின் வியட்நாம் போர் இளைஞர்களை பெரிதும் விரக்தியடையச் செய்தது.

இவர்களை ஆரம்பத்தில் பீட்னிக்ஸ் என்று அமெரிக்க ஊடகங்கள் அழைத்தன.

இவர்கள் ஐரோப்பாவிலிருந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, நேபாளம் எனப் பல நாடுகளுக்கு பயணம் செய்தனர். இந்த நாடுகளில் எங்கெல்லாம் சுலபாமாக கஞ்சா கிடைக்குமோ அங்கெல்லாம் சுற்றி வந்தார்கள்.

இவர்களது பயணத்தை கஞ்சா பயணம் எனக் கூறின அமெரிக்க ஊடகங்கள். 1967ம் ஆண்டு போல பீட்னிக் என்பதற்கு பதிலாக இவர்களைக் குறிப்பிட ஹிப்பி என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர்.

ஹிப்பிகள் இசையின் மீது பெரிய ஆர்வம் கொண்டிருந்தனர். ஏனெனில் இலக்கியங்களைப் போல இசையும் அவர்கள் மீது பெரும் தாக்கம் செலுத்தியது.

ரோலிங் ஸ்டோன் முதல் பீடில்ஸ் வரை ராக் இசைக் குழுவினரின் பின்னால் சுற்றினர். இசையும் கின்ஸ்பர்கின் ‘Howl’, வில்லியம் பரோஸின் ‘Naked Lunch’, ஜாக் கெரோஆக்கின் ‘On the Road’ போன்ற புத்தகங்களும் இவர்களை உலகை சுற்றிவர உந்தித்தள்ளின.

முதலீட்டு சமூகத்துக்கும், செல்வம் குவிக்கும் வாழ்க்கை முறைக்கும் எதிரானவர்களாக இருந்த இவர்கள், உலக சந்தைகளை வெறுத்தனர் என்றேக் கூறலாம்.

தாங்கள் எந்த ஆடை அணிகிறோம் என்பதைப் பற்றி கவலையற்றவர்களாக இருந்தனர். பெரும்பாலும் சிறிய ஆடைகளை அணிந்தனர். முடி திருத்துவதைப் புறக்கணித்தனர்.

இவர்கள் ஒவ்வொரு ஊருக்கும் சென்ற பிறகு அங்கிருக்கும் மிகக் குறைந்த விலையிலான ஹோட்டல்களில் தங்குவர். ஒரு அறையில் பத்து பதினைந்து பேர் நெருக்கடித்து இருந்தாலும் கஞ்சா புகைப்பது, கித்தார் வாசிக்க கேட்பது, புத்தகங்கள் வாசிப்பது, பாடல்கள் எழுதுவது என ஏதோ ஒன்றில் மூழ்கியிருந்தனர்.

Hippie: இசை, இலக்கியம், கஞ்சாவில் வாழ்ந்த இளைஞர் கூட்டம்- இவர்களுக்கு என்ன நடந்தது?
ஜெர்மனி : பொது இடங்களில் பெண்கள் மேலாடையில்லாமல் இருக்க அனுமதி - நிர்வாணத்தை பழகுவது ஏன்?

பாகிஸ்தான் ஹிப்பிகளுக்கு மிகவும் பிடித்தமான இடமாக இருந்திருக்கிறது. அங்கிருந்து இந்தியாவின் ஹிமாச்சலில் இருக்கும் குலு மணாலிக்கு நுழைவர்.

இந்த பகுதியில் கஞ்சா பயிரிடப்படுவதால் இது அவர்களுக்கான தேசமாக இருந்திருக்கிறது. வாரணாசியில் அரசாங்கமே கஞ்சா விற்கும் கடைகளை வைத்திருந்தது மேலும் வசதி.

குளிர்காலத்தில் பனியில் வாடாமல் பாதுகாப்பாக கோவா வந்து சேர்வார்கள். அங்கு அவர்களுக்கு நினைத்த நேரத்தில் கஞ்சா கிடைக்கும்.

தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் கேரளா ஹிப்பிகளுக்கு மிகவும் பிடித்தமான இடமாக இருந்திருக்கிறது. இங்கு வாடகைக்கு வீடே எடுத்து வசதியாக தங்கியுள்ளனர்.

மொழி புரியாத எத்தனையோ இடங்களுக்கு பயணித்த போதும் ஹிப்பிகள் சைகை மொழியில் பேசியே எல்லாரிடமும் நட்பு கொள்ள பழகியிருந்தனர்.

சார்லஸ் என்ற சீரியல் கில்லர் 1960 - 80 ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட கொலைகளில் தொடர்புடையவர். இந்த கொலையாளிக்கு இலக்காகினர் பல ஹிப்பிகள்.

ஹிப்பிகளில் சிலர் குற்ற செயல்களில் ஈடுபட்டு சிறைக்கு சென்றனர். சிலருக்கு கடுமையான நோய்கள் வந்தது. சிலர் பணம் தீர்ந்து திரும்ப வழியிலாமல் தவித்தனர் (இவர்களில் சிலர் இந்தியாவிலேயே குடியேறினர்). பலர் உயிர் பிழைத்து வீடு திரும்பினர்.

ஹிப்பிக்கள் பலருக்குள் சண்டைகள் ஏற்பட்டது. ரோலிங் ஸ்டோன் கான்சர்டில் நடந்த கொலை உட்பட சில வன்முறை சம்பவங்கள் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

மனவிரிவு, உலக அமைதி, கட்டற்ற சுதந்திரம், ‘Make love, Not war’ என்றெல்லாம் பேசிய கூட்டத்தில் வன்முறைகள் நடப்பது பின்னடைவானது.

Hippie: இசை, இலக்கியம், கஞ்சாவில் வாழ்ந்த இளைஞர் கூட்டம்- இவர்களுக்கு என்ன நடந்தது?
கர்ப்பம் தரிக்க இந்தியாவுக்கு வரும் ஜெர்மனி பெண்கள்: தூய ஆரியர்கள் இருப்பது உண்மையா?

1979ம் ஆண்டு ஆப்கானிஸ்தானை ரஷ்யா கைப்பற்றியது ஹிப்பி பயணிகளுக்கு தடையாக மாறியது. ஈராக், ஈரான் மீது படை எடுத்ததால் மத்திய கிழக்கு வழியைப் பயன்படுத்த முடியவில்லை.

லெபனானில் உள்நாட்டுப் போர் நடைபெற்றது. ஹிப்பிகளுக்கு விருப்பமானதாக இருந்த காஷ்மீர் அமைதியை இழந்தது ஹிப்பிகள் அமைதியைப் பெரும் ஒரே இடமாக திகழ்ந்தது கோவா. அங்கிருந்து சிலர் வான் வழியாக தொடர்ந்து பயணித்தனர். இன்றும் ஹிப்பியாக "உலகம் முழுவதும் என்னுடையது" எனக் கூறி பயணிக்கும் நபர்களைப் பார்க்க முடியும்!

Hippie: இசை, இலக்கியம், கஞ்சாவில் வாழ்ந்த இளைஞர் கூட்டம்- இவர்களுக்கு என்ன நடந்தது?
NUDISM: ஆடை இல்லை, ஆபாசமும் இல்லை - இந்தியாவில் பரவும் புதிய கலாச்சாரம் ஆபத்தானதா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com