நீங்கள் '1 மில்லியன் டாலர்' சம்பாதிக்க எவ்வளவு காலம் ஆகலாம்? - சமீபத்திய ஆய்வு சொல்வதென்ன?

ஒரு நாட்டின் சராசரி மாத வருமானத்தின் அடிப்படையில் அங்குள்ள தொழிலாளர்களால் தங்கள் வாழ்க்கையில் ஒரு மில்லியன் டாலர்கள் சம்பாதிக்க முடியுமா? முடியுமெனில் அதற்கு எவ்வளவு காலம் ஆகலாம் என ஆராய்ந்து கூறியுள்ளனர்.
நீங்கள் '1 மில்லியன் டாலர்' சம்பாதிக்க எவ்வளவு காலம் ஆகலாம்? - சமீபத்திய ஆய்வு சொல்வதென்ன?
நீங்கள் '1 மில்லியன் டாலர்' சம்பாதிக்க எவ்வளவு காலம் ஆகலாம்? - சமீபத்திய ஆய்வு சொல்வதென்ன?Twitter

சராசரியாக ஒருவர் வேலை செய்து மில்லியன் டாலர்கள் சம்பாதிக்க முடியுமா? அப்படி முடியும்மென்றால் அதற்கு எவ்வளவு காலமாகும்?

உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளில் இந்த அளவு மாறுபடுகிறது. பிகோடி என்ற இ-காமர்ஸ் தலம் எந்தெந்த நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் எவ்வளவு காலத்தில் மில்லியனர்கள் ஆகலாம் என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஒரு நாட்டின் சராசரி மாதச் சம்பளத்தை நும்பியோ என்ற தளம் கூறுகிறது. இதில் உலகம் முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கானோர் தங்கள் நாட்டு சராசரி சம்பளத்தைக் கண்காணித்து வருகின்றனர்.

மொத்தமாக 102 நாடுகளின் சம்பளத்தைக் கருத்தில் கொண்டு இந்த அறிக்கைத் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் முதலிடத்தைப் பெற்றிருப்பது சுவிட்சர்லாந்து. சுவிட்சர்லாந்தில் சராசரி சம்பளம் வாங்கும் ஒரு தொழிலாளி 14 ஆண்டுகள் 3 மாதத்தில் 1 மில்லியன் சம்பாதிக்கிறார்.

இந்தியா இதில் 62வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் ஒரு சராசரி தொழிலாளி 148 ஆண்டுகள் 5 மாதம் வேலை செய்தால்தான் மில்லியன் டாலர்கள் சம்பாதிக்க முடியுமாம்.

இந்தியாவை விட பொருளாதாரத்தில் குறைந்த நாடுகளான தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளை இந்தியா முந்தியிருக்கிறது.

நீங்கள் '1 மில்லியன் டாலர்' சம்பாதிக்க எவ்வளவு காலம் ஆகலாம்? - சமீபத்திய ஆய்வு சொல்வதென்ன?
மக்கள் தொகையோ வெறும் 38,000; நிறுவனங்களோ 4000 - ஒரு வாவ் நாடு

இந்தியாவில் வேலை செய்யும் ஒருவரை விட சீனாவில் வேலை செய்யும் ஒருவரால் 71 ஆண்டுகள் விரைவாக 1 மில்லியன் சம்பாதிக்க முடியும்.

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் இந்த வித்தியாசம் 120 ஆண்டுகளாக இருக்கிறது.

ஆச்சரியமளிக்கும் விதமாக சுவிட்சர்லாந்துக்கு அடுத்த இடத்தில் சிங்கப்பூர் இருக்கிறது. 16 ஆண்டுகள் 11 மாதத்தில் சிங்கப்பூர் தொழிலாளரால் ஒரு மில்லியன் சம்பாதிக்க முடியும்.

நீங்கள் '1 மில்லியன் டாலர்' சம்பாதிக்க எவ்வளவு காலம் ஆகலாம்? - சமீபத்திய ஆய்வு சொல்வதென்ன?
இந்தியா: பாஜக ஆட்சியில் இருமடங்காக உயர்ந்த தனிநபர் வருமானம்- சாமானிய மக்களுக்கு என்ன பயன்?

அடுத்த இடத்தில் லக்ஸம்பர்க் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து 4வது மற்றும் ஐந்தாவது இடங்களில் அமெரிக்கா மற்றும் ஐஸ்லாந்து நாடுகள் இருக்கின்றன.

மிகவும் வருத்தமளிக்கும் விதமாக நைஜீரியா 500 ஆண்டுகளும் உகாண்டா 523 ஆண்டுகளும் எகிப்து மக்கள் 603 ஆண்டுகளும் வேலை செய்தால் தான் ஒரு மில்லியன் டாலர் சம்பாதிக்க முடியும்.

நீங்கள் '1 மில்லியன் டாலர்' சம்பாதிக்க எவ்வளவு காலம் ஆகலாம்? - சமீபத்திய ஆய்வு சொல்வதென்ன?
2022: ஆசியாவிலேயே மோசமான நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு- கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிறதா?

சுமாரான நிறுவனத்தை நடத்தும் முதாலாளி கூட சில ஆண்டுகளில் சம்பாதிக்க முடியும் மில்லியன் டாலர் பணம் ஒரு சாதாரண தொழிலாளியால் வாழ்நாள் முழுவதும் வேலை செய்தால் கூட பெற முடியாதது.

2021 நிலவரப்படி இந்தியாவில் 7.96 லட்சம் மில்லியனர்கள் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் '1 மில்லியன் டாலர்' சம்பாதிக்க எவ்வளவு காலம் ஆகலாம்? - சமீபத்திய ஆய்வு சொல்வதென்ன?
சீனா, ரஷ்யா, யூரோப், தென்னமெரிக்கா : டாலருக்கு எதிராக ஒன்றுகூடும் உலகம் - மாற்றம் வருமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com