மனிதர்களும் விலங்குகளும் ஒரே நிலப்பரப்பில் காலம் காலமாக வாழ்ந்த கதைகளை நாம் கேள்விப்பட்டிருப்போம்.
காலப்போக்கில் ஏதாவது ஒரு உயிரினத்தின் ஆதிக்கம் பெருகி, மற்ற உயிரினங்கள் அந்த பகுதியில் வாழ தகுதியற்று போகலாம்.
அப்படி, ஒரு காலத்தில் இந்த தீவில் மனிதர்களும் பாம்புகளும் சேர்ந்தே வாழ்ந்தன. பாம்புகளின் எண்ணிக்கையும் ஆதிக்கமும் மெல்ல தலைத் தூக்க, மனித வாழ்விற்கு அவை அச்சுறுத்தலாக மாறியது. மனிதர்கள் வாழ அல்ல, நடமாடுவதற்கு கூட இங்கு அனுமதியில்லை.
எங்கே இருக்கிறது இந்த பாம்பு தீவு? இதன் கதை என்ன?
பிரேசில் கடற்பரப்புகளில் இருக்கும் தீவுகளில் ஒன்று, இல்ஹா டி கொய்மாடா கிராண்டே தீவு (Ilha da Queimada Grande) அல்லது பாம்பு தீவு. பிரேசிலின் சாவோ பாவுலோ மாவிலத்திலிருந்து சுமார் 90 கிமீ தொலைவில் அமைந்துள்ளது
பார்ப்பவர்களை மெய்மறக்கச் செய்யும் அளவிற்கு கண்கவர் காட்சியளிக்கிறது கொய்மாடா தீவு. இந்த தீவினை பார்ப்பவர்களுக்கு ஒரு முறையாவது உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்று தோன்றுமாம்.
ஆனால் அது ஒரு டிராப்!
இந்த தீவைப் பற்றி அறியாமல் உள்ளே கால் வைத்துவிட்டால், உயிர்பிழைத்து தப்பி வருவது நடக்காத காரியம் என்கின்றனர்.
பாறைகளால் சூழப்பட்டிருப்பதாலும், அதிக வெப்ப மண்டல பகுதியாகவும் இருப்பதால் மனிதர்கள் அல்லது மற்ற பாலூட்டி இனங்கள் இங்கு வாழ தகுதியற்றதாக இருக்கிறது.
ஆனால், மற்றொரு புறம், ஒரு சதுரடிக்கு ஒரு பாம்பு என்கிற விகிதத்தில் கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்புகளால் சூழப்பட்டுள்ளது கொய்மாடா தீவு என கூறுகிறார் பயாலஜிஸ் மார்செல்லா டுவார்ட்டே.
4 லட்சத்திற்கும் அதிகமான பாம்புகள் வாழும் இந்த தீவில் அதிக எண்ணிக்கையில் இருப்பது கோல்டன் லான்ஸ்ஹெட் வைப்பர் என்ற பாம்பு வகை. இவை 70 சென்டிமீட்டர் வரை வளரக் கூடியவை.
இந்த லான்ஸ்ஹெட் வைப்பர் தான் பாம்புத் தீவின் அடையாளமாகவே அறியப்படுகிறது. கொய்மாடா தீவை தவிர வேறு எங்கும் இந்த கோல்டன் லான்ஸ்ஹெட் வைப்பர் பாம்பினை பார்ப்பது கடினம். 4000த்துக்கும் மேற்பட்ட கோல்டன் லான்ஸ்ஹெட் வைப்பர்கள் இத்தீவில் காணப்படுகிறது.
இதன் விஷமானது மனிதர்களை தாக்கினால், சதைப்பகுதியை ஊடுருவி நொடிப்பொழுதில் ரத்தத்தில் கலந்து உடல் உறுப்புகளை செயலிழக்கச் செய்யும்.
தவளை கரன்சி, தவளை பாலம் - தவளையை சின்னமாக கொண்ட ஒரு ஊர் - எங்கே இருக்கிறது?
உள்ளூர் வாசிகள் இந்த தீவில் பாம்பு எப்படி வந்தது என்பதற்கு பல கதைகளை சொல்கின்றனர்.
கொய்மாடா தீவில் அதிசய, அரிதான பொக்கிஷங்கள் நிறைந்திருப்பதாகவும், அதனை பாதுகாக்க கடல் கொள்ளையர்கள் பாம்புகளை அங்கு விட்டதாகவும் ஒரு கதை சொல்கிறது. தீவில் விடப்பட்ட பாம்புகள், அதனை தாக்கவோ அழிக்கவோ எதிரிகள் இல்லாதததால், இனப்பெருக்கம் செய்து தங்களின் தீவாக மாற்றிக்கொண்டது என உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, கிட்ட தட்ட 10,000 ஆண்டுகளுக்கு முன் பிரேசிலின் நிலப்பரப்புடன் இணைந்திருந்த கொய்மாடா, காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட கடல் மட்ட உயர்வு தான் இந்த தீவு பிரித்துள்ளது.
இந்த பாம்புகள் பெரும்பாலும், தீவிற்கு புலம்பெயர்ந்து வரும் பறவைகளை வேட்டையாடி உண்டன. ஆரம்பக்காலத்தில் லான்ஸ்ஹெட் வைப்பர்கள் ஒரு பறவையை தாக்கினால், அந்த பறவைகள் சில நிமிடங்களுக்கு பறந்து சென்று பிறகு உயிரிழந்தன.
இதனால் பாம்புகளுக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை. இதனால், இந்த பாம்புகள் பரிணாம வளர்ச்சி அடைந்தன. பிரேசில் நாட்டில் இருக்கும் இதே லான்ஸ்ஹெட் குடும்பத்தின் மற்ற பாம்புகளை விட இது 5 மடங்கு விஷத்தன்மை உள்ளதாக மாறியது. இதன் பிறகு ஒரு பாம்பு, ஒரு பறவையை தீண்டினால், அந்த நொடியிலேயே அவை உயிரிழந்தன.
இவ்வளவு நச்சுத்தன்மைக் கொண்ட இந்த லான்ஸ்ஹெட் பாம்பு மனிதர்களை கடித்தால், கடிப்பட்ட பகுதி அழுகிவிடுமாம். மேலும் சில நிமிடங்களிலேயே சிறுநீரகம் செயலிழக்கும் எனவும், மூளையில் ரத்தக் கசிவு உருவாகி மரணம் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.
இவ்வளவு கொடிய விஷ பாம்புகள், அதுவும் ஒரு சதுரடிக்கு ஒரு பாம்பு என்றால், அங்கு மனிதர்கள் வாழ அல்ல, கால் வைப்பது கூட கஷ்டம் தான். ஆனாலும், 1920களில் இந்த தீவில் ஒரே ஒரு குடும்பம் மட்டும் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் இந்த தீவின் காவலர்களாக இருந்தனர்.
ஆனால், ஒரு நாள் இரவு தங்களது வீட்டின் ஜன்னல்களை சரியாக தாழிடாமல் அவர்கள் உறங்கியதால், பாம்புகள் வீட்டிற்குள் புகுந்து அனைவரையும் தாக்கி கொன்றதாக கூறப்படுகிறது.
இதனால் பிரேசில் அரசு மனிதர்கள் அப்பகுதிக்கு செல்ல தடை விதித்துள்ளது. ராணுவம் மற்றும் ஆராய்ச்சிக் குழுவினர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த தீவின் சுற்றுவட்டாரத்தில் கூட மனிதர்கள் நடமாட தடை போடப்பட்டுள்ளது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust