திரையரங்குகளில் பாப்கார்ன் எப்படி பிரபலமானது தெரியுமா?

'சத்யம் சினிமாஸ்' என்றாலே பாப்கார்ன்தான் நினைவிற்கு வரும். அந்த சுவையான பாப்கார்னை சாப்பிடுவதற்கெனவே அந்த திரையரங்கிற்கு செல்வார்கள். இவ்வளவு சுவையான பாப்கார்ன் எங்கிருந்து வருகிறது என்று இங்கே தெரிந்து கொள்வோம்.
How Popcorn Became A Movie Theater Staple
How Popcorn Became A Movie Theater StapleTwitter
Published on

கார்ன் முதலில் மத்திய அமெரிக்காவில் வளர்க்கப்பட்டது. 1800 களில் அமெரிக்காவின் பிரபலமான ஸ்நாக்ஸாக மாறியது. அந்த நேரத்தில் மற்ற தின்பண்டங்களுடன் ஒப்பிடும்போது, ​​இதைச் செய்வது மிகவும் எளிதானதாக இருந்தது.

1885 ஆம் ஆண்டில் பாப்கார்ன் தயாரிப்பு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டபோது அது மேலும் எளிதாகிவிட்டது.

பாப்கார்ன் தயாரிப்பது எளிதாக இருந்ததால், அதை வாங்குவதும் மலிவாக இருந்தது. மக்களிடம் வரவேற்பு கிடைத்தவுடன் அதன் தேவை அதிகரித்தது.

மக்கள் திரையரங்கம் மற்றும் அங்கு விற்கப்படும் உணவுகளுக்காக செலவழிக்க தொடங்கினர். இதனால் பாப்கார்ன் மற்றும் தியேட்டர் என இவ்விரு தொழில்களும் இணைந்தன.

குறிப்பிட்ட பாப்கார்ன் விற்பனையாளரை தினசரி கட்டணத்திற்கு அரங்கத்திற்கு வெளியே பாப்கார்ன் விற்க தியேட்டர்கள் அனுமதித்தன.

அதன் விற்பனை அமோகமாக இருந்தது. இதனால் 1940 களில் திரையரங்க உரிமையாளர்கள் இடைத்தரகர்களைக் குறைத்து, பாப்கார்னை அவர்களே விற்க தொடங்கினர்.

திரையரங்குகளுக்கு பாப்கார்ன் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு அந்த துறைக்கு நல்ல லாபத்தை கொடுத்தது. மேலும் பாப்கார்ன் இப்போது திரையரங்குகளில் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது.

How Popcorn Became A Movie Theater Staple
பாலிவுட் சினிமா 2022 : நிச்சயம் பார்க்க வேண்டிய 10 படங்கள் - Top 10 Hindi Movies in 2022

சென்னையில் பிரபலமான சத்யம் பாப்கார்ன்

'சத்யம் சினிமாஸ்' என்றாலே பாப்கார்ன்தான் நினைவிற்கு வரும். அந்த சுவையான பாப்கார்னை சாப்பிடுவதற்கெனவே அந்த திரையரங்கிற்கு செல்வார்கள்

இவ்வளவு சுவையான பாப்கார்ன் எங்கிருந்து வருகிறது?

அமெரிக்காவின் நெப்ராஸ்காவில் இருக்கும் ப்ரிஃபெர்ட் பாப்கார்ன் (preferred popcorn) என்னும் நிறுவனத்திடம் இந்த பாப்கார்ன் பெறப்படுகிறது

நெப்ராஸ்கா, அமெரிக்காவில் மூன்றாவது பெரும் கார்ன் (சோளம்) பயிர்செய்யப்படும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

15 வருடங்களுக்கு முன்னர் சத்யம் சினிமாஸ் நிறுவனத்தின் தலைவர் 'கிரண் ரெட்டி'யும் மேலாளர் 'பவேஷ் ஷா'வும் 'ஹாங்காங்'கில் ஒரு திரையரங்குக்கு சென்றிருந்தபோது அங்கிருந்த ஒரு கடைக்குச் சென்று பாப்கார்ன் சுவைக்க நேர்ந்திருக்கிறது.

அந்த சுவை அற்புதமாக இருந்ததைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்தே தொடர்ந்து 15 வருடங்களாக மூலப்பொருட்களை இறக்குமதி செய்து, இங்கு பாப்கார்ன் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது.

How Popcorn Became A Movie Theater Staple
காலநிலை மாற்றத்தால் காணாமல் போகும் இந்த உணவுகள் குறித்து தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com