பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு, ராஜினாமா செய்த இம்ரான்கான்

இம்ரான் ஆட்சிக்காலத்தில் பாகிஸ்தானில் பணவீக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரித்திருக்கிறது. விலை வாசி உயர்வு மக்களை வெகுவாக பாதித்துள்ளது. பொருளாதார நெருக்கடியைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் இம்ரான்கானுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்தனர்.
இம்ரான்கான்
இம்ரான்கான்NewsSense
Published on

உலகக் கோப்பை வென்ற முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனான பிரதமர் இம்ரன் கான் கடந்த 2018ம் ஆண்டு சிறிய கட்சிகளின் ஆதரவோடு முழு பெரும்பாண்மை இல்லாமல் ஆட்சிக்கு வந்தார். ஊழலை ஒழித்து புதிய பாகிஸ்தானை உருவாக்குவேன் எனப் பிரச்சாரத்தில் முழங்கி அதிகாரத்தை தன் வசப்படுத்தியவர் ஆட்சியில் அவர் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதோடு மேலும் பல சிக்கல்களும் உருவாக்கியிருக்கிறார். இதனால் அவரது பதவியை நேற்று ராஜினாமா செய்ததுடன் நாடாளுமன்றத்தையும் கலைத்துவிட்டார்.

இம்ரான் ஆட்சிக்காலத்தில் பாகிஸ்தானில் பணவீக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரித்திருக்கிறது. விலை வாசி உயர்வு மக்களை வெகுவாக பாதித்துள்ளது. பொருளாதார நெருக்கடியைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் இம்ரான்கானுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்தனர்.

நேற்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வாக்கு எடுக்கப்படாமலே அரசியலமைப்பின் 5ஆம் பிரிவுக்கு எதிராக இருப்பதாகத் துணைச் சபாநாயகர் அவையில் புறந்தள்ளப்பட்டது. 342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்தால் இம்ரான்கான் நிச்சயம் வெல்ல முடியாது என்பதாலும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டதாகப் பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.

இம்ரான்கான்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை கொல்ல சதியா? என்ன நடக்கிறது அங்கே?

தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அமளி செய்த எதிர்க்கட்சிகள் தீர்மானத்தைத் துணைச் சபாநாயகர் நிராகரித்தது செல்லாது என்றும், ஷெபாஸ் ஷெரீப்பை நாட்டின் புதிய பிரதமராக நாங்கள் நியமிக்கிறோம் என்றும் கூறினர். சிக்கலின் தீவிரத்தன்மையை புரிந்து கொண்ட இம்ரான்கான், நாட்டின் அதிபருக்கு நாடாளுமன்றத்தைக் களைத்துவிட வேண்டி கடிதம் அனுப்பினார். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

3 மாதத்தில் தேர்தல் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதுவரை இம்ரான் பதவியிலிருப்பார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தை நாடி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நடத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

பாகிஸ்தான்
பாகிஸ்தான் Twitter

நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி மூலம் உரையாடிய இம்ரான்கான், “நாட்டு மக்கள் தேர்தலுக்குத் தயாராக வேண்டும். நாட்டின் எதிர்காலத்தை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். வெளி ஆட்கள் அல்ல” எனப் பேசியதுடன் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்த விரும்புவது அமெரிக்காவின் சதி என்றும் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகளும் அமெரிக்காவும் மறுத்துள்ளனர்.

இம்ரான்கான்
பாகிஸ்தான் : அமெரிக்காவை எதிர்க்கும் இம்ரான் கான்; இந்தியாவிற்கு பாராட்டு - Latest Updates

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com