Imran Khan
Imran KhanNewsSense

பாகிஸ்தான் : அமெரிக்காவை எதிர்க்கும் இம்ரான் கான்; இந்தியாவிற்கு பாராட்டு - Latest Updates

அதுமட்டுமல்லாமல் மீண்டும் அவர் இந்தியாவைப் பாராட்டி உள்ளார். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கிறது என அவர் கூறி உள்ளார்.
Published on

சிக்கலில் இருக்கின்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் இந்தியாவை பாராட்டி உள்ளார்.

தான் அண்மையில் ரஷ்யா சென்றதால் ஒரு சக்திமிக்க நாடு தம் மீது கோபம் கொண்டுள்ளதாக அவர் கூறி உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் மீண்டும் அவர் இந்தியாவைப் பாராட்டி உள்ளார். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கிறது என அவர் கூறி உள்ளார்.


பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இம்ரான் கான் இவ்வாறு பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Biden
BidenNewsSense

அமெரிக்காவின் தலையீடு

தமது உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாகக் கூறி பாகிஸ்தான் அரசு இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதருக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

தாம் சுதந்திரமான ஒரு வெளியுறவுக் கொள்கை ஏற்படுத்த விரும்புகிறேன். ஆனால், அதற்கு அமெரிக்காவுக்குப் பிடிக்கவில்லை. தம்மை இந்த பதவியிலிருந்து நீக்க பார்க்கிறது என்பது இம்ரான் கானின் குற்றச்சாட்டு.

அமெரிக்கா சில வருடங்களாக சீனா மற்றும் ரஷ்யாவிடம் இணக்கம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. சீனா சில முதலீடுகளையும் பாகிஸ்தானில் செய்துள்ளது.

Imran Khan
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை கொல்ல சதியா? என்ன நடக்கிறது அங்கே?
NewsSense

இந்தியாவை புகழ்ந்த இம்ரான்

பிரிட்டன் வெளியுறவுத் துறை செயலாளர், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளில் தலையிட முடியாது என்கிறார். பின் ஏன் பாகிஸ்தானிற்கு மட்டும்? இது அவர்கள் பிழை அல்ல. நம் பிழை. சொந்த காலில் நிற்காத எந்த நாடும் எதிரிகளால் மதிக்கப்படமாட்டாது,” என்று வெள்ளிக்கிழமை கூட்டத்தில் இம்ரான் கான் பேசி உள்ளார்.

இந்தியாவின் வெளியுறவு கொள்கை சிறப்பானது. அது மக்கள் நலன் சார்ந்தது என்று அவர் பேசி உள்ளார்.

இந்தியாவின் வெளியுறவு கொள்கையை இம்ரான் கான் புகழ்வது இது முதல் முறை அல்ல. ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க இந்தியா முடிவு செய்ததை அடுத்து, அண்மையில், அதாவது மார்ச் 21 ஆம் தேதி அவர் இந்தியாவின் கொள்கையை இம்ரான் கான் பாராட்டி இருந்தார்.

Imran Khan
எரியும் இலங்கை : ”10 % ஃபசில் ராஜபக்‌ஷே” - எதிர்கட்சிகள் விமர்சனம்

போராட்டம் தொடரும்

தனியார் தொலைக்காட்சியான ARY-க்கு அளித்த பேட்டியில், இம்ரான் கான், சுதந்திரமான மற்றும் ஜனநாயக பாகிஸ்தானுக்கான தனது போராட்டத்தை தொடரப்போவதாக கூறியுள்ளார்

மேலும் பேசிய அவர், “ராணுவம் எனக்கு மூன்று வாய்ப்புகளை வழங்கி இருக்கிறது. நம்பிக்கையில்லாத் தீர்மானம், விரைவில் தேர்தல், பதவியிலிருந்து ராஜினாமா ஆகிய வாய்ப்புகள் என் முன் இருக்கின்றன.அந்நிய சக்திகளுடன் சேர்ந்துகொண்டு எதிர்கட்சிகளும் என்னை கொலை செய்ய திட்டமிடுகின்றனர். என்னை மட்டுமல்லாமல் என் மனைவியையும் கொல்ல திட்டமிடுகின்றனர். எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்பதை நாட்டு மக்களிடையே சொல்ல விரும்புகிறேன்,” என்று அவர் பேசியுள்ளார்.

பாகிஸ்தான் ராணுவ தலைவர் ஜெனரல் Qamar Bajwa
பாகிஸ்தான் ராணுவ தலைவர் ஜெனரல் Qamar BajwaNewsSense

ராணுவமும் அமெரிக்காவும்

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளைப் பாகிஸ்தான் ராணுவம் மறுத்துள்ளது. எங்களுக்கு இந்த அரசியல் பிரச்சினைகளுக்கும் தொடர்பு இல்லை எனக் கூறி உள்ளது ராணுவம்.

அதுமட்டுமல்லாமல் எப்போதும் போல அமெரிக்காவுடனான தங்கள் உறவு தொடரும் என கூறி உள்ளது.

பாகிஸ்தான் ராணுவ தலைவர் ஜெனரல் Qamar Bajwa, “ அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானுடனான எங்கள் உறவு எப்போதும் போல தொடரும்,” என கூறி உள்ளார்.

அது போல அமெரிக்காவும் இம்ரான் கான் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட், “இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை,” என தெரிவித்துள்ளார்.

logo
Newssense
newssense.vikatan.com