சீனா: உச்சத்தில் கொரோனா- அதிகம் தேடப்பட்ட வார்த்தை என்ன தெரியுமா?

சீனாவின் பிரபலமான தலங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட வார்த்தைகள் அதிகமாக தேடப்பட்டுள்ளதாக ஐஏஎன்எஸ் தளம் தெரிவித்துள்ளது
கொரோனா
கொரோனாTwitter
Published on

வரும் ஜனவரி 8 முதல் சீனாவில் பின்பற்றப்பட்டு வரும் தனிமைப்படுத்துதல் விதிமுறைகள் கைவிடப்படும் என சீன அதிகாரிகள் கடந்த திங்களன்று அறிவித்திருந்தனர்.

இதனையடுத்து பிரபலமான தலங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட வார்த்தைகள் அதிகமாக தேடப்பட்டுள்ளதாக ஐஏஎன்எஸ் தளம் தெரிவித்துள்ளது

கொரோனா பரவல் தொடங்கியது முதல் கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது ஜீ ஜின்பிங் தலைமையிலான சீனா அரசு.

அதில் ஜீரோ கோவிட் விதிமுறைகள் முக்கியமான கட்டுபாடாக இருந்தது.

சீனாவை தவிர மற்ற சில நாடுகளும் இந்த ஜீரோ கோவிட் விதிமுறைகளை பின்பற்றியது. மேலும் ஜீரோ கோவிட் பின்பற்றப்பட்டதால், உலகளவில் மற்ற நாடுகளை விட சீனாவில் குறைவான கொரோனா மரணங்களே இருந்தது என்றும் அநநாடு கூறுகிறது.

கொரோனா
கோவிட் 19 : மீண்டும் காட்டுத் தீ போல பரவும் கொரோனா - என்ன நடக்கிறது சீனாவில்?

இந்நிலையில், சமீப காலமாக ஜி ஜின்பிங் இந்த ஜீரோ கோவிட் கட்டுப்பாட்டை படிப்படியாக தளர்த்தி வருகிறார்.

கடந்த திங்களன்று, இதுவரை பின்பற்றப்பட்ட தனிமைப்படுத்துதல் விதிமுறைகள் முற்றிலுமாக வரும் ஜனவரி 8 முதல் கைவிடப்படும் என சீன அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் சீன மக்கள் பேரானந்தத்தில் இருக்கின்றனர்.

ஊரடங்கு, முழுமுடக்கம், நாட்டு எல்லைகள் மூடுதல், பரிசோதனைகள் என பல காரணங்களுக்காக சீனாவிற்குள் வரமுடியாமல் சிலர் தவித்தனர்.

தங்கள் குடும்பங்களுடன் இணைய முடியாமல் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு இந்த அறிவிப்பு இன்செய்தியாக வந்துள்ளது.

கொரோனா
சீனா கொரோனா வைரஸ் பிரச்னையில் இருந்து மீளாதது ஏன்? ஜீரோ கோவிட் டு தடுப்பூசிகள்; ஓர் அலசல்

Covid
CovidChina

மற்றும், இது பயணப் பிரியர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்த அறிவிப்பு வந்த பிறகு, Outbound Flights, Overseas Hotels போன்ற வார்த்தைகள் மூன்று மடங்கு அதிகம் தேடப்பட்டுள்ளதாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

சீன டிராவல் புக்கிங் தளமான ட்ரிப் டாட் காமில், மூன்று வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்த வார்த்தைகள் அதிகமாக தேடப்பட்டுள்ளது.

மேலும், இந்த அறிவிப்பு வந்த அரைமணி நேரத்தில் popular destinations என்ற வார்த்தை 10 மடங்கு அதிக தேடல்களை பெற்றுள்ளது.

தேடப்பட்ட வார்த்தைகள்:

  • outbound flights

  • overseas hotels

  • popular destinations

  • outbound group tours during the Lunar New Year holiday season in late January

தேடப்பட்ட சுற்றுலா தலங்கள்

  • Macao

  • Hong Kong

  • Japan

  • Thailand

  • South Korea

  • the United States

மேலும், இனி வரும் நாட்களில் கோவிட் குறித்த எந்தவித தகவல்களையும் அரசு வெளியிடாது என்றும் சீன சுகாதாரத் துறையின் அதிகாரப்பூர்வ தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

கொரோனா
கோவிட் 19 : ’அச்சமூட்டும் சீனா. ஆனால்…’ - என்ன நடக்கிறது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com