அட இதுக்கு மாசம் 26 லட்சம் சம்பளமா? - இளைஞரின் அடடே ஐடியா!

நல்ல உறக்கம் நமக்கெல்லாம் எட்டா கனியாக மாறிவர, ஜாக்கி போயெம் என்ற சோஷியல் மீடியா இன்ஃப்ளுயென்சர் ஒருவர், தன்னை உறக்கத்திலிருந்து ரசிகர்களை எழுப்பச்சொல்லி மாதம் 26 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார்.
Alarm
AlarmPexels

உறக்கம் என்பது நம் அனைவருக்கும் மிகப் பிடித்த செயல். அதையும் விட முக்கியமாக நல்ல உறக்கம் நம் உடல் நலத்திற்கு அவசியமான ஒன்று. நம் வயதிற்கு ஏற்றவாறு நாம் உறங்கவேண்டிய நேரம் வேறுபடும். ஆனால், மாறி வரும் காலத்திற்கு ஏற்ப, கிடைக்கும் நேரத்தில் கொஞ்ச நேரம் உறங்கினால் போதும் என்று தான் நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

Sleep
SleepPexels

பல நாடுகளில் இத்தனை மணி நேரம் உறங்கினால், அதற்கு பரிசு தொகைகள் வழங்கப்படும் என்று போட்டிகளெல்லாம் நடத்தப்படும். இப்படியெல்லாம் நல்ல உறக்கம் நம் வாழ்கையில் ஒரு எட்டா கனியாக மாறிவர, ஜாக்கி போயெம் என்ற சோஷியல் மீடியா இன்ஃப்ளுயென்சர் ஒருவர், தன்னை உறக்கத்திலிருந்து ரசிகர்களை எழுப்பச்சொல்லி மாதம் 26 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார்.

Jackey Boehm
Jackey BoehmTwitter
Alarm
இரவில் ஆடையின்றி தூங்குபவரா நீங்கள்? - இந்தக் கட்டுரையை படித்துவிடுங்கள்

ரசிகர்களும் இதை ஏற்றுக்கொண்டு அவரை தினம் எழுப்புவதை ஒரு வேலையாக வைத்திருக்கிறார்கள்.


எளிமையாக சம்பாதிக்கவும், அதே சமயத்தில் நன்றாக உறங்கவும் என்ன செய்யலாம் என்பதன் விளைவாக உதித்தது தான் இந்த யோசனை.


ஜாக்கி போயெம் தனது படுக்கையறையில் லேசர், ஸ்பீக்கர்கள், பப்பிள் மஷின், வித விதமான அலாரங்களை பொருத்தியுள்ளார். அவற்றை பொருத்திவிட்டு ஜாக்கி உறங்கிவிடுவார். இவற்றில் எதை வேண்டுமானாலும் இவரது ஃபாலோயர்கள் பயன்படுத்தலாம். அப்படி அவரது தூக்கம் கலையும் பட்சத்தில் எழுப்பியவர்கள் ஜாக்கிக்கு பணம் செலுத்தவேண்டும்.

போயெமிற்கு டிக் டாக்கில் மொத்தம் 5.2 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர். இந்த குறிப்பிட்ட நேரத்தில் தான் இவரை எழுப்பவேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. இவரது உறக்கத்தை கலைக்க வேண்டும் என்பது மட்டும் தான் நிபந்தனை.

தினமும் இரவு வித விதமான கருவிகளின் சப்தம் ஒவ்வொரு 10-15 வினாடிகள் கேட்டுக்கொண்டு தான் இருக்குமாம். இப்படி தன்னை எழுப்பிவிடச் சொல்லி மாதம் 26 லட்சம் வரை சம்பாதிக்கிறார் ஜாக்கி.

Alarm
ஆப்கானிஸ்தானில் டிக் டாக் - பப்ஜி செயலிகளுக்குத் தடை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com