Eiffel Tower: கண்ணாடி தரை முதல் Roof Top உணவகம் வரை- உலக அதிசயம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

இன்றும் பல நாடுகளிலிருந்தும், பல தரப்பட்ட மக்களை, சுற்றுலா பயணிகளை ஈர்த்துவரும் ஈபிள் டவர் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள் தான் இந்த தொகுப்பு
Eiffel Tower: கண்ணாடி தரை முதல் Roof Top உணவகம் வரை- உலக அதிசயம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
Eiffel Tower: கண்ணாடி தரை முதல் Roof Top உணவகம் வரை- உலக அதிசயம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!canva
Published on

உலக அதிசயங்களில் ஒன்று ஈபிள் டவர். இதனை காலம் காலமாக காதல் சின்னமாக பார்க்கின்றனர். பாரிஸில் அமைந்துள்ள இந்த கோபுரம் 1887 முதல் 1889 வரையில் கட்டப்பட்டது. இத உயரம் சுமார் 330 மீட்டர்.

இன்றும் பல நாடுகளிலிருந்தும், பல தரப்பட்ட மக்களை, சுற்றுலா பயணிகளை ஈர்த்துவரும் ஈபிள் டவர் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள் தான் இந்த தொகுப்பு.

தகர்க்க திட்டம்

உலக கண்காட்சியின்போது பிரான்ஸ் நாட்டின் தொழில் துறை திறனை காட்சிப்படுத்துவதற்காக கட்டப்பட்டது ஈபிள் டவர். இதனை 20 ஆண்டுகளில் தகர்த்துவிடவே முதலில் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் டவரின் மீது ஆண்டென்னா மற்றும் டிரான்ஸ்மிட்டர் பொருத்தப்பட்டிருந்ததால், பிரான்ஸ் நாட்டு அரசு கோபுரத்தை தகர்க்கும் திட்டத்தை கைவிட்டது.

மேலும், ஜெர்மன் படைகள் பிரான்ஸ் நாட்டைக் கைப்பற்றியபோது ஹிட்லர் இந்த கோபுரத்தை தகர்க்க உத்தரவிட்டிருந்தார். ஆனால் அந்த உத்தரவு ஏற்றுக்கொள்ளப்படாமல் போனது.

படிக்கட்டு

ஈபிள் டவரின் மேல் புறத்தை அடைவதற்கு அங்கு லிப்டுகள் உள்ளன. அதே சமயம், படிக்கட்டுகளும் இருக்கின்றன. இந்தப் படிக்கட்டுகளில் ஏறிச் சென்றால் குறைந்தது, உச்சியை அடைய 3 மணி நேரம் ஆகிறது.

1890ல் ஒருமுறை வேல்ஸ் இளவரசர் ஈபிள் டவரில் படிக்கட்டுகளின் மூலம் ஏறினார். மேலே சென்றடைய அவருக்கு 3 மணி நேரம் 30 நிமிடம் ஆனது.

Eiffel Tower: கண்ணாடி தரை முதல் Roof Top உணவகம் வரை- உலக அதிசயம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
Nasa : செவ்வாய் கிரகத்தில் வசிக்கப்போகும் 4 பேர் - புதிய ஆய்வு பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

ஈபிள் டவர் அசையுமா?

காற்று வீசும்போது வலுவாக நிற்கும் ஈபிள் கோபுரம் பலத்த புயல்களின் போது சற்றே அசைகிறது என்கிற தகவல்கள் இருக்கின்றன.

மேலும், சூரிய வெப்பத்தினால் இந்த இரும்பானது சராசரியாக ஆறு அங்குலங்கள் வரை அகலமாகிறது எனவும் கூறப்படுகிறது.

விஞ்ஞானிகளின் பெயர்கள்

ஈபிள் டவரில் மொத்தம் 72 விஞ்ஞானிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

Eiffel Tower: கண்ணாடி தரை முதல் Roof Top உணவகம் வரை- உலக அதிசயம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
நேபாளம்: இங்கு இந்திய ரூபாய் செல்லுமா? அண்டை நாடு குறித்து அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்கள்

தூக்கு தண்டனை நிறைவேற்றும் இடம்

ஈபிள் டவர் ஒரு சமயத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் பகுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. 1900 முதல் 1937 வரை சுமார் 455 குற்றவாளிகள் கோபுரத்தில் தாழ்வாரத்தில் தண்டனைப் பெற்றுள்ளனர்.

கண்ணாடி தரை

ஈபிள் டவரின் முதல் தளத்தில் போடப்பட்டுள்ள கண்ணாடி தளத்தின் எடை 1.2 டன்கள். இங்கு இருந்து பார்க்க பாரிஸ் நகரமும் மிக ரம்மியமான காட்சியாக இருக்கும்

கலங்கரை விளக்கம்

தகவல்களின்படி, ஈபிள் டவரில் தான் முதல் கலங்கரை விளக்கம் ஒளிரவிடப்பட்டது. இதன் வெளிச்சம் ஒரு முழு நகரத்தையும் சூழும் அளவு இருந்தது.

Eiffel Tower: கண்ணாடி தரை முதல் Roof Top உணவகம் வரை- உலக அதிசயம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
உலக அதிசயமான ஈபிள் டவர் கட்டப்பட்டது எதற்காக? ஆரம்பத்தில் பாரிஸ் மக்கள் அதை வெறுத்தது ஏன்?

உணவகங்கள்

ஈபிள் டவரின் மேல் இரண்டு உனவகங்கள் உள்ளன. ஒன்று 58 டூர் ஈபிள், மற்றொன்றின் பெயர் ஜூல்ஸ் வெர்னெ. இவ்விரண்டு உணவகங்களுமே பிரான்ஸ் நகரினை நாம் அமர்ந்து ரசிக்கும்படியான வகையில் அமைக்கப்பட்டுள்ளன

ஆய்வகம்

ஈபிள் டவரை உருவாக்கிய கஸ்டாவ் ஈபிள், இதன் மூன்றாம் தலத்தில் ஒரு ஆய்வகத்தை அமைத்திருந்தார். அதில் இயற்பியல், ஏரோடைனமிக்ஸ் சம்பந்தமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

Eiffel Tower: கண்ணாடி தரை முதல் Roof Top உணவகம் வரை- உலக அதிசயம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
Eiffel Tower ஐ 70,000 டாலருக்கு விற்ற நபர் - கில்லாடி திருடர் பிடிப்பட்டது எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com