Monaco: இந்த நாட்டில் வாழ்பவர்களின் ஆயுள் காலம் அதிகமா? மொனாக்கோ பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

உலகின் இரண்டாவது சிறிய நாடு பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்
Monaco: இந்த நாட்டில் வாழ்பவர்களின் ஆயுள் காலம் அதிகமா? மொனாக்கோ பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
Monaco: இந்த நாட்டில் வாழ்பவர்களின் ஆயுள் காலம் அதிகமா? மொனாக்கோ பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்canva
Published on

வாட்டிகன் சிட்டிக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது சிறிய நாடு மொனாக்கோ. வெறும் 2.03 சதுர கிலோமீட்டர் பரப்பளவே உள்ள இந்த நாடு சுற்றுலா பயணிகளை அதிகளவில் ஈர்க்கிறது. ஆண்டுக்கு 2 லட்சத்திற்கும் மேல் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை புரிகின்றனர்.

மொனாக்கோவில் சுற்றிப்பார்க்க வரலாற்று சிறப்பு மிக்க இடங்களும் ஏராளமாக உள்ளன.

உலகின் இரண்டாவது சிறிய நாடு பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்

மூவரில் ஒருவர் மில்லியனர்

மொனாக்கோவில் ஏழைகளின் சதவிகிதம் பூஜ்ஜியமாக இருக்கிறது. ஒரு சதுர மைலுக்கு 12,261 மில்லியனர்கள் இங்கு வாழ்கின்றனர். இங்கு வரிச் சலுகைகள், இருப்பிடம் மற்றும் ஆடம்பர வசதிகள் ஏராளம்

பாதுகாப்பு

மொனாக்கோ உலகின் பாதுகாப்பான இடங்களில் ஒன்று. இங்கு ஒவ்வொரு 73 குடியிருப்பளர்களுக்கு ஒரு காவல் துறை அதிகாரி இருக்கிறார். அரண்மனைக்கு இராணுவமயமாக்கப்பட்ட மெய்காப்பாளர் பிரிவு, ரோந்து மற்றும் கண்காணிப்பு படகுகளை இயக்கும் ஒரு சிறப்பு பிரிவு ஆகியவை இருக்கிறது. தேசிய அளவிலான வீடியோ கண்காணிப்பு, மூன்று காவல் நிலையங்கள் மற்றும் முக அங்கீகாரத்துடன் பாதுகாப்புத் தரங்கள் கண்டிப்பானவை.

Monaco: இந்த நாட்டில் வாழ்பவர்களின் ஆயுள் காலம் அதிகமா? மொனாக்கோ பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
இந்தியாவின் மிக சிறிய, பெரிய தேசிய பூங்காக்கள் எங்கே இருக்கிறது? சுவாரஸ்ய தகவல்

சூதாட்டத்திற்கு தடை

மொனாக்கோவின் பிரபலமான கஸினோ தான் இந்த மாண்ட்டி கார்லோ. இங்கு மொனாக்கோ குடியிருப்பாளர்களுக்கு அனுமதி இல்லை. இந்த கஸினோவின் வாயிலில் பாதுகாவலர்கள் பாஸ்போர்ட்களை சரி பார்க்கின்றனர். வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி.

நீண்ட காலம் வாழும் உள்நாட்டவர்

உலகளவில் நீண்ட ஆயுட்காலம் உள்ளவர்களாக மொனாக்கோ மக்கள் இருக்கின்றனர். இவர்களின் சராசரி ஆயுட்காலம் 85.8 ஆண்டுகாலம், மேலும் இங்குள்ளவர்களின் சராசரி வயது 44. 14 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர், 75 வயதுடையவர்கள்.

இதற்கு இவர்களின் மத்திய தரைக்கடல் உணவு முறை, எப்போதும் கிடைக்கும் ஃபிரஷான சீ ஃபுட், பழங்கள், காய்கறிகள், மற்றும் நாட்டின் வலமான சுகாதார கட்டமைப்புகள் ஆகியவை தான் காரணம் என்கின்றனர்

Monaco: இந்த நாட்டில் வாழ்பவர்களின் ஆயுள் காலம் அதிகமா? மொனாக்கோ பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
Vatican City: இங்கு குடியுரிமை கிடையாதா? உலகின் மிகச் சிறிய நாடு குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com