ஈரானில் மாஷா அமினி என்ற பெண் சரியாக ஹிஜாப் அணியாததற்காக ஒழுக்க காவலர்களால் தாக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிழிந்த சம்பவம் உலகேங்கிலும் உள்ள பெண்களை கொதித்தெழ செய்தது.
அந்நாட்டு பெண்கள் ஹிஜாபை எரித்தும், தலியமுடியை கத்தரித்துக் கொண்டும் தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டினர்.
ஈரான் நாட்டு பெண்களுக்காக அப்ப்டி குரல் கொடுத்தவர்களில் ஒருவர் ஃபரிதே மொராத்கானி. இவர் ஈரானின் சுப்ரீம் தலைவர் அலி கமெனியின் மருமகள் ஆவார்.
இவர் பல சந்தர்ப்பங்களில் ஈரான் அரசின் ஆட்சி முறையை விமர்சித்திருக்கிறார். இதற்காக 2018ல் ஒரு முறை ஃபரீதே கைது செய்யப்பட்டார்
ஈரான் அரசின் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த காரணத்திற்காக ஃபரிதேவை கடந்த நவம்பர் மாதம் கைது செய்தது அரசு.
தெஹ்ரானுடனான உறவுகளைத் துண்டிக்குமாறு சர்வதேச சமூகத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார் என்று மொராத்கானியின் வழக்கறிஞர் முகமது ஹொசைன் அகாசி ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
ஈரானின் சிறப்பு க்லெரிக்கல் நீதிமன்றம் ஃபரிதேவின் வழக்கை விசாரித்தது. இந்த நீதிமன்றம், நாட்டின் நீதித்துறையை விட்டு சுயாதீனமாக செயல்படும். ஈரான் தலைவருக்கு மட்டுமே இந்த நீதிமன்றம் கட்டுப்பட்டதாகும்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், முதலில் ஃபரிதேவுக்கு 15 ஆண்டுகள் சிறை என தண்டனை விதித்தது. ஆனால், வழக்கறிஞர் அகாசி மேல்முறையீடு செய்து, இந்த தண்டனைக் காலத்தை குறைக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஃபரீதே மீது என்ன குற்றம் சாட்டப்பட்டது என அகாசி தெரிவிக்கவில்லை.
ஃபரீதேவின் தாயும், ஈரான் தலைவரின் சகோதரியுமான பத்ரி ஹொசைனியும், தன் சகோதரரின் ஆட்சி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். "பல முறை மக்களின் பிரச்னைகள் குறித்து நான் என் சகோதரனிடம் எடுத்துரைத்தேன்.
ஆனால் அவர் அப்பாவி மக்களை துன்புறுத்துவதையும், அவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதையும் கைவிடவில்லை."
முன்னாள் உயர் தலைவர் ருஹோல்லாவை போலவே இவரது நடவடிக்கையும் அச்சுறுத்தும் விதமாக இருந்தது" என்று குறிப்பிட்டார்.
இதனால், தன் சகோதரனுடனான உறவை அவர் முறித்துக்கொண்டதாகவும், அவர் தெரிவித்தார்.
மாஷா அமினி இறந்ததைத் தொடர்ந்து ஈரான் முழுவதும் போராட்டங்கள் வெடித்ததில், 63 குழந்தைகள் மற்றும் 29 பெண்கள் உட்பட குறைந்தது 458 பேர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாக ஒஸ்லோவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் குழு ஈரான் மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust