
இந்தோனீசியாவில் இருக்கும் ஒரு தீவு தான் பாலி.
நாடு அதன் கலை, கலாச்சாரம் குறிப்பாக நடனம், சிற்பம், இசை போன்றவற்றில் புகழ்பெற்றிருக்கிறது. பலதரப்பட்ட தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் பிரமிக்க வைக்கும் கடற்கரைகளை கொண்டிருக்கும் பாலி எப்போதும் ட்ராவலர்ஸ்களுக்கான ட்ரீம் பிளேஸாக இருந்து வருகிறது.
இதனால் பாலித் தீவு இந்தோனீசியாவின் முக்கியமான சுற்றுலா மையமாகத் திகழ்கிறது. பலரும் இந்த தீவுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர்.
நம்மில் பலருக்கு பாலிக்கு செல்ல வேண்டும் என்று தோன்றும், ஆனால் வெளிநாட்டிற்கு செல்ல அதிகமான கட்டணம் ஆகும் என்று நினைப்போம். ஆனால் நம் பட்ஜெட்டில் பாலிக்கு பயணிக்க முடிந்தால்?
சமீபத்தில் IRCTC-யானது பாலி (Bali) டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த IRCTC டூர் பேக்கேஜ் மூலம் இன்தோனேஷியாவுக்கு குறைந்த விலையில் பயணிக்கலாம். ரயில் டிக்கெட்டுகளை மட்டுமே IRCTC ஆன்லைனில் புக்கிங் செய்வதாக பலரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் டிக்கெட் புக்கிங்ஸ் தவிர டூர் & ட்ராவல் தொடர்பான விஷயங்களையும் IRCTC மேற்கொண்டு வருகிறது. இந்த IRCTC டூர் பேக்கேஜ் மூலம் இந்தோனேஷியாவின் பாலிக்கு மலிவான விலையில் பயணிக்கலாம்.
இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (IRCTC) பாலிக்கு டூர் பேக்கேஜை வழங்குகிறது. வரும் ஆகஸ்ட் 11 முதல் துவங்கும் இந்த டூர் பேக்கேஜானது 5 இரவுகள் மற்றும் 6 பகல்கள் அடங்கிய பயணத்தை வழங்குகிறது.
இந்த பேக்கேஜ்ஜிற்கு "Awesome Bali" என IRCTC பெயரிட்டுள்ளது. இந்த டூர் பேக்கேஜில் பாலி செல்ல விரும்புவோர் கட்டணமாக ரூ.1,05,900 செலுத்த வேண்டும்.
இந்த பேக்கேஜில் சுற்றுலாப் பயணிகளுக்கான உணவு மற்றும் பானங்கள் முதல் தங்குமிடம் வரை முழுமையான ஏற்பாடுகளை IRCTC செய்து தருகிறது. சுற்றுலா பயணிகள் இந்த பேக்கேஜ் உடன் ட்ராவல் இன்ஷூரன்ஸ் வசதியை பெறுகின்றனர்.
Occupancy அடிப்படையில் இந்த பேக்கேஜ்ஜிற்கான கட்டணம் மாறுபடும். ஒரு நபருக்கு டபுள் மற்றும் ட்ரிபிள் occupancy-க்கு கட்டணம் ரூ.1,05,900 ஆகும். இருப்பினும்
சிங்கிள் occupancy-க்கான கட்டணம் ரூ.1,15,800 ஆகும். 5முதல் 11 வயது வரையிலான குழந்தையுடன் ஒருவர் பயணம் செய்ய விரும்பினால் கூடுதல் படுக்கைக்கு ரூ.1,00,600 கூடுதல் கட்டணம் விதிக்கப்படும்.
IRCTC-யின் அதிகாரப்பூர்வ வெப்சைட் தவிர IRCTCTourist Facilitation Center சென்றும் இந்த டூருக்கு முன்பதிவு செய்யலாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust