வேலை எதுவும் செய்யாமல் இருப்பதையே ஒரு வேலையாகச் செய்யும் 39 வயது இளைஞர் பலரது கவனத்தைப் பெற்று வருகிறார்.
ஜப்பானைச் சேர்ந்த ஷோஜி மொரிமோட்டோ என்பவர் எந்த வேலையும் செய்யாமல் சக மனிதர்களுடன் சும்மா நேரம் செலவிடுவதற்கு மட்டும் பணத்தைப் பெற்று வருகிறார். தன்னை அழைப்பவர்கள் ஏதேனும் வேலை கொடுத்தால் அதை செய்ய மறுக்கும் இவர் சில சமயங்களில் பேசக்கூட மாட்டாராம்.
2018ல் டிவிட்டர் பக்கத்தின் மூலம் இந்த சேவையைத் தொடங்கிய இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக வெற்றிகரமாக இதை ஒரு வர்த்தக முறையில் செய்து வருகிறார்.
இவர் இவ்வாறு செய்வதற்குக் காரணம் சிறுவயதில் இருந்து ”நீ எந்த வேலைக்கும் பயனில்லை” என நண்பர்கள், சுற்றி இருப்பவர்கள் கூறியதுதான். அப்படி அவர்கள் சொன்னதால் அதையே ஒரு வேலையாக எடுத்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாகப் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றில் ஷோஜி கூறியிருக்கிறார்.
2018 இல் இந்த சேவையை தொடங்கிய போது இவரின் சேவையின் தன்மை புரியாமல் பலர் இவரை வீடு சுத்தம் செய்ய, துணி துவைக்க, அமானுஷ்யமான இடத்திற்கு செல்ல இவரை அழைத்துள்ளனர். ஆனால் இவர் தன்னுடைய வேலையை பிறருக்கு கொடுத்து அவர்களை புரிய வைத்துள்ளார்.
யாரேனும் எங்கேயாவது அழைத்தால் அவர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் உட்கார்ந்திருப்பது, தனியாக யாரேனும் பிறந்தநாள் கொண்டாடினால் அவர்களின் தனிமையைப் போக்க அதில் கலந்து கொள்வது என சும்மா இருக்கிறதையே ஒரு வேலையாக ஷோஜி செய்து வருகிறார்.
இவ்வாறு இவர் செய்யும் இந்த வேலை ஜப்பான் மக்களிடம் பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது ஒரு நாளைக்கு மூன்று பேரை இவர் சந்தித்து வருகிறார். ஒரு சந்திப்பிற்கு 69 பவுண்டு (சுமார் 6,699 ரூபாய்) பெறுகிறார். இவரை மையமாக வைத்து இதுவரை மூன்று புத்தகங்களும் ஒரு தொலைக்காட்சி தொடரும் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust