வெடிக்கும் எரிமலையில் ஆபத்தான வேலை ஆனால், சம்பளம் இவ்வளவு தானா?

இரண்டு வாளிகளுடன் மலை மீது ஏறி 90 கிலோ வரை கந்தகத்தை சுமந்து வருவது இவர்களின் வேலை. பொதுவாகவே சுரங்கப் பணிகள் ஆபத்தானதாக இருக்கும். வெடிக்கும் எரிமலையில் என்றால்...
sulphur
sulphurTwitter
Published on

உலகிலேயே ஆபத்தான வேலையை செய்வது குறித்து யோசித்திருக்கிறீர்களா? எப்படியிருந்தாலும் அதிக ஆபத்தான வேலைக்கு அதிக பணம் கொடுக்கப்படுமென்று தானே நினைத்திருப்பீர்கள்? அதுதான் இல்லை.

இந்தோனேசியாவில் தினமும் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஒரு நாளுக்கு 12 டாலர் மட்டுமே கொடுக்கப்படுகிறது. இந்திய மதிப்பில் 954 ரூபாய்.

இது சாதாரண வருமானம் தானே என்று நினைக்கலாம். ஆனால், இந்த தொழிலுக்கு அல்ல.

சரி அப்படி என்ன வேலை?

இயக்கத்தில் இருக்கும் எரிமலையில் இருந்து சல்பர் எடுப்பது தான் அந்த வேலை. அந்த பகுதி மக்கள் தினமும் எரிமலையின் மீது ஏறி தங்கள் பணியை செய்ய வேண்டிய சூழல் உள்ளது.

இரண்டு வாளிகளுடன் மலை மீது ஏறி 90 கிலோ வரை கந்தகத்தை சுமந்து வருவது இவர்களின் வேலை. பொதுவாகவே சுரங்கப் பணிகள் ஆபத்தானதாக இருக்கும். வெடிக்கும் எரிமலையில் என்றால்...

இந்த கந்தக சுரங்கப் பணியில் வேலை செய்பவர்கள் 50 வயதைத் தாண்டுவதில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

sulphur
பணக்காரர்களின் குப்பைகளை விற்று வாழும் 25000 மக்கள் - ஒரு நாட்டின் அவல நிலை

இந்த ஆபத்தான வேலையில் ஏன் மக்கள் ஈடுபட வேண்டும் என்ற கேள்விக்கு பணம் தான் பதிலாக வந்து நிற்கிறது. அந்த பகுதி மக்கள் தினமும் 954 ரூபாய் பெறுவது நல்ல சம்பளமாக கருதுகின்றனர்.

இது குறித்து அந்த வேலையில் 30 ஆண்டுகளாக பணியாற்றும் ஒருவர் இன்ஸைடர் ஊடகத்தில், "ஒவ்வொரு நாளும் நாங்கள் சல்பர் எடுத்துவரும் போது எங்கள் தோள்கள் வீங்குவது சாதாரணம் தான். இது ஆபத்தானது தான் என்றாலும் நாங்கள் இறப்பதற்கும் தயாராக இருக்கிறோம். ஏனெனில், நாங்கள் பசித்திருப்பதற்கு அஞ்சுகிறோம்" எனக் கூறியிருக்கிறார்.

sulphur
பாகிஸ்தான் முதல் ஜெர்மனி வரை - எந்த நாடுகளில் வேலை நேரம் குறைவு தெரியுமா?

அத்துடன், பலமுறை எங்களஉயிரைக் காப்பாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறோம். எரிமலையிலிருந்து புகை எழுந்தால் உடனடியாக அங்கிருந்து ஓட வேண்டும். புகை உள்ளே நுழைந்தால் பல ஆபத்துகளை விளைவிக்கும்." எனவும் கூறினார்.

இந்த ஆபத்தான பணியில் ஈடுபடுபவர்கள் குறைந்தபட்ச பாதுகாப்பு ஏற்பாடாக கந்தகம் ஒட்டாமல் இருக்க வாயில் ஈரத்துணியை கட்டிக்கொள்கின்றனர்.

இந்தோனேசியாவின் இந்த எரிமலை மூன்று விஷயங்களுக்காக அறியப்படுகிறது. முதலாவது நீல நிற நெருப்பு, இரண்டு அமில பள்ளங்கள் (ஏரிகள்), மூன்றாவது உயிரைக் கொடுத்து உழைக்கும் பணியாளர்கள்.

sulphur
சிறுவன் போன்ற தோற்றம் - வேலை கிடைக்காமல் அவதிப்பட்ட 27 வயது நபர் - வெற்றி பெற்றது எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com