Josephine Baker: இசை உலகின் மகாராணி உளவாளி ஆன கதை - மினி சீரிஸ் 3

ஒரு பெரிய சொகுசு காரில் ஜோசஃபைன் பேக்கர் கார் ஓட்ட உடன் ஜேக்ஸ் அப்டே பயணித்தனர். பயணிக்கும் போதே இத்தாலி தூதரகத்தில் குறிப்பிட்ட அதிகாரியிடமிருந்து தான் திரட்டிய விவரங்களை ஒவ்வொன்றாக விளக்கத் தொடங்கினார்.
Josephine Baker
Josephine BakerTwitter
Published on

ஒரு உலகப் புகழ்பெற்ற கலைஞராக இருக்கும் ஜோசஃபைன் பேக்கர் தன் மனதில் பட்டதை வெளிப்படையாகவும், அழுத்தமாகவும் பேசியது ஜேக்ஸ் அப்டேவை (Jacques Abtey) யோசிக்க வைத்தது. இத்தனை துணிச்சலான, புகழ் வெளிச்சம் கொண்ட ஒருவர் உளவுப் பணியில் இருப்பது எவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தாது என்று கருதினார் ஜேக்ஸ்.

ஆனால் ஜேக்ஸ், ஜோசஃபைன் பேக்கரை பிரான்ஸ் உளவுப் பணி உங்களை அன்புடன் வரவேற்கிறது என அழைப்பு விடுக்கவும் இல்லை, கொஞ்சம் போகட்டும் பார்க்கலாம் என மழுப்பவும் இல்லை.

எனவே, ஜோசஃபைன் பேக்கரே முன் வந்து தன் திறமையை பரிசோதிக்குமாறு கூறினார்.

சவாலை ஏற்றுக் கொண்ட ஜேக்ஸ், இத்தாலி தூதரகத்தில் உள்ள அதிகாரி ஒருவரிடம் பழகி தகவல்களைக் கொண்டு வருமாறு கூறினார். சரி என்று சொல்லி இருவரும் பிரிந்தனர்.

ஜோசஃபைன் பேக்கர் உடன் எத்தனை மணி நேரத்தை செலவழித்தோம் என்பது தெரியாமல் சொக்கிக் கிடந்தது போல் உணர்ந்தார் ஜேக்ஸ் அப்டே. கிட்டத்தட்ட மாய மந்திரத்துக்கு கட்டுப்பட்டு இருந்தது போல் உணர்ந்தார்.

சில நாட்கள் கழித்து, ஜோசஃபைன் பேக்கர், ஜேக்ஸ் அப்டேவைச் சந்திக்க ஓர் இடத்துக்கு அழைத்தார். ஒரு பெரிய சொகுசு காரில் ஜோசஃபைன் பேக்கர் கார் ஓட்ட உடன் ஜேக்ஸ் அப்டே பயணித்தனர். பயணிக்கும் போதே இத்தாலி தூதரகத்தில் குறிப்பிட்ட அதிகாரியிடமிருந்து தான் திரட்டிய விவரங்களை ஒவ்வொன்றாக விளக்கத் தொடங்கினார்.

போகிற போக்கில் காரை அதிவேகமாக ஓட்டிய குற்றத்துக்காக, போக்குவரத்து காவலர்கள் ஜோசஃபைன் பேக்கர் & ஜேக்ஸ் அப்டே பயணித்த காரை மறித்தனர். உள்ளே ஜோசஃபைன் பேக்கர் அமர்ந்திருப்பதைக் காவல் துறை அதிகாரிகள் பார்த்து மகிழ்வோடு சிரித்தனர்.

பதிலுக்கு ஜோசஃபைன் பேக்கர் தன் புன்முறுவலை உதிர்த்த பின்... போலாம் ரைட் சொல்லி... டாடா காட்டி வழியனுப்பி வைத்தது போக்குவரத்து காவல்துறை. ஓ... சராசரி மனிதர்களுகுப் பொருந்தும் சட்ட திட்டங்கள், இந்த பாடகிக்கு பொருந்தாதா..? என சற்றே ஆச்சர்யத்தோடு பார்த்தார் ஜேக்ஸ் அப்டே. அதோடு ஜோசஃபைன் பேக்கர் கூறிய விஷயங்கள் உண்மையானது தான் என்பதை சரிபார்த்துக் கொண்டார்.

ஜோசஃபைன் பேக்கர் இயற்கையாகவே மனிதர்களை எடை போடுவதிலும், ஒரு மனிதனை தன் நம்பிக்கை வளையில் விழ வைப்பதிலும் தேர்ந்தவராக இருக்கிறாரே என ஜேக்ஸ் அப்டேவே மனதில் ஒப்புக் கொண்டார்.

இத்தனை செய்த பிறகும் அவரை பயன்படுத்தாமல் இருப்பது சரியல்ல என்று கருதினார். ஆனால் ஜோசஃபைன் பேக்கர் மீது ஜேக்ஸ் அப்டேவுக்கு, காற்றடித்தால் காகிதக் கோட்டை சரிந்துவிடும் அளவுக்கு மட்டுமே நம்பிக்கை இருந்தது. அவர் உளவுத் துறையில் பணியாற்றினாலும், யாராவது ஒருவரின் மேற்பார்வையின் கீழ்தான் பணியாற்ற வேண்டும் என்று கருதினார் ஜேக்ஸ். கடைசியில் தானே ஜோசஃபைன் பேக்கரைக் கையாளம் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் ஜேக்ஸ் அப்டே.

வெல்கம் டூ பிரான்ஸ் உளவுப் பணி:

1870களில் இருந்தே பிரான்ஸ் உளவுப் படைகளை வைத்திருக்கிறது என்றாலும், போர்தான் ராணுவம், உளவுப் படை, ஆயுத கண்டுபிடிப்பு, பாதுகாப்பு உபகரணங்கள் போன்ற விஷயங்களில் புதிய பாய்ச்சலைக் கொடுக்கின்றன. அப்படி, 1939ஆம் ஆண்டு வெடித்த இரண்டாம் உலகப் போர், உளவுப் பணிகளில் பல தொழில்நுட்பம் உட்பட பல புதிய விஷயங்களில் புதிய கண்டுபிடிப்புகள் & பயன்பாடுகளைக் கொண்டு வந்தன.

உளவுப் பணிகளில் எதிராளிக்கே தெரியாமல் அவர்களை விசாரிப்பது, பொய் சொல்வதைக் கண்டு பிடிப்பது, அதிமுக்கிய விவரங்களை மனப்பாடம் செய்வது, அதி வேகமாக எழுதுவது, தலைகீழாக உள்ள ஆவணங்களைக் கூட சரளமாகப் படித்து விஷயத்தை உள்வாங்கிக் கொள்வது போன்ற அடிப்படை பயிற்சிகள் ஜோசஃபைன் பேக்கருக்கு வழங்கப்பட்டன.

அதோடு அன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் அங்கமாக இருந்த பைகார்பனைட் குளோரைடில் தயாரிக்கப்பட்ட Invisible Ink என்றழைக்கப்படும் மாய மை (இதன் மீது எலுமிச்சை சாரைத் தடவினால் எழுத்துக்கள் தெரியும்), புகைப்படங்கள் & ஆவணங்களை ஒலித்து வைக்கும் சிறிய பெட்டி போன்றவைகளைப் பயன்படுத்துவதற்கெல்லாம் பயிற்சி வழங்கப்பட்டன.

Josephine Baker
உலகை உலுக்கிய ஒரு வழக்கு : 23 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்ட சையத் - சினிமாவை விஞ்சும் நிஜ கதை

இதெல்லாம் போக, ஒவ்வொரு வேடத்துக்கும், சூழலுக்கும் தகுந்தாற் போல தன்னைத் தானே மாற்றிக் கொள்ளும் தன்மை (திறமை என்றே சொல்லலாம்), ஜோசஃபைன் பேக்கரிடம் இயற்கையாகவே இருந்தது.

காலையில் செஞ்சிலுவைச் சங்கத்தில் செவிலியராகவும், மாலையில் கலைஞர் வேடமும் ஏற்று தன் வாழ்கையை நடத்தி வந்தார். தான் கற்றுக் கொண்ட உளவுத் தொழில் கலையை முழுமையாக பயன்படுத்த முடியவில்லையே என ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தவருக்கு, தன் திறமையை நிரூபிக்க ஓர் அருமையான வாய்ப்பு கிடைத்தது.

Josephine Baker
இங்கு யாரும் பிறக்கவோ இறக்கவோ முடியாது: உலகிலேயே மகிழ்ச்சியான ஊரின் கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com