Josephine Baker: இசை உலகின் மகாராணி உளவாளி ஆன கதை - மினி சீரிஸ் 4

ஜெர்மனிக்கு எதிரான போரில், பிரான்ஸுக்குப் பெரிய முன்னேற்றம் ஏதும் கிடைக்கவில்லை. பாரிஸ் நகர மக்கள் தங்கள் நகரத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். ஆனால் ஜோசஃபைன் பேக்கர் பாரிஸ் நகரத்தை தன் நகரமாகவே கருதினார்.
Josephine Baker
Josephine BakerTwitter
Published on

போரை முன்னிட்டு ஆயிரக் கணக்கில் பலதரப்பட்ட மக்கள் பிரான்ஸ் நாட்டுக்குள் வந்து கொண்டிருந்தனர். செஞ்சிலுவைச் சங்கத்தில் செவிலியராக பணியாற்றும் போது சந்தேகப்படும் வகையில் மருத்துவமனைக்கு வருபவர்களை கண்காணிக்கத் தொடங்கினார் ஜோசஃபைன் பேக்கர்.

அப்படி ஒரு ஜெர்மனியைச் சேர்ந்த இளைஞர் சிக்கிய போது, அவரிடம் ஒரு சிறு விசாரணை நடத்தி, அவர் ஜெர்மானிய உளவு ஏஜெண்டாக இருக்கலாம் என சந்தேகித்தார் ஜோசஃபைன் பேக்கர். எனவே உடனடியாக பிரான்ஸ் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார்.

அந்த இளைஞரை பிரான்ஸ் காவல்துறை அழைத்துச் சென்று விசாரித்த போது, அவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த உளவுத் துறை ஏஜெண்ட் என்பது தெரிய வந்தது. ஜோசஃபைன் பேக்கரின் இப்பணியை கொஞ்சம் தயக்கத்தோடு பாராட்டினார் ஜேக்ஸ் அட்பே. ஜோசஃபைன் பேக்கருக்கோ தான் செய்த முதல் உளவுப் பணியே வெற்றி என்பதில் பெரிதும் அகமகிழ்ந்தார்

இதற்கிடையில் ஜெர்மனிக்கு எதிரான போரில், பிரான்ஸுக்குப் பெரிய முன்னேற்றம் ஏதும் கிடைக்கவில்லை. பாரிஸ் நகர மக்கள் தங்கள் நகரத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். ஆனால் ஜோசஃபைன் பேக்கர் பாரிஸ் நகரத்தை தன் நகரமாகவே கருதினார். ஜேக்ஸ் அட்பேவின் உளவுத் துறை அலுவலகமும் இடம்பெயர வேண்டி இருந்தது.

ஒருகட்டத்தில் பிரான்ஸின் தடுப்பரண்களைத் தகர்த்து ஜெர்மனியின் நாஜிப் படை வடக்கு பிரான்ஸைக் கைப்பற்றியது. தெற்கு பிரான்ஸில் நாஜி ஆதரவாளர்களை வைத்து ஒரு பொம்மை அரசாங்கம் நிறுவப்பட்டது. அதை விசி (Vichy) அரசு என்றிழைத்தார்கள். 

என்னதான் ஜெர்மன் படைகள் பிரான்ஸை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலும், பெரிய ஆராவாரங்களின்றி, அமைதியாக தங்களுக்கு எதிரான செயல்பாடுகளைக் கண்காணித்து வந்தனர். இப்படிப்பட்ட சூழலில், பிரான்ஸ் நாட்டின் ரகசிய உளவாளிகள் பிரிவான Deuxième Bureau பிரிவில் ஜோசஃபைன் பேக்கர் பணியாற்றுவதாகவும், அவரிடம் ஆயுதங்கள் இருப்பதாகவும் நாஜிப் படைக்குச் செய்தி கிடைத்தது. 

Josephine Baker
இங்கு யாரும் பிறக்கவோ இறக்கவோ முடியாது: உலகிலேயே மகிழ்ச்சியான ஊரின் கதை!

ஜோசஃபைன் பேக்கர் தென்மேற்கு பிரான்ஸில் வசித்து வந்த சொகுசு பங்களாவை சோதனை செய்யுமாறு உயரதிகாரிகளிடமிருந்து நாஜிக்களுக்கு உத்தரவு பறந்தது. நாஜிப் படை வீரர்களும், ஜோசஃபைன் பேக்கரின் அரண்மனையை சலிக்கத் தொடங்கினர். அந்த நேரம் பார்த்து ஜேக்ஸ் அப்டே போக்கரின் வீட்டுக்கு ஒரு திட்டத்தை விவரிக்க வந்திருந்தார்.

அவர் நாஜிக்களின் கண்ணில் சிக்கிவிடக் கூடாதென, ஜோசஃபைன் பேக்கர் தனக்கே உரிய அழகியலோடு வந்த நாஜி வீரர்களை சமாளித்து ஜேக்ஸ் அப்டேவைக் காப்பாற்றினார்.

இதனைத் தொடர்ந்து, போரில் பாதிக்கப்படாமல் இருக்க, பாரிஸ் நகரத்தின் தென் மேற்குப் பகுதியில் இருந்த தன் சொகுசு பங்களாவை விட்டு வேறு இடத்தில் குடியேறினார் ஜோசஃபைன் பேக்கர். 

ஒரு பிரமாண்ட திட்டம்:

பிரான்ஸ் நாட்டின் நிலையை உணர்ந்தும், நாஜிப் படைகள் தீவிரமாக கண்காணிப்பதை அறிந்தும் ஜேக்ஸ் அட்பே மற்றும் அவரது மூத்த அதிகாரி கேப்டன் பால் பைலொலெ (Paul Paillole) ரகசியமாகச் சந்தித்துக் கொண்டனர்.

தங்கள் உளவுப் பணிகளை ரகசியமாக, ஜெர்மன் அரசுக்குத் தெரியாமல் மேற்கொள்ள உறுதி ஏற்றனர். அதோடு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஒரு திட்டத்தைத் தீட்டினர்.

அதன் ஒரு பகுதியாக, கேப்டன் பால், முன்னாள் பிரான்ஸ் நாட்டு உளவாளிகளை மீண்டும் களத்தில் இறக்கத் தீர்மானித்திருந்தார். அவரது நம்பிக்கைக்குரிய ஜேக்ஸ் அட்பேவை ஒரு வலுவான தகவல் தொடர்பு அமைப்பை உருவாக்குமாறு பணித்தார். அதோடு கப்பல்கள், விமானங்கள், செய்திகளைக் கொண்டு சேர்க்கும் கொண்டு வரும் தூதுவர்களையும் தயார் செய்யச் சொன்னார்.

Josephine Baker
உலகை உலுக்கிய ஒரு வழக்கு : 23 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்ட சையத் - சினிமாவை விஞ்சும் நிஜ கதை

இவையனைத்தையும் ஜெர்மனியின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஐரோப்பாவில் உருவாக்கி, லண்டனில் முகாமிட்டிருந்த பிரான்ஸின் எதிர்ப்பு இயக்கத்தின் தலைவராக இருந்த ஜெனரல் சார்லஸ் டி காலேக்கு (General Charles de Gaulle) செய்திகள் சென்று சேர வேண்டும். இவையனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், அது பிரான்ஸ் எதிர்ப்பு இயக்கத்துக்கு மிகப்பெரிய அளவில் வலு சேர்க்கும் என்று திட்டத்தைத் தீட்டினர். ஜேக்ஸ் அட்பேவுக்கு ஒரு போலி பாஸ்போர்டை தருவிப்பதாகவும் கூறினார் கேப்டன் பால். 

ஐரோப்பா முழுக்க ஒரு வலுவான தகவல் பகிரும் அமைப்பை உருவாக்குவது, விமானங்கள், கப்பல்கள்... போன்றவற்றை எல்லாம் தயார் செய்ய பிரான்ஸ் நாட்டுக்குள்ளே இருந்தால் போதாது, தொடர்ந்து பயணிக்க வேண்டி இருக்கும். ஆனால் அதற்கு ஜெர்மனியின் நாஜி படை மிகப்பெரிய தடையாக இருக்கும் என்பதை அறிந்திருந்தார் ஜேக்ஸ் அப்டே. குறிப்பாக 40 வயதுக்கு உட்பட்ட நபர்கள் மீது நாஜிப் படை அதிகம் கவனம் செலுத்தியதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இப்போதும் ஜோசஃபைன் பேக்கர் மட்டுமே மேரி அன்னை போல ஜேக்ஸ் அப்டே முன் இருந்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com