குவைத் : மனிதர்கள் வாழ முடியாத நாடு ஆகிறதா Kuwait - என்ன நடக்கிறது அங்கே?

புவி வெப்பமயாதலின் விளைவுகளை குவைத் உணரவில்லை. 2016 ஆம் ஆண்டில் குவைத்தின் வடமேற்கில் உள்ள ஒரு பகுதி 54 டிகிரி செல்சியஸை (127.2 டிகிரி ஃபாரன்ஹீட்) எட்டியது. அது பூமியின் சமீபத்திய வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மூன்றாவது மிக உயர்ந்த வெப்பநிலையாகும்.
Kuwait
KuwaitPexels
Published on

கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் குவைத் ஒரு பணக்கார நாடு. ஆனால் உலகின் வெப்பமான நாடுகளில் அதுவும் ஒன்று. இத்தகைய காலநிலைப் பிரச்சினை குவைத்தில் புறக்கணிக்கப்படுகிறது.

ஈராக்கிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையில் இருக்கும் குவைத் உலகின் அதிக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாகும். சிறிய நாடானாலும் செல்வந்த நாடான குவைத்தில் ஒரு தனிநபர் அளவில் கார்பன் வாயு உமிழ்வு அதிகமாக இருக்கிறது.


Pexels

குவைத்தும், காங்கோவும்

2020 ஆம் ஆண்டு குவைத் 20 டன் காரபன் டையாக்சைடு வாயுவை வெளியேற்றியுள்ளது. இதே காலத்தில் ஆப்ரிக்காவின் காங்கோ நாடு 0.03 டன் மட்டுமே வெளியேற்றியுள்ளது. பரப்பளவில் குவைத்தை விட பெரிய நாடான காங்கோ வெளியேற்றியுள்ளதையும் சிறிய நாடான குவைத் வெளியேற்றிய கார்பனையும் ஒப்பிட்டுப் பார்த்தால் புரியும்.

ஆனால், புவி வெப்பமயாதலின் விளைவுகளை குவைத் உணரவில்லை. 2016 ஆம் ஆண்டில் குவைத்தின் வடமேற்கில் உள்ள ஒரு பகுதி 54 டிகிரி செல்சியஸை (127.2 டிகிரி ஃபாரன்ஹீட்) எட்டியது. அது பூமியின் சமீபத்திய வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மூன்றாவது மிக உயர்ந்த வெப்பநிலையாகும். காலநிலை கணிப்பு நிறுவனமான அக்கு வெதர் பதிவின் படி குவைத்தில் கடந்த வருடம் 19 நாட்களில் வெப்பநிலையானது 50 டிகிரி செல்யிசைக் கடந்தது.

Kuwait
குவைத், ஏமன், லெபனான் போர் : கடந்தகாலப் போர்களில் இந்தியர்கள் எப்படி மீட்கப்பட்டார்கள் ?
NewsSense

வாழ முடியாத நாடு

இத்தகைய கொளுத்தும் வெப்பநிலை நாட்டை கிட்டத்தட்ட வாழ முடியாததாக மாற்றியிருக்கிறது. பறவைகள் வானத்தில் இருந்து இறந்து கீழே விழுகின்றன. வளைகுடா கடல் கொதித்து கடல் குதிரைகள் இறந்து போயின. கடலின் வெப்பநிலை உயர்வதால் கடல்சார் உயிரினங்கள் மற்ற இடங்களுக்கு இடம்பெயர்கின்றன. இதனால் உள்ளூர் மீன் தொழில் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

இந்த கடுமையான நீண்டகால வெப்பநிலையால் மக்களுக்கு வெப்பச் சோர்வும், இதயப் பிரச்சினைகள் ஏன் மரணம் கூட ஏற்படலாம்.

சுடும் வெப்பத்திலிருந்து தப்பிக்க வசதியுள்ளவர்கள் குளிரூட்டப்பட்ட வீடுகள், அலுவலகங்கள், மால்களில் தஞ்சம் அடையலாம். குவைத்தின் எரிபொருள் ஆற்றலில் தயாரிக்கப்படும் மின்சாரத்தின் கணிசமான பகுதி குளிரூட்டும் வசிக்காக பயன்படுகிறது. 2020 ஆய்வின் படி வீடுகளில் மின்சார பயன்பாட்டில் 67% குளிர்சாதன வசதிக்காக மட்டும் செலவாகிறது. மேலும் அரசாங்கம் மின்சார செலவினங்களுக்கு அதிக மானியம் அளிப்பதால், மக்கள் தமது நுகர்வு குறித்து ஒரு கட்டுப்பாடு கொண்டிருப்பதில்லை.

ஆனால் இப்படி வீட்டின் குளிர்சாதன வசதியில் பாதுகாப்பை அடையும் ஆடம்பரம் குவைத்தில் எல்லோருக்கும் இல்லை. குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பின் கூற்றுப்படி, குவைத்தின் மக்கள் தொகையில் புலம்பெயர்ந்தோரின் மக்கள் தொகை 70% உள்ளது. அவர்களில் பலர் கட்டிட வேலை, விவசாயம் அல்லது விநியோகம் என பொதுவெளியில் வேலை செய்கிறார்கள். வெப்பநிலை அதிகரிக்கும் போது இவர்கள் இறக்கும் அபாயம் அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

Kuwait
குவைத் எனும் பூலோக சொர்க்கம் | Unknown Facts about Kuwait
NewsSense

புழுதிப் புயல்கள்

குவைத்தில் அடிக்கடி புழுதிப் புயல்களும், வெள்ளமும் தாக்கி வருகின்றன. இருப்பினும் பலர் இந்தப் பிரச்சினைகளின் வேர் காரணிகளை உணர்வதில்லை. குறிப்பாக பழையை தலைமுறையினர் காலநிலை பிரச்சினைகளை கடவுள் செயல் என்று நினைக்கிறார்கள். பொதுப் போக்குவரத்தின் மூலம் வெப்பநிலையை குறைக்கலாம் என்பதையும் எதிர்க்கிறார்கள்.

இப்படி காலநிலை பிரச்சினைகளை அலட்சியப்படுத்தும் போக்கு அரசியல் தலைவர்களிடத்திலும் இருப்பதாக சூழலியல்வாதிகள் பயப்படுகின்றனர். எண்ணெய் வளம் மிக்க அண்டை நாடுகளான சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை வரவிருக்கும் பத்தாண்டுகளில் நிகர-பூஜ்ஜிய உமிழ்வை ஏற்கனவே உறுதியளித்துள்ளன. ஆனால் கடந்த ஆண்டு கிளாஸ்கோவில் நடந்த COP26 உச்சிமாநாட்டில் குவைத்தின் வாக்குறுதி ஒப்பீட்டளவில் ஏமாற்றளிக்கிறது. 2035 க்குள் 7.4% பசுமை இல்ல உமிழ்வைக் குறைக்க நாடு இலக்கு வைத்துள்ளது.

இப்போதைக்கு வளைகுடா நாடான குவைத் இன்னும் புதைபடிவ எரிபொருளான கச்சா எண்ணெயைத்தான் முழுமையாக நம்பியுள்ளது. ஆனால் 2030 ஆம் ஆண்டிற்குள் எரிசக்தி தேவை மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று குவைத்தின் மின்சார மற்றும் நீர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டின் மின்சாரப் பயன்பாடு இப்படி நீடிக்க முடியாது என்றாலும், உயரும் வெப்பநிலையானது அதிகமான மக்களை குளிர்சாதன வசதிகளை தேடிச் செல்லத் தூண்டும்.

குவைத் அதன் எரிசக்தி ஆதாரங்களை புதைவடிவ எரிபொருளிலிருந்து மாற்றுக்களைத் தேடாமல் அதன் நுகர்வு அதிகரிப்பை தடுக்க முடியாது. இப்போதே குவைத்தின் சில பகுதிகள் வெப்பநிலையால் வாழத் தகுதியற்றதாக இருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com