இந்தியாவில் உள்ள பலரும், குறிப்பாக தென்னிந்தியர்கள் குவைத், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம்... போன்ற மத்திய கிழக்கு அரபு நாடுகளில் பிழைப்புக்காகச் செல்கிறார்கள். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதாக சில வலைதளங்கள் கூறுகின்றன.
எப்படியோ அடித்துப் பிடித்து, சொந்தக்காரர்கள் நண்பர்கள் மூலம் அரபு தேசத்துக்கு ஒரு சிறிய வேலையில் சேர்ந்து, ஒரு சில ஆண்டுகளில் வேறு ஒரு நல்ல வேலையைப் பெற்று, அப்படியே தங்கள் வாழ்கையை முன்னேற்றிக் கொண்ட சில நண்பர்கள், உறவினர்களை நாமே பார்த்திருப்போம் அல்லது குறைந்தபட்சம் அப்படி ஒரு செய்தியைக் கேட்டிருப்போம்.
அப்படி அரபு தேசத்துக்குச் சென்று, பலரும் சட்டென பொருளாதார ரீதியில் நல்ல நிலைக்கு வருவதற்கு, அங்கு எளிதில் நல்ல வேலைக்கு மாறிக் கொள்ளலாம் என்பது மிக முக்கிய காரணங்களில் ஒன்று. ஆனால் இப்போது குவைத் நாட்டில், அந்த அடிப்படை விஷயத்துக்கே வேட்டு வைப்பது போல, அந்நாட்டு எம் பி ஒருவர் ஒரு புதிய சட்டத்தை முன்மொழிந்து இருக்கிறார்.
Kuwaitiவெளிநாடுகளிலிருந்து குவைத் நாட்டில் வேலை செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஒரு நிறுவனம் அல்லது வேலை கொடுப்பவரிடம் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். அதற்கு முன் வேறு ஒரு பணிக்கு மாறக் கூடாது.
ஒருவேளை, அப்படி வேறு பணிக்கு மாற வேண்டுமானால், குறைந்தபட்சம் ஓராண்டுக் காலத்துக்கு அதே நிறுவனத்தில் வேலை செய்துவிட்டு, அவர்கள் குவைத்தை விட்டு வெளியேறி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் வேறு பணியில் சேர வேண்டும் என குவைத் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா அல் துராஜி (Abdullah Al-Turaiji) ஒரு சட்ட முன்மொழிவைக் கடந்த புதன்கிழமை முன்வைத்தார். இந்த விவரங்கள் குவைத் டைம்ஸ் என்கிற பத்திரிகையில் செய்தியாக வெளிவந்தது.
வேலை கொடுக்கும் நிறுவனங்கள் மற்றும் நபர்கள், புதிய, அனுபவம் இல்லாத நபர்கள் மீது நிறைய பணத்தையும், நேரத்தையும் முதலீடு செய்து, அவர்களை பணிக்குத் தேர்வு செய்து, அவர்களுக்கு பயிற்சியளிக்கிறார்கள். எனவே அதைக் கருத்தில் கொண்டு, குவைத் அதிகாரிகள் சட்டத்தை மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்த சட்டம் நிறுவனங்கள் மற்றும் வேலை கொடுப்பவர்களின் உரிமையைப் பாதுகாக்க உதவும், அதோடு குவைத் நாட்டின் தொழிலாளர்கள் சந்தையையும் பாதுகாக்க உதவும் எனக் கூறினார் அப்துல்லா அல் துராஜி.
தற்போதைய நடைமுறையில் குவைத்தில் வேலை செய்யும் புலம்பெயர் தொழிலாளர்கள், ஓராண்டு காலத்துக்கு ஒரு நிறுவனத்தில் வேலை செய்துவிட்டு, தங்களின் விருப்பப்படி வேறு வேலைக்கு மாறலாம். ஒருவேளை நிறுவனம் அந்த ஊழியருக்குக் கொடுக்க வேண்டிய அனுமதிகளைக் கொடுக்கவில்லை எனில், குவைத் நீதிமன்றங்கள், தொழிலாளர்களுக்குத் தேவையான விஷயங்களைச் செய்து கொடுக்குமாறு தீர்ப்பு வழங்குகின்றன.
ஏற்கனவே குவைத்தில் வேலை பார்த்து வரும் பல நாடுகளைச் சேர்ந்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்தியில் இந்த சட்ட முன்மொழிவு, பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp