குவைத் : சலுகை, சொகுசு, சுக வாழ்வு - ஒரு கனவு தேசத்தின் கதை

குவைத்காரர் வேலையில் சேர வேண்டுமே தவிர வேலையெல்லாம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. அவரது வேலையை வெளிநாட்டவர் பார்த்துக்கொள்வார். சம்பளம் மாதம் தவறாமல் வந்துவிடும். அவரை டிஸ்மிஸ் எல்லாம் செய்யவே முடியாது.
kuwait
kuwaitTwitter
Published on

உலக வரைபடத்தில் வளைகுடா நாடுகளுக்கென்று எப்போதும் ஒரு தனிச் சிறப்பு இருக்கிறது. எண்ணெய் வளமிக்க அந்த பகுதியில் ஈரான் மற்றும் சவுதி அரேபியா நாடுகளுக்கு மத்தியில் சிறிய நாடாக இருக்கிறது குவைத். குவைத் குறித்த சில ஆச்சர்யமூட்டும் தகவல்களை இங்கு காணலாம்.

குவைத்தின் மக்கள் தொகை தமிழகத்தின் மக்கள் தொகையில் 16ல் ஒரு பங்கு கூட இல்லை. மொத்தம் 45 லட்சம் பேர் தான் அங்கு வசிக்கின்றனர். அதில் குடிமக்கள் 10 லட்சம்தான். மீதமுள்ளவர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்.

நிலப்பரப்பிலும் தமிழகத்தை விட மிகச் சிறிய குவைத். ஆனால் செல்வ செழிப்பில் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இதற்கு அங்கிருக்கும் எண்ணெய் வளம் தான் காரணம். இதனால் குவைத் மக்கள் அனைவருக்கும் சம்பளத்தை அள்ளிக் கொடுக்கிறது அந்நாட்டு அரசு.

குவைத்
குவைத்Pexels

குவைத்தின் பொருளாதார வளம் நாம் நினைப்பதை விட கொஞ்சம் அதிக ஆச்சர்யம் தருவதாக தான் இருக்கிறது. ஒரு குவைத் தினாரின் இந்திய மதிப்பு ரூபாய் 253. தனி நபர் வருமானத்தில் உலகிலேயே 8வது நாடாக திகழ்கிறது குவைத்.

குவைத்தில் அந்நாட்டு குடிமக்கள் மட்டுமே அரசு வேலை பார்க்க முடியும். அத்துடன் குவைத்தில் கம்பனி தொடங்கும் அனைவரும் குவைத் குடிமக்களை வேலைக்கு எடுக்க வேண்டும். அதுவும் மேனேஜர், டைரக்டர் போன்ற உயர்பதவிகளுக்கு எடுக்க வேண்டும். அதே வேலைக்கு ஒரு வெளிநாட்டவரையும் எடுக்க வேண்டும். எதற்கு ஒரே பதவியில் இரண்டு பேர்கள் என்கிறீர்களா? அங்கு தான் இருக்கிறது ட்விஸ்ட். குவைத்காரர் வேலையில் சேர வேண்டுமே தவிர வேலையெல்லாம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. அவரது வேலையை வெளிநாட்டவர் பார்த்துக்கொள்வார். சம்பளம் மாதம் தவறாமல் வந்துவிடும். அவரை டிஸ்மிஸ் எல்லாம் செய்யவே முடியாது.

குவைத்
குவைத்NewsSense

இதனால் தங்களது குடும்ப வாழ்க்கையை சரியாக பார்த்துக்கொள்வதே குவைத் மக்களின் தலையான கடன். அதற்கும் கல்யானம் செய்துகொன்டால் திருமண பரிசாக அரசே வீடுகட்ட, சொந்த வீடு வாங்க 60,000 தினார்களை வழங்கும் (சுமார் 1.5 கோடி). அதுக்கு மேல் பெரிய வீடாக வாங்கவேண்டுமெனில் வட்டியில்லா கடன் கிடைக்கும். பெட்ரோல் விலை உயர்ந்து நாட்டின் வருமானம் அதிகரிக்கும் ஆண்டுகளில் முழு கடனையும் தள்ளுபடி செய்துவிடுவார்கள்.

kuwait
எத்தியோப்பியா : இந்த நாட்டில் இப்போது தான் 2015 ஆம் ஆண்டு ஆகிறது - ஏன் தெரியுமா?

இப்போது குவைத் மக்களின் ஒரே கடனாக இருப்பது உயிர் வாழ்வது மட்டுமே. அதற்கும் ஊறு வந்தால், மருத்துவசெலவு இலவசம் மட்டுமல்ல. குவைத்தில் சிகிச்சை பெறமுடியாத அளவு சிக்கலான வியாதி என்றால் நாம் விரும்பும் நாட்டுக்கு போய் சிகிச்சை பெறலாம். அதற்கான மருத்துவ செலவு அரசினுடையது. அதுமட்டும் அல்ல நம்முடன் இருவரை கூட்டி செல்லலாம். அவர்களின் செலவும் அரசினுடையது.

Kuwait
KuwaitPexels

மருத்துவம் மட்டுமல்ல கல்வியும் இலவசம் தான். வெளிநாட்டில் போய்கூட படிக்கலாம். அரசின் செலவுதான். தவிர வெளிநாட்டில் தங்கிபடிக்க மாதம் ஒன்றுக்கு $2000 கூட அரசே வழங்கும்.

மின்கட்டனம், தண்ணீர் பில் எல்லாம் பெயரளவுக்குதான். அதைகூட பலரும் கட்டமாட்டார்கள். அதை அரசு அவ்வபோது தள்ளுபடி செய்துவிடும்.

வீட்டுக்கு வீடு பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பணியார்கள் இருக்கிறார்கள். பாகிஸ்தானி, இந்திய டிரைவர்களை எங்கும் காணலாம்.. வேலைக்காரரும், டிரைவரும் இல்லாத வீடுகள் குவைத்தில் இல்லை.

kuwait
குவைத் : மனிதர்கள் வாழ முடியாத நாடு ஆகிறதா Kuwait - என்ன நடக்கிறது அங்கே?

சும்மா இருந்தாலே சுக வாழ்வு கிடைப்பது குவைத்தியர்களுக்கு மட்டுமே. ஆனால் யாருக்கு வேண்டும் சுக வாழ்வு? குவைத் இளைஞர்கள் இங்கு ஒரு ட்விஸ்ட் வைக்கிறார்கள். கையிலிருக்கும் மொபைல் போனை சும்மா வைத்திருக்காமல் மன்னர் அமீரை விமர்சித்து ட்விட் போடுகிறார்கள்.

இது மன்னருக்கு கௌரவ பிரச்னையாக அமைந்துவிட அவர்கள் எத்தனை லைக் எனப் பார்பதற்குள் சிறையில் அடைக்கிறார்கள் அரசாங்கத்தினர். விமர்சனமெல்லாம் செய்யாமல் கையைக்கட்டி சுக வாழமுடியும் என நினைப்பவர்களுக்கு இங்கொரு கேள்வி எழும். குவைத் குடிமகன் எப்படி? என. அதற்கு வழி இல்லை. உலகிலேயே கிடைப்பதற்கு அரிய பாஸ்போர்ட் குவைத்தி பாஸ்போர்ட்தான். குவைத்திக்கு பிறப்பதுதான் குவைத் குடிமகன் ஆவதற்கு ஒரே வழி.

kuwait
ரஷ்யா யாகுட்ஸ்க் - உலகின் குளிர்ச்சியான இந்த நகரம் குறித்து தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com