உலகில் உள்ள பெரும்பாலான உயிரினங்கள் பொதுவாகச் செய்யும் இரண்டு விஷயம் உணவு உண்பது மற்றும் இனத்தைப் பெருக்குவது.
பாலியல் தொழிலுக்கென உலகில் தனி வரலாறே இருக்கிறது. இன்று டிஜிட்டல் யுகத்துக்குத் தகுந்தாற் போல பாலியல் தொழில், ஆபாசப் படங்கள் வரை பரிணமித்திருக்கிறது. அது ஒரு பிரம்மாண்ட துறையாகவும், அதிக பணம் கொட்டும் தொழிலாகவும் செழித்து வளர்ந்திருக்கிறது.
அதையும் தாண்டி செக்ஸ் டாய்ஸ் வரை மக்கள் மெல்ல பேசத் தொடங்கியுள்ளனர். இப்படி ஒரு சூழலில் ஆபாசப் படங்களை சட்ட விரோதமென அறிவிக்க வேண்டுமென ஒரு முன்னாள் பார்ன் நடிகை லானா ரோட்ஸ் கூறியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போது தன் 26ஆவது வயதில் இருக்கும் லானா ரோட்ஸ், 19 வயதிலேயே பார்ன் காணொளி தொழிலில் நடிகையாக களமிறங்கினார். ஆனால் வெகு விரைவாகவே பார்ன் நடிகை தொழிலிலிருந்து வெளியேறினார்.
"பாலியல் ரீதியில் அதிக அனுபவமில்லாத நான், எனக்கு பிடிக்காத ஒருவரோடு, நான் உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பாத ஒருவரோடு என் உடலை கட்டாயம் பகிர வேண்டும் என்பது எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது" என்றும் சில பத்திரிகைகளிடம் கூறியுள்ளார்.
இன்று வரை பல ஆபாச தளங்களிலும், லானா ரோட்ஸ் அதிகம் தேடப்படும் நபர்களில் ஒருவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஆபாசப் படத் துறையிலிருந்து வெளியேறியது முதல் தொடர்ந்து அத்துறைக்கு எதிராகவே பேசி வருகிறார்.
"உண்மையை சொல்ல வேண்டுமானால் நான் உடலுறவு வைத்துக் கொள்வதில்லை. நான் பாலியல் மீது நாட்டமில்லாத Asexual வகையைச் சேர்ந்தவள். எனக்கு மனிதர்கள் பெரிய அளவில் கவர்ச்சிகரமாகத் தோன்றியதில்லை" என தி ஸ்கின்னி கான்ஃபிடென்ஷியல் என்கிற பத்திரிகையிடம் கூறி பார்ன் ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.
இந்த பேட்டியில் தான் பாலியல் காணொளிகள் சட்ட விரோதமென அறிவிக்கப்பட வேண்டும், பாலியல் காணொளி தயாரிப்பைத் தடை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பார்ன் துறையில் ஆண், பெண் என இருவருக்குமே நல்ல சம்பளம் எதுவும் கொடுக்கப்படுவதில்லை. நானே பார்ன் துறையிலிருந்து வெளியேறிய போது சுமார் ஒரு லட்சம் அமெரிக்க டாலர் மட்டுமே கையிலிருந்தது. எனவே பார்ன் ஸ்டார்களின் கவர்ச்சிகரமான வாழ்கையைப் பார்த்து யாரும் ஏமாந்து வாழ்கையைத் தொலைத்துவிட வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார். அதற்கு பதிலாக இன்ஸ்டாகிராம் அல்லது ரசிகர்களுக்கு மட்டுமான தளங்களை நடத்தலாம் என்றும் கூறியுள்ளார்.
பாலியல் துறை எவருக்கும் எந்த நன்மையும் பயக்காது, யாருக்குமே அது நல்லதல்ல என்றும் கூறியுள்ளார்.
பார்ன் துறையிலிருந்து வெளியேறிய லானா ரோட்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி பிரமாதமாக பணம் சம்பாதித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் லானா ரோட்ஸை சுமார் 16.6 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். தற்போது அவரிடம் பல மில்லியன் டாலர் பணமிருக்கிறது.
லானா ரோட்ஸ், தன் இன்ஸ்டாகிராம் மற்றும் ரசிகர்களுக்கு மட்டுமான பிரத்யேக கணக்கு மூலம் சற்று ஆபாசக் குறைவான படங்கள் மற்றும் காணொளிகளைப் பதிவு செய்து வருவதாக லேட் பைபிள் என்கிற தளத்தின் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
சமீபத்தில் ஒரு என் பி ஏ கூடைப்பந்தாட்ட வீரர் உடனான உறவில் கர்ப்பமான லானா ரோட்ஸ், கடந்த ஜனவரி மாதம் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அவருக்கு மைலோ என பெயரிட்டு அன்போடு வளர்த்து வருகிறார் லானா ரோட்ஸ். இன்று வரை தன் மகனின் தந்தை யாரென, லானா ரோட்ஸ் பொதுவெளியில் இதுவரை பகிரவில்லை.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust