21 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த வைர மோதிரம் - திரும்ப கிடைத்தது எப்படி?

நமக்கு மிகவும் பிடித்த ஒரு பொருளை கண்ணும் கருத்துமாக பாதுகாப்போம். அது தொலைந்துபோனால் அந்த உணர்வை விவரிக்க முடியாது. ஆனால், தொலைந்த அந்த பொருள் திரும்பக் கிடைத்தால்?
21 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த வைர மோதிரம் - திரும்ப கிடைத்தது எப்படி?
21 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த வைர மோதிரம் - திரும்ப கிடைத்தது எப்படி?canva

21 ஆண்டுகளுக்கு முன் தொலைத்த நிச்சயதார்த்த மோதிரத்தை கண்டறிந்துள்ளனர் ஃப்ளோரிடாவை சேர்ந்த தம்பதியினர்.

மோதிரம் கிடைத்த சந்தோஷம் ஒரு பக்கம் இருக்க, இது தொலைந்து மீண்டும் கிடைத்த கதை இன்னும் வேடிக்கையாக இருக்கிறது.

நமக்கு மிகவும் பிடித்த ஒரு பொருளை கண்ணும் கருத்துமாக பாதுகாப்போம். அது தொலைந்துபோனால் அந்த உணர்வை விவரிக்க முடியாது. ஆனால், தொலைந்த அந்த பொருள் திரும்பக் கிடைத்தால்?

இங்கும் ஒரு தம்பதிக்கு, அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன் தொலைத்த பொக்கிஷம் ஒன்று திரும்ப கிடைத்திருக்கிறது.

நிக் டே என்ற ஃப்ளோரிடாவை சேர்ந்த நபர் தன் காதலி ஷானியாவிற்கு ப்ரொபோஸ் செய்த போது, ஒரு வைர மோதிரத்தை அளித்திருந்தார். ஆனால், அந்த மோதிரம் எதிர்பாராத விதமாக தொலைந்துவிட்டது.

அவர்களுக்கு திருமணமும் ஆகி, மோதிரத்தை தொலைத்து 21 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னும்,அந்த மோதிரம் அவர்களுக்கு திரும்ப கிடைக்கும் என அவர்கள் காத்திருந்தனர்.

மோதிரம் எப்படி தொலைந்தது?

ஒரு முறை ஷானியா மோதிரத்தை கழற்றி கழிவறையில் வைத்திருக்கிறார். அப்போது தவறுதலாக அதனை ஃபிளஷ் செய்துவிட்டதாக தன் கணவரிடம் அவர் கூறியுள்ளார்

21 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த வைர மோதிரம் - திரும்ப கிடைத்தது எப்படி?
30 ஆண்டுக்கு முன் தொலைந்த ஆமை உயிருடன் கண்டுபிடிப்பு! உரிமையாளர் நெகிழ்ச்சி

திருமணத்திற்கு ப்ரொபோஸ் செய்த போது கொடுக்கப்பட்ட மோதிரம் என்பதால், அதனை எப்படியாவது மீட்டெடுக்கும் முனைப்பில் இருந்தனர் தம்பதியினர்.

இதனால், சுயமாக செப்டிக் டான்க்கில் இறங்கி தேடியுள்ளனர். ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சியது.

திரும்ப கிடைத்த மோதிரம்:

இப்படி 20 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், கடந்த நவம்பர் மாதம் நிக்கின் தாயார், ரெனீ அவர்களது வீட்டில் இருக்கும் கழிவறை இருக்கையை (Toilet) மாற்ற முடிவு செய்துள்ளார்.

அப்போது அங்கு மோதிரம் ஒன்று கிடைத்துள்ளது. அதனை ரெனீ பார்த்தபோது, அவரது மருமகள் தொலைத்த மோதிரம் என்பதை கண்டறிந்துள்ளார்.

வெளிநாடுகளில் காதலிக்கு ப்ரொபோஸ் செய்யும் ஆண்கள், வம்சாவளியாக தன்னுடைய அம்மாவோ, பாட்டியோ அணிந்த அதே மோதிரத்தைக் கொடுத்து திருமணம் செய்துகொள்ள கேட்பது வழக்கம்.

கிடைத்த மோதிரத்தை சுத்தம் செய்த ரெனீ, அதனை கிறிஸ்துமஸ் பரிசாக மகன் மருமகளுக்கு வழங்கியுள்ளார். மோதிரம் திரும்பக் கிடைத்தது, மிகவும் நெகிழ்ச்சியான தருணமாக இருந்தது என்று அந்த தம்பதியினர் தெரிவித்திருந்தனர்.

21 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த வைர மோதிரம் - திரும்ப கிடைத்தது எப்படி?
5 அண்டுகளுக்கு முன்னர் தொலைந்த மூக்கு வளையம் - நுரையீரலில் கிடைத்ததால் அதிர்ச்சி!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com