அமெரிக்காவைச் சேர்ந்த துளையிடும் நிபுணர் ஜோயி லிகின்ஸ். இவரது நுரையீரலில் மூக்கு வளையத்தைத் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஜோயி ஒரு நள்ளிரவில் அதிகப்படியான இருமல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நிமோனியா இருக்கலாம் என மருத்துவர்கள் நினைத்தனர்.
அவரது நுரையீரலை எக்ஸ்-ரே ஸ்கேன் செய்த போது தான் அவர்கள் அதிலிருந்த 35 வருட பழைய பொருளைப் பார்த்திருக்கின்றனர். அதை ஜோயியிடம் காட்டிய போது அவர் "இதைத் தான் நான் தேடிக்கொண்டிருந்தேன்" என்றுக் கூறியிருக்கிறார்.
5 ஆண்டுகளுக்கு முன்னர் ஜோயி தனது மூக்கில் அணிந்திருந்த வளையத்தை தொலைத்திருக்கிறார். ஒரு நாள் காலையில் அதனை அறிந்த அவர் மொத்த படுக்கையையும் புரட்டிப் போட்டு தேடியிருக்கிறார். அது கிடைக்காததனால் தான் அதனை விழுங்கிவிட்டதாக நினைத்துக்கொண்டார்.
எக்ஸ்-ரே எடுத்த பின்னர் அந்த 0.6 இன்ச் நீளம் கொண்ட மூக்கு வளையத்தை மருத்துவர்கள் வெளியில் எடுத்தனர். அதிர்ஷ்டவசமாக அது அவரது நூரையீரலில் எந்த காயத்தையும் ஏற்படுத்தியிருக்கவில்லை.
இது வரை உடலில் 16 இடங்களில் துளையிட்டுள்ள இவர், இனி இந்த மூக்கு வளையத்தை அணியப்போவதில்லை என்று கூறியுள்ளார்.
இதனை நினைவுச் சின்னமாக வைத்துக்கொள்ளப் போகிறாராம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust