Paula Hurd: இவர் தான் பில் கேட்ஸின் புதிய காதலியா? இணையத்தை ஆக்கிரமித்த புகைப்படம்

மெலிண்டாவுடன் விவாகரத்து ஆகி இரண்டு ஆண்டுகள் முடிவடையவுள்ள நிலையில், பில் கேட்ஸ் தற்போது ஒருவரை டேட் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Paula Hurd: இவர் தான் பில் கேட்ஸின் புதிய காதலியா? இணையத்தை ஆக்கிரமித்த புகைப்படம்
Paula Hurd: இவர் தான் பில் கேட்ஸின் புதிய காதலியா? இணையத்தை ஆக்கிரமித்த புகைப்படம்ட்விட்டர்
Published on

மைக்ரோசாப்ட் துணை நிறுவனர் பில் கேட்ஸ் பாலா ஹர்ட் என்ற பெண்ணை டேட் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ஆரக்கிள் நிறுவனத்தின் முன்னாள் சி இ ஓ மார்க் ஹர்ட் என்பவரின் முன்னாள் மனைவி ஆவார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸ் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்துகொண்டனர். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் இருந்ததால், தங்களால் இனி இணைந்து வாழ இயலாது என்று 27 வருட திருமண வாழ்வை முறித்துக்கொண்டனர். இதற்கிடையில் பில் கேட்ஸ் வேறொரு பெண்ணுடன் திருமணம் மீறிய உறவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது

விவாகரத்து ஆனாலும், இருவரும் தங்களது பணி சார்ந்த விஷயங்களை, சமூக சேவைகளை இணைந்தே ஆற்றி வருகின்றனர்.

மெலிண்டாவுடன் விவாகரத்து ஆகி இரண்டு ஆண்டுகள் முடிவடையவுள்ள நிலையில், பில் கேட்ஸ் தற்போது ஒருவரை டேட் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் காதலித்து வருவதாக கூறப்படும் பாலா ஹர்ட் என்ற பெண்மணி, முன்னாள் ஆரக்கிள் சி இ ஓ மார்க் ஹர்ட்டின் மனைவி ஆவார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மார்க் ஹர்ட் கடந்த 2019 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

வட்டாரங்களின் கூற்றுப்படி ”பில் கேட்ஸ் மற்றும் பாலா ஹர்ட் டேட் செய்து வருகின்றனர். ஆனால் பில் கேட்ஸின் குழந்தைகளை பாலா இன்னும் சந்திக்கவில்லை”

Paula Hurd: இவர் தான் பில் கேட்ஸின் புதிய காதலியா? இணையத்தை ஆக்கிரமித்த புகைப்படம்
Bill Gates : விவாகரத்து செய்த மனைவியை மீண்டும் திருமணம் செய்ய பில்கேட்ஸ் விருப்பம்

இவர்கள் இருவரும் சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோடியாக காணப்பட்டனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பில் கேட்ஸின் நெருங்கிய வட்டாரங்களும், இருவரும் இணை பிரியாமல் இருப்பதாகவும் காதலித்து வருவதாகவும் கூறுகின்றனர்

சமூக ஆர்வலரான பாலா தற்போது ஒரு ஈவண்ட் மேனேஜராக இருக்கிறார். இவருக்கும் மார்க் ஹர்டுக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

Paula Hurd: இவர் தான் பில் கேட்ஸின் புதிய காதலியா? இணையத்தை ஆக்கிரமித்த புகைப்படம்
Johnny Depp: பிரிவில் இணைந்த இதயங்கள் - வழக்கறிஞரை டேட் செய்யும் நடிகர்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com