பெண்களுக்கான விருது பட்டியலில் ஆணின் பெயரால் சர்ச்சை - காரணம் என்ன?

சைமன் பட்டன் என்பவரது பெயரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பெண்களுக்கான விருது பட்டியலில் ஒரு ஆணின் பெயர் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Award (Rep)
Award (Rep)Pexels
Published on

பெண்களுக்கான விருதுகள் பட்டியலில் ஆண் ஒருவரின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதை அறிந்த அந்த நபர் அதிர்ச்சியடைந்தது மட்டுமல்லாமல், தனது கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

வுமன் டெக்னாலஜி விருதுகளின் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றவர்களின் பட்டியலில், சைமன் பட்டன் என்ற நபரின் பெயரும் இடம்பெற்றது சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான Inspiring Diversity in STEM விருது போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

Award (Rep)
Sacheen Littlefeather: இந்த பெண்ணிடம் 49 ஆண்டுக்குப் பின் ஆஸ்கார் மன்னிப்பு கேட்டது ஏன்?

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த விழாவில், தொழில்நுட்பம் மற்றும் வாழ்க்கை அறிவியல் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களை கௌரவிக்கும் விதமாக விருதுகள் வழங்கப்படும். மேலும், பெண்களில் திறன் மற்றும் அவர்களது சாதனை ஆகியவற்றிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்துடனும் இந்த விருதுகள் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு, பாலின பாகுபாடின்றி ஒருவரது முயற்சி மற்றும் அர்ப்பணிப்பை கௌரவிக்க முடிவு செய்துள்ளது அமைப்பு. அதனடிப்படையில், STEMல் வேலை செய்யும் பெண்களுக்கு நியாயமான அங்கீகாரம் கிடைக்க மற்றும், அவர்களது வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்பவர்களையும் கௌரவிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

இதனடிப்படையில் தான், சைமன் பட்டன் என்பவரது பெயரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பெண்களுக்கான விருது பட்டியலில் ஒரு ஆணின் பெயர் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஒரு தரப்பினர், இவரது பெயர் இடம் பெற்றதை விமர்சித்து வந்தனர். மற்றொரு தரப்பிலோ, ஒரு கருப்பின பெண்ணையோ, உள்ளூரில் இருக்கும் பெண்ணையோ, அல்லது, வெள்ளைத் தோல் அல்லாத மற்ற பெண்களை அங்கீகரிப்பதை விட ஒரு ஆணுக்கு நீங்கள் விருதினை வழங்குகிறீர்களா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Award (Rep)
அமெரிக்காவில் சிறந்த உணவகம் என விருது பெற்று இந்திய உணவகம் சாதனை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com