சூரிய வெப்பத்தில் பன்றிகறி சமைக்கும் நபர் : வைரலான புகைப்படம் - எங்கே?

கடந்த 2019-ம் ஆண்டு 38.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகபட்ச வெப்பநிலையாகக் கருதப்பட்டது. ஆனால் தற்போது இங்கிலாந்தின் பல பகுதிகளில் வெப்பநிலை க 40 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது.
bacon
baconCanva
Published on

இங்கிலாந்தில் நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக, அங்கு ஒருவர் குளிர்சாதனப் பெட்டியின் மேல் பன்றி இறைச்சி துண்டுகளை சமைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பின் காரணமாக பொது மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

heat wave
heat wavetwitter

இந்த நிலையில் அங்கு ஒரு நபர் குளிர்சாதனப் பெட்டியின் மேல் சூரிய ஒளியின் வெப்பத்தின் உதவியுடன் சமைக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இங்கிலாந்தின் மேற்கு யார்க்ஷயரைச் சேர்ந்த டேனி ஹாவ் என்ற 30 வயதுடைய நபர் 40டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் தனது பளபளப்பான குளிர்சாதனப் பெட்டியினை வெளியே கொண்டு வந்து, அதன் மேல் பன்றி இறைச்சி, முட்டை மற்றும் பீன்ஸை சூரிய வெப்பத்தின் உதவியுடன் சமைக்கிறார்.

அதனைப் புகைப்படம் எடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் இன்றைய காலை உணவு எனது குளிர்சாதனப் பெட்டியின் மேற்பகுதியில் சூரிய ஒளியின் உதவியுடன் எனப் பதிவிட்டுள்ளார்.

bacon
ஒடிசா : கார் பேனட்டில் சப்பாத்தி சுடும் இளம்பெண் - வைரல் வீடியோ
bacon, eggs, and beans
bacon, eggs, and beansTwitter

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக தாவரவியல் பூங்காவில் கடந்த 2019-ம் ஆண்டு அதிகப்படியாக 38.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகபட்ச வெப்பநிலையாகக் கருதப்பட்டது. ஆனால் தற்போது இங்கிலாந்தின் பல பகுதிகளில் வெப்பநிலை க 40 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

bacon
வெயில் காலத்தில் வரும் சூடு கட்டிகள் - என்ன தீர்வு?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com