உணவு வழங்கும் போது கையை கடித்த புலி, Zoo ஊழியர் மரணம் - வைரலாகும் வீடியோ

மெக்சிகோவில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலையில் புலிக்கு உணவு வழங்க சென்ற ஊழியரின் கையை புலி கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது
Tiger(representational)
Tiger(representational)Pexels
Published on


ஜோஸ் என்ற 23 வயது நபர் மெக்சிகோவின் பெரிபன் நகரிலுள்ள மிருகக்காட்சி சாலையில் பணியாற்றி வருகிறார். இங்கு சுழற்சி முறையில் ஊழியர்கள் விலங்குகளுக்கு உணவு வழங்குவது வழக்கம்

சிங்கம், புலி, கரடி, முதலை போன்ற விலங்குகள் இங்கு பராமரிக்கப்பட்டு வருவதால், மிக கவனத்துடன் இவற்றிற்கு உணவு வழங்குவது அவசியமாகிறது. இந்நிலையில், நேற்றைய முறை ஜோஸிடம் போக அவர் மற்ற விலங்குகளுக்கு உணவு வழங்கி, அங்கு பராமரிக்கப்படும் புலி ஒன்றுக்கு உணவு வழங்க சென்றார்.

Tiger Mauls Zookeeper
Tiger Mauls ZookeeperYoutube
Tiger(representational)
இளைஞரை இழுத்துப் பிடித்த குரங்கு - இணையத்தில் வைரலான கிளாமர் அப்பீல் சம்பவம்

அந்த புலியும் உணவுக்காகக் காத்திருக்கவே, ஜோஸ் அதை தலை கோதிவிட்டு உணவு வழங்க தயாராக, சற்றும் எதிர்பாராத விதமாக அந்த புலி ஜோஸின் கையை கவ்வி பிடித்தது.


வலியோடு அலறிய ஜோஸை சக பணியாளர்கள் சேர்ந்து புலியிடமிருந்து மீட்டனர். இந்த சம்பவத்தால் அந்த இடமே ரத்த வெள்ளத்திலிருந்தது.


மீட்கப்பட்ட ஜோஸை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சையாக்கப்பட்டு வந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு ஜோஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Tiger(representational)
Tiger(representational)Pexels

புலியுடன் விளையாடியதால் தான் அது அவரது கையை பிடித்ததாகக் கூறிய மிருகக்காட்சி சாலையின் உரிமையாளர், இந்த இழப்புக்கு அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.


இதற்கிடையில், சிங்கம், புலி, முதலை போன்ற விலங்குகளை வளர்ப்பதற்கான ஏற்ற சூழலோடு தான் அந்த மிருகக்காட்சி சாலை அமைக்கப்பட்டுள்ளதா என்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புலி அந்த ஊழியரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை மீடியா போர்டல் என்ற சேனல் பகிர்ந்திருந்தது.

இதற்கு முன்னர் இதே போல ஒரு மிருகக்காட்சி சாலை ஊழியர் சிங்கத்திடம் விளையாடியபோது, அந்த சிங்கம் அவரது கையை கவ்வி பிடித்து காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது

Tiger(representational)
ஜமைக்கா: சிங்கத்திடம் கடி வாங்கிய காப்பாளர் - நடந்தது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com