உயரமாக அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட நபர் : 1.2 கோடி செலவில் சிகிச்சை - எங்கே?

இதுவரை நாம் கேள்விப்பட்டிராத விஷயமாக இருந்தாலும், 1950களிலிருந்தே நடைமுறையில் இருக்கும் ஒரு சிகிச்சை தான் என்கிறது டைம்ஸ் நவ் தளம்
ராய் கான்
ராய் கான்twitter
Published on

ராய் கான் என்ற 68 வயது நபர் ஒருவர் ரூ.1.2 கோடி செலவு செய்து 3 அடி உயரமாகியுள்ளார்.

நடிகர் நடிகைகள் தொடங்கி சாதாரண மக்கள் வரை, காஸ்மெடிக் சர்ஜரி செய்துகொள்வது பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கு ஒருவர் தனது உயரத்தை அதிகரிக்க அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்

ஒரு சிக்கலான எலும்பு நீட்டிப்பு அறுவை சிகிச்சை இவருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தசைநார்கள், ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த எலும்பு நீட்டிப்பு சிகிச்சை செய்யப்படுகிறது.

இது, இதுவரை நாம் கேள்விப்பட்டிராத விஷயமாக இருந்தாலும், 1950களிலிருந்தே நடைமுறையில் இருக்கும் ஒரு சிகிச்சை தான் என்கிறது டைம்ஸ் நவ் தளம்

ஐடிவிக்கு ராய் கொடுத்த பேட்டியில், இந்த சிகிச்சைக் குறித்து அவருக்கு முன்னரே தெரிந்திருந்தது எனவும், தற்போது தான் அவரால் இதற்கான பணத்தை ஈட்ட முடிந்ததாகவும் கூறினார். ”நான் உயரம் குறைவாக இருந்தது பற்றி எனக்கு தயக்கங்கள் இருந்ததில்லை” எனவும் அவர் தெரிவித்தார்.

ராய் கான்
31,000 ஆண்டுகளுக்கு முன் அறுவை சிகிச்சை செய்தனரா குகை மனிதர்கள் ? ஆய்வில் வெளியான தகவல்

இந்த சிகிச்சை மிகவும் வலி மிகுந்ததாக இருந்தது என அவர் தெரிவித்தார்.

இந்த சிகிச்சையில் எலும்புகள் ஒரு அங்குல நீளம் வளர்ச்சி அடைய 25 நாட்கள் வரை ஆகும். மூன்று அங்குல நீளத்தைப் அடைய,கிட்ட தட்ட இரண்டரை மாதங்கள் அல்லது அதற்கு மேல் ஆகும்." என ராய்க்கு சிகிச்சை அளித்த மருத்துவர், கெவின் டெபி பிரசாத் கூறினார்.

முதலில் 5 அடி 6 அங்குலமாக இருந்த ராயின் உயரம், அறுவை சிகிச்சைக்கு பிறகு 5 அடி 9 அங்குலமாக உயர்ந்துள்ளது.

ராய் கான்
9 மணி நேரம்... இசைக்கருவியை வாசித்தபடியே அறுவை சிகிச்சை செய்து கொண்ட நபர் | Video

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com