"அழகியே Marry Me?" உலகைச் சுற்றி Google Earths மூலம் காதலிக்கு பிரப்போஸ் செய்த இளைஞர்!
"அழகியே Marry Me?" உலகைச் சுற்றி Google Earths மூலம் காதலிக்கு பிரப்போஸ் செய்த இளைஞர்!twitter

"அழகியே Marry Me?" உலகைச் சுற்றி Google Earth மூலம் காதலிக்கு பிரப்போஸ் செய்த இளைஞர்!

கடந்த 2008ஆம் ஆண்டு, காதலியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ள பிரப்போஸ் செய்ய முடிவெடுத்தார் யகுஷி. வழக்கம்போல அல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக கேட்க நினைத்தார்.
Published on

கிட்ட தட்ட ஆறு மாதம் உலகின் பல்வேறு இடங்களுக்கு பயணித்து கூகுள் எர்த் மூலம் தனது காதலிக்கு பிரப்போஸ் செய்துள்ளார் டோக்கியோவை சேர்ந்த இளைஞர்.

இதனை அங்கீகரித்து கின்னஸ் உலக சாதனைகள். அவர்களது சாதனையாளர்கள் பட்டியலில் இளைஞரின் பெயரையும் சேர்த்துக் கொண்டனர்.

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவை சேர்ந்தவர் யகுஷி யசன் தகாஹாஷி. இவர் நட்சுகி என்ற பெண்ணை காதலித்துவந்தார்.

கடந்த 2008ஆம் ஆண்டு, காதலியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ள பிரப்போஸ் செய்ய முடிவெடுத்தார் யகுஷி. வழக்கம்போல அல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக கேட்க நினைத்தார்.

யகுஷி கூகுள் எர்த் மற்றும் ஸ்ட்ரீட் வியூஸில் பத்து ஆண்டுகளாக பணிபுரிபவர். இவர் ஜிபிஏஸ் ஆர்ட்களை உருவாக்குபவர்.

அதாவது, ஜிபிஎஸ் ஆர்ட் என்பது முன்னரே தீர்மானிக்கப்பட்ட பாதையில் ஜிபிஎஸ் சாதனத்துடன் பயணிப்பதன் மூலம் பெரிய அளவிலான டிஜிட்டல் வரைபடத்தை உருவாக்கும் கலை என்று கூகுள் விளக்குகிறது.

கூகுள் எர்த் போன்ற மேப்பிங் கருவியில் பாதை பதிவேற்றப்படும் போது, ​​நாம் பயணிக்கும் தூரம் வடிவம் பெறுகிறது.

"அழகியே Marry Me?" உலகைச் சுற்றி Google Earths மூலம் காதலிக்கு பிரப்போஸ் செய்த இளைஞர்!
மானசா கோபால் : உணவு டெலிவரி செய்ய 4 கண்டங்கள் கடந்து 30,000 கி.மீ பயணித்த பெண் - ஏன்?

இதனை பயன்படுத்தி பிரப்போஸ் செய்ய நினைத்த யகுஷி, தனது வேலையை விட்டார். ஹொக்கைடோ தீவில் இருந்து, ககோஷிமா என்ற இடத்திற்கு பயணிக்க திட்டமிட்டார் யகுஷி. இதற்கான வழியை ஆங்கிலத்தில் பயன்படுத்தும், Marry Me என்ற வாசகம் உருவாக்கும் வண்ணம் அவர் திட்டமிட்டார்.

சுமார் 6 மாதம், 7000 கிலோமீட்டர் தூரம் கடந்து தன் பயணத்தை முடித்தார் யகுஷி. இதனை கூகுள் எர்த்தில் வரைபடமாக்கியபோது Marry Me என்ற வாசகமும், ஒரு இதயம் அம்புக் குறியுடன் இருந்தது.

இவ்வளவு கஷ்டப்பட்டதற்கு காதலி ஓகே சொன்னாரா என்ற கேள்வி நமக்கு வரும்.

“இது மிகப் பெரிய சர்பிரைஸ் ஆக இருந்தது. உலகின் மிகப் பெரிய காதலை நான் உணர்ந்தேன்” என்றவர், யகுஷியை மணக்கவும் சம்மதித்தார்.

இவர்கள் திருமணமும் செய்துகொண்டனர். கடந்த 2019ஆம் ஆண்டு இவர்களது காதல் கதை இணையத்தில் பரவியது. இவரது பிரப்போசல் ஜிபிஎஸ் ஆர்ட்டிற்கு பல்லாயிரம் வியூக்கள் வந்துள்ளது.

இவரது இந்த முயற்சியை பாராட்டி கின்னஸ் உலக சாதனைகள் இவரை அங்கீகரித்துள்ளது.

"அழகியே Marry Me?" உலகைச் சுற்றி Google Earths மூலம் காதலிக்கு பிரப்போஸ் செய்த இளைஞர்!
18 ஆண்டுகள், 13,000 கிமீ: காதலியை பார்க்க கண்டங்கள் கடந்த நாரை - ஒரு காவிய காதல் கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com