Ukraine Russia war : உக்ரைனில் மீண்டும் கடையை திறக்கும் மெக்டொனால்ட்ஸ் - விரிவான தகவல்கள்

உக்ரைனில் மெக்டொனால்ட்ஸ் கடைகள் திறக்கப்படுவது ஒரு விதத்தில் பழைய நிலை திரும்பும் உணர்வைக் கொடுக்கும். அதோடு மெக்டொனால்ட்ஸ் கடைகள் திறக்கப்படுவது உக்ரைன் நாட்டில் உள்ள உள்ளூர் பொருளாதாரத்துக்கும் மக்களுக்கும் உதவியாக இருக்கும் என்றும் உக்ரைன் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
McDonald's
McDonald's Twitter
Published on

உலகின் மிகப்பெரிய துரித உணவுக்கடை நிறுவனமான மெக்டொனால்ட்ஸ், போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கும் உக்ரைனில் தன் கடைகளை மீண்டும் திறக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்தது. அதனைத் தொடர்ந்து பல வணிக நிறுவனங்கள் உக்ரைனில் தங்கள் வியாபாரத்தைத் தொடர முடியாமல் தவித்தன. அதில் மெக்டொனால்ட்ஸ் நிறுவனமும் ஒன்று.

அடுத்த சில பல மாதங்களில் மெல்ல உக்ரைனில் உள்ள கைவ் நகரம் மற்றும் மேற்கு உக்ரைனில் பாதுகாப்பான இடங்களில்மெக்டொனால்ட்ஸ் கடைகள் திறக்கப்படும் என அந்நிறுவன தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

restaurant
restaurantTwitter

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான போர் தொடங்குவதற்கு முன் உக்ரைனில் சுமார் 100 மெக்டொனால்ட்ஸ் கடைகள் இருந்ததாக பிபிசி தளத்தில் பிரசுரமாகியுள்ள கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. போர் நடந்து கொண்டிருக்கும் காலத்தில் கூட, மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்துக்கு உக்ரைனில் இருந்த கடைகளில் வேலை பார்த்து வந்த சுமார் 10,000 தொழிலாளர்களுக்கும் சம்பளம் கொடுத்து வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

நாங்கள் எங்கள் ஊழியர்களிடம் தொழில் தொடங்குவது குறித்து விரிவாகப் பேசிய போது, அவர்கள் மீண்டும் பணிக்கு வரவும், உக்ரைனில் மெக்டொனால்ட்ஸ் திறக்கப்படுவதைப் பார்க்கவும் மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தினர் என மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் பால் பாம்ராய் கூறியதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

உக்ரைனில் மெக்டொனால்ட்ஸ் கடைகள் திறக்கப்படுவது ஒரு விதத்தில் பழைய நிலை திரும்பும் உணர்வைக் கொடுக்கும். அதோடு மெக்டொனால்ட்ஸ் கடைகள் திறக்கப்படுவது உக்ரைன் நாட்டில் உள்ள உள்ளூர் பொருளாதாரத்துக்கும் மக்களுக்கும் உதவியாக இருக்கும் என்றும் உக்ரைன் அதிகாரிகள் தரப்பில் வரவேற்கப்பட்டுள்ளது.

McDonald's
உக்ரைன் ரஷ்யா போர் : 'இனி இதுதான் ரஷ்யாவின் புதிய MC Donald's' - சில ஆச்சர்ய தகவல்கள்
Russia-Ukraine War
Russia-Ukraine WarTwitter

ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் காரணமாக, இந்த ஆண்டு உக்ரைன் பொருளாதார வளர்ச்சி சுமார் 35 சதவீதம் சரியலாம் என சில பகுப்பாய்வாவார்கள் கணித்துள்ளனர். இதில் ஏற்றுமதி தடைப்பட்டது முதல் உக்ரைன் நாட்டில் உள்ள முக்கிய அடிப்படைக் கட்டுமானங்கள் சேதமடைந்தது, பல்லாயிரக் கணக்கான வணிகங்கள் முடங்கியது வரை அனைத்தும் இதில் அடங்கும்.

கடந்த 2022 ஜூன் மாதம் யேல் பல்கலைக்கழகம் நடத்திய மேற்கத்திய வணிகத் தலைவர் மாநாடு ஒன்றில் பேசிய உக்ரைன் அதிபர் வொலொடிமைர் செலென்ஸ்கி, தங்கள் நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.

உக்ரைன் நாட்டில் இருக்கும் பிரிட்டன் உட்பட சுமார் 12 நாட்டின் தூதரகங்கள் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே திறக்கப்பட்டதை அப்போது அவர் மனதாரப் பாராட்டி கொண்டாடியதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

கே எஃப் சி, நைக், சாரா... போன்ற பல பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் விரைவில் உக்ரைனில் தங்கள் கடைகளைத் தொடங்கி வியாபாரம் பார்க்க உள்ளன.

McDonald's
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி : போருக்கு மத்தியில் போட்டோ ஷூட் - வலுக்கும் எதிர்ப்பு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com