உக்ரைன் ரஷ்யா போர் : 'இனி இதுதான் ரஷ்யாவின் புதிய MC Donald's' - சில ஆச்சர்ய தகவல்கள்

இந்த ஜூன் மாதத்துக்குள் ரஷ்யா முழுக்க 200 கடைகளையும், ரஷ்யாவில் கோடைக் காலத்துக்குள் 850 கடைகளும் திறக்க Vkusno & tochka நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
McDonald's
McDonald's Twitter

McDonald's பர்கர், ஃபிரெஞ்சு ஃப்ரைஸ் போன்றவைகளை இந்த பூமியில் உள்ள பல கோடி பேர் சுவைத்திருப்பர். அதில் நானும் நீங்களும் கூட ஒருவராக இருக்கலாம்.

அமெரிக்க நகரங்களைக் கடந்து சென்னை, மும்பை, டெல்லி போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களில் வாழும் மக்களுக்கு McDonald's தினமும் சென்று வரும் டீ கடை போல இருப்பதைக் கூட நாம் பார்த்திருப்போம். அந்த அளவுக்கு உலகம் முழுக்க McDonald's-ன் சுவைக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். இதில் ரஷ்ய மக்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?

கடந்த 2022 பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் கடுமையான போர் நடந்து கொண்டிருக்கிறது. உக்ரேனுக்கு ஆதரவாகப் பல சர்வதேச நிறுவனங்கள், ரஷ்யாவில் தங்கள் வியாபாரத்தைக் கைவிட்டனர் அல்லது மற்றவர்களிடம் கொடுத்துவிட்டு வெளியேறினர். அதில் அமெரிக்காவின் மெக்டொனால்ட்ஸ் உணவு நிறுவனமும் ஒன்று.

restaurant
restaurantTwitter

McDonald's நிறுவனத்துக்கு ரஷ்யா முழுக்க சுமார் 850 கடைகள் இருக்கின்றன. போரைக் காரணம் காட்டி ரஷ்யாவிலிருந்து வெளியேறுவதாகவும், தன்னுடைய கடைகளை வேறு ஒரு நிறுவனத்துக்கு விற்று வெளியேற இருப்பதாகவும் கடந்த 2022 மே மாதம் கூறியது.

அதன்படியே, ரஷ்யாவில் உள்ள தன் 850 உணவகங்களையும் அலெக்ஸாண்டர் கோவர் (Alexander Govor) என்பவருக்கு விற்றுவிட்டது. இவர் ஏற்கனவே சைபீரியாவில் 25 மெக்டொனால்ட்ஸ் கடைகளை நடத்திய ஃபிரான்சைஸி என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவில் இருந்த 850 கடைகளளையும் வாங்கும் அளவுக்கு அலெக்ஸாண்டரிடம் போதிய பணம் இல்லை என்றும், அதற்கு சோவோகாம் பேங்க் (Sovcombank) என்கிற பல சர்வதேச அமைப்புகளால் பொருளாதார ரீதியில் தடை செய்யப்பட்ட வங்கி பெரிதும் உதவியதாக சில சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

Vkusno & tochka
Vkusno & tochka Twitter

அப்படி மெக்டொனால்ட்ஸின் கடைகளை வாங்கிய அலெக்ஸாண்டர், Vkusno & tochka என்கிற பெயரில் மீண்டும் மெக்டொனால்ட்ஸ் கடைகளில் மீன் பர்கர், சிக்கன் நக்கெட்ஸ், டபுள் சீச் பர்கர் போன்றவைகளை விற்கத் தொடங்கியுள்ளார். மெக்டொனால்ட்ஸின் பிக் மேக், ஹேப்பி மீல்ஸ் போன்ற பெயர்களைப் பயன்படுத்தி வியாபாரம் செய்ய முடியாது என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூன் 12 ஞாயிற்றுக்கிழமை, முதற்கட்டமாக மாஸ்கோவில் மட்டும் 15 Vkusno & tochka உணவகங்கள் திறக்கப்பட்டன. மெக்டொனால்ட்ஸ் உணவகமே மீண்டும் திறக்கப்படுவது போலக் கருதி, மக்கள் பலரும் மணிக் கணக்கில் வரிசையில் நின்று பர்கர், கோக், நக்கெட்ஸ் வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்ததாகச் செய்திகள் வெளியாயின.

இந்த ஜூன் மாதத்துக்குள் ரஷ்யா முழுக்க 200 கடைகளையும், ரஷ்யாவில் கோடைக் காலத்துக்குள் 850 கடைகளும் திறக்க Vkusno & tochka நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இக்கடைகளில் சுமார் 51,000 பேர் வேலை பார்த்து வருகிறார்கள்.

McDonald's
சவுதி அரேபியா : 30 ஆண்டுகளாக கழிவறையில் தயாரிக்கப்பட்ட இந்திய உணவுகள் - ஆய்வில் அதிர்ச்சி

"Vkusno & tochka கடையை மெக்டொனால்ட்ஸுடன் ஒப்பிடும் போது தரத்திலும், சூழலிலும் எங்கள் வாடிக்கையாளர்கள் பெரிய வித்தியாசத்தைக் காணக் கூடாது என்பதே எங்கள் நோக்கம்" என அந்நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி ஓலெக் பரோவ் கூறினார்.

இந்த சலசலப்புகளுக்கு மத்தியிலும், Vkusno & tochka-வின் உணவகங்களை மேம்படுத்த சுமார் ஏழு பில்லியன் ரஷ்ய ருபெல்லை முதலீடு செய்ய உள்ளதாகக் கூறியுள்ளார் அலெக்ஸாண்டர்.

பழைய மெக்டொனால்ட்ஸ் கடைகளை (அதாவது புதிய Vkusno & tochka) திறந்த போது வாடிக்கையாளர் ஒருவர் ' பிக் மேக்கை திரும்பக் கொண்டு வாருங்கள்' என்கிற பதாகையோடு கடைக்குள் நுழைந்திருக்கிறார். அவரை காவலர்கள் அப்புறப்படுத்தினர்.

1990ஆம் ஆண்டு சோவியத் மாஸ்கோவில் வலது கால் எடுத்து வைத்து தன் வியாபாரத்தைத் தொடங்கிய மெக்டொனால்ட்ஸ், 2022ஆம் ஆண்டு ஒரு போரினால் தன் வியாபாரத்தை அப்படியே விற்று வெளியேறியுள்ளது. மெக்டொனால்ட்ஸின் சுவையை மறக்கடித்து Vkusno & tochka-வின் சுவையை நிறுவ வேண்டிய கட்டாயத்தில் தன் வியாபாரத்தைத் தொடங்கியுள்ளார் அலெக்ஸாண்டர் கோவர்.

McDonald's
10 நிமிடத்தில் பேல் புரி செய்த பெண்ணை பார்த்து வியந்த நடுவர்கள் - கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com