மிகைல் கோர்பச்சேவ்: சோவியத் யூனியனின் கடைசித் தலைவர் - ஒரு சகாப்தத்தின் கதை!

ஏறக்குறைய சரிவின் கட்டத்திலிருந்த நலிந்திருந்த சோவியத் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே கோர்பச்சேவின் முதல் பணியாக இருந்தது. நாடுகளின் எல்லையைக் கடந்து சிந்தித்தத் தலைவராக வாழ்த்தப்பட்டாலும் முதலாளித்துவ அனுசரிப்புகளுக்காக விமர்சிக்கப்படுகிறார்.
மிகைல் கோர்பச்சேவ்
மிகைல் கோர்பச்சேவ்Twitter

20 ஆம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல் பிரமுகர்களில் ஒருவரான மிகைல் கோர்பச்சேவ் ஏறக்குறைய 70 ஆண்டுகளாக வலுவுடன் இருந்த சோவியத் யூனியன் கலைக்கப்பட்டதற்குத் தலைமை தாங்கினார்.

கோர்பச்சேவ் அமெரிக்காவுடனான கெடுபிடிப்போரை முடித்து வைத்து 1985 இல் தனது சீர்திருத்தத் திட்டத்தை அறிவித்த போது, ​​அவரது ஒரே நோக்கம் தனது நாட்டின் தேக்கமடைந்த பொருளாதாரத்தைப் புதுப்பிக்கவும் அதன் அரசியல் செயல்முறைகளை மாற்றியமைக்கவும் மட்டுமே இருந்தது.

அவரது முயற்சிகள் சோவியத் ஒன்றியத்திற்குள் மட்டுமல்ல, அதன் முன்னாள் துணை நாடுகளிலும் கம்யூனிச ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.

கோர்பச்சேவின் இளமைக்காலம்

மைக்கேல் கோர்பச்சேவ் 2 மார்ச் 1931 அன்று தெற்கு ரஷ்யாவின் ஸ்டாவ்ரோபோல் பகுதியில் பிறந்தார். அவரது பெற்றோர் இருவரும் கூட்டுப் பண்ணைகளில் பணி புரிந்தனர்.1955 இல் அவர் மாஸ்கோ மாநில பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற நேரத்தில் அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர உறுப்பினராக மாறினார். அவர் தனது மனைவி ரைசாவுடன் ஸ்டாவ்ரோபோலுக்குத் திரும்பியதும், அவர் அங்கே கம்யூனிசக் கட்சியில் சேர்ந்து பணியாற்றினார். கோர்பச்சேவ் ஒரு புதிய தலைமுறை கட்சி செயல்பாட்டாளர்களில் ஒருவராக இருந்தார். இந்த புதியவர்கள் சோவியத் வரிசை முறையின் உச்சியில் உள்ள வயதான நபர்களின் செயல்பாடுகளால் பொறுமையிழந்தனர். 1961 வாக்கில் அவர் இளம் கம்யூனிஸ்ட் லீக்கின் பிராந்திய செயலாளராகவும், மற்றும் கட்சி காங்கிரஸின் பிரதிநிதியாகவும் ஆனார்.

Gorbachev and Raisa
Gorbachev and Raisa

கட்சித் தலைமைக்கு முன்னேறிய கோர்பச்சேவ்

1978 ஆம் ஆண்டில் அவர் விவசாயத்திற்கான மத்தியக் குழு செயலகத்தின் உறுப்பினராக மாஸ்கோவிற்குச் சென்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் பொலிட்பீரோவின் முழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

யூரி ஆண்ட்ரோபோவ் பொதுச் செயலாளராக இருந்த காலத்தில், கோர்பச்சேவ் பல வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டார். ஆண்ட்ரோபோவ் 1984 இல் இறந்த போது கோர்பச்சேவ் தலைமைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குப் பதிலாக நோய்வாய்ப்பட்ட கான்ஸ்டான்டின் செர்னென்கோ பொதுச் செயலாளராக ஆனார். ஒரு வருடத்திற்குள் அவரும் இறந்து விட்டார். அவருக்குப் பிறகு பொலிட்பீரோவின் இளைய உறுப்பினரான கோர்பச்சேவ், கட்சியின் பொதுச் செயலாளராக பதவியேற்றார்.

அவர் 1917 புரட்சிக்குப் பிறகு பிறந்த முதல் பொதுச் செயலாளராக இருந்தார். மற்றும் லியோனிட் ப்ரெஷ்நேவ் ஆட்சியின் போது இரும்புக் கோட்டையாக இருந்த சோவியத் யூனியனில் இப்போது சுதந்திரமான புதிய காற்று வீசத் துவங்கியது.

கோர்பச்சேவின் ஸ்டைலான உடை மற்றும் வெளிப்படையான, நேரடியான நடை அவரது முன்னோடிகளைப் போல் இல்லாமல் இருந்தது. மேலும் அவரது மனைவியான ரைசா ஒரு பொதுச் செயலாளரின் மனைவியை விட அமெரிக்காவின் முதல் பெண்மணியைப் போலவே இருந்தார்.

சுதந்திர சந்தை

ஏறக்குறைய சரிவின் கட்டத்திலிருந்த நலிந்திருந்த சோவியத் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே கோர்பச்சேவின் முதல் பணியாக இருந்தது.

அவருடைய பொருளாதாரச் சீர்திருத்தங்கள் வெற்றி பெற வேண்டுமானால், கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை முதல் கிளை வரை சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று நம்பினார்.

கோர்பச்சேவ் இரண்டு தீர்வுகளை முன்வைத்தார். நாட்டிற்கு "பெரெஸ்ட்ரோயிகா" அல்லது மறுசீரமைப்பு தேவை என்றும் அதைக் கையாள்வதற்கான கருவி "கிளாஸ்னோஸ்ட்" - வெளிப்படைத் தன்மை என்றும் அவர் கூறினார்.

1991 இல் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என மறுபெயரிடப்பட்ட லெனின்கிராட்டின் கம்யூனிஸ்ட் நிர்வாகிகளிடம் "நீங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளீர்கள், நீங்கள் தயாரிக்கும் தரக்குறைவான பொருட்கள் ஒரு அவமானம்." என்று கூறினார்.

ஆனால் 1985ல் கட்சிப் பிரதிநிதிகளுக்கு ஆற்றிய உரையில் "உங்களில் சிலர் சந்தையை உங்கள் பொருளாதாரத்திற்கான உயிர்காக்கும் பொருளாகப் பார்க்கிறீர்கள். ஆனால், தோழர்களே, நீங்கள் உயிரைக் காப்பாற்றுபவர்களைப் பற்றிச் சிந்திக்காமல் கப்பலைப் பற்றிச் சிந்திக்க வேண்டும், அந்தக் கப்பல்தான் சோசலிசம்," என்று பேசினார்.

அமைப்பின் தேக்க நிலையைச் சமாளிப்பதற்கான அவரது மற்றொரு ஆயுதம் ஜனநாயகம். முதன்முறையாக மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யும் காங்கிரசுக்குச் சுதந்திரமான தேர்தல்கள் நடந்தன.

<div class="paragraphs"><p>சோவியத் யூனியன்</p></div>

சோவியத் யூனியன்

Twitter

கடினமான சோதனை

அடக்குமுறை ஆட்சியிலிருந்த சோவியத் யூனியனின் இந்த தளர்வு பல்வேறு தேசிய இனங்கள் மத்தியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. டிசம்பர் 1986 இல் கஜகஸ்தானில் நடந்த கலவரங்கள் அமைதியின்மையின் காலகட்டத்தை அறிவித்தன.

கோர்பச்சேவ் பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்பினார். அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகனுடன் வெற்றிகரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி, இடைநிலை அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் முக்கியமான அபாயரகரான ஆயுதங்களை ஒழித்தார்.

இறுதியாக ஆப்கானிஸ்தானின் அவமானகரமான மற்றும் இரத்தம் தோய்ந்த ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வந்த அதே வேளையில், சோவியத் படைகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்தார்.

ஆனால் சோவியத் யூனியனால் விருப்பமில்லாமல் இணைக்கப்பட்ட பல நாடுகளிலிருந்து அவருக்குக் கடினமான சோதனை வந்தது. சோவியத் ஒன்றியத்தின் உடைவு வடக்கில் பால்டிக் குடியரசுகளில் தொடங்கியது. லாட்வியா, லிதுவேனியா மற்றும் எஸ்டோனியா மாஸ்கோவில் இருந்து விடுபட்டன.

இது 9 நவம்பர் 1989 அன்று உச்சக்கட்டத்தை அடைந்தது. வெகுஜன ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து, தீவிரமான சோசலிச நாடாக இருந்த கிழக்கு ஜெர்மனியின் குடிமக்கள் மேற்கு பெர்லினுக்குள் சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது.

1990 ஆம் ஆண்டில், கோர்பச்சேவ் "கிழக்கு-மேற்கு உறவுகளில் தீவிர மாற்றங்களில் முக்கிய பங்கு வகித்ததற்காக" அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.

ஆனால் ஆகஸ்ட் 1991 க்குள் மாஸ்கோவில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் பழைய தலைமை ஒரு இராணுவ சதியை நடத்தினர். கருங்கடலில் கடற்கரையில் விடுமுறையிலிருந்தபோது கோர்பச்சேவ் கைது செய்யப்பட்டார்.

மாஸ்கோ கட்சியின் தலைவரான போரிஸ் யெல்ட்சின் இந்த சதி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார். சதிகாரர்களின் ஆட்சிக் கவிழ்ப்பை முடிவுக்குக் கொண்டு வந்து, ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைது செய்தார். மற்றும் கோர்பச்சேவின் அரசியல் அதிகாரம் அனைத்தையும் பறித்தார்.

மிகைல் கோர்பச்சேவ்
சோவியத் யூனியனின் வீழ்ச்சி : தனது சுதந்திரத்தை அறிவித்த உக்ரைன் | பாகம் 2
ஜார்ஜ் புஷ், ரெனால்ட் ரீகனுடன் கோர்பசேவ்
ஜார்ஜ் புஷ், ரெனால்ட் ரீகனுடன் கோர்பசேவ்Twitter

ஆறு மாதங்களுக்குப் பிறகு, கோர்பச்சேவ் இருக்குமிடம் தெரியாமல் சென்று விட்டார். கம்யூனிஸ்ட் கட்சியே சட்டத்திற்கு புறம்பானது என்று அறிவிக்கப்பட்டது. ரஷ்யா ஒரு புதிய, நிச்சயமற்ற, எதிர்காலத்தில் அடியெடுத்து வைத்தது.

சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பிந்தைய வருடங்கள்

மைக்கேல் கோர்பச்சேவ் ரஷ்ய மற்றும் சர்வதேச விஷயங்களில் தொடர்ந்து குரல் கொடுத்தார். ஆனால் வெளிநாட்டில் அவரது நற்பெயர் உள்நாட்டை விட அதிகமாக இருந்தது.

1996 இல் அவர் ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் நின்றபோது அவர் 5% க்கும் குறைவான வாக்குகளைப் பெற்றார். 1990 களில் அவர் சர்வதேச சொற்பொழிவுகளை நடத்தினார். உலகத் தலைவர்களுடன் தொடர்புகளை வைத்திருந்தார். பல விருதுகளையும் வென்றார். 1999 இல் ரைசா இரத்தப் புற்றுநோயால் இறந்தபோது கோர்பச்சேவ் கடுமையாக பாதிக்கப்பட்டார்.

மிகைல் கோர்பச்சேவ்
Soviet Union : உலகையே அதிரவைத்த சோவியத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் | Timeline Story
இந்தியாவில் கோர்பச்சேவ்
இந்தியாவில் கோர்பச்சேவ்Twitter

கோர்பச்சேவ், இப்போதைய அதிபர் விளாடிமிர் புடினை கடுமையாக விமர்சிப்பவராக இருந்தார். புடின் அடக்குமுறை ஆட்சியை நடத்துவதாக குற்றம் சாட்டினார். இருப்பினும், 2014 இல், புடின் ஆணைப்படி கிரிமியாவை ரஷ்யா இணைப்பதற்கு நடத்திய வாக்கெடுப்பை கோர்பச்சேவ் ஆதரித்தார்.

மார்ச் 2021 இல் கோர்பச்சேவின் 90 வது பிறந்தநாளில், அதிபர் புடின் அவரை "நமது தேசம் மற்றும் உலக வரலாற்றில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்திய நவீன காலத்தின் மிகச் சிறந்த அரசியல்வாதிகளில் ஒருவர்" என்று பாராட்டினார்.

இறுதியில் ஆகஸ்டு 30, 2022 அன்று கோர்பச்சேவ் இறந்தார். சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு காரணமானவரும் ரஷ்யாவில் சுதந்திரக் காற்று வீச விரும்பியவருமான கோர்பச்சேவின் நம்பிக்கை பலித்ததா என்றால் அதுதான் இல்லை. தற்போது அதே சோவியத் யூனியனின் சர்வாதிகாரத்தை வைத்து புடின் அரசாள்கிறார். சோவியத் யூனியன் அன்று ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது போல இன்று உக்ரைனை ஆக்கிரமித்து போர் நடத்தி வருகிறார்.

இருப்பினும் உலக வரலாற்றில் ஒரு முக்கியமான இடம் கோர்பச்சேவிற்கு உண்டு.

மிகைல் கோர்பச்சேவ்
சோவியத் யூனியன் : உக்ரைன், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் - சிதறிய வல்லரசு நாட்டின் கதை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com