சோவியத் யூனியன்

சோவியத் யூனியன்

Twitter

Soviet Union : உலகையே அதிரவைத்த சோவியத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் | Timeline Story

சோவியத் ஒன்றியம் என்பது 1922-ல் இருந்து‍ 1991 வரை இருந்த ஒரு சோசலிச நாடாகும். இது போல்ஷெவிக் ரஷ்யாவின் வாரிசாக உருவானது. 1945-ல் இருந்து 1991-ல் கலைக்கப்படும் வரை உலகின் இரண்டு வல்லரசுகளில் ஒன்றாக இது திகழ்ந்தது.
Published on

1917 ஏப்ரல் - லெனின் உட்படப் பல போராளிகளும் ஜெர்மனியிலிருந்து ரஷ்யா திரும்பினர்.

1917 அக்டோபர் - தொழிலாளர்கள், மாலுமிகளுடன் போல்ஷெவிக்ஸ் (Bolsheviks), அப்போதைய அலெக்சாண்டர் கெரென்ஸ்கி தலைமையிலான தற்காலிக அரசாங்கத்தை அதிகாரத்திலிருந்து அகற்றினார். செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கிலுள்ள குளிர்கால அரண்மனையையும், கடைசியில் மாஸ்கோவையும் கைப்பற்றினார்.

லெனின்

லெனின்

Twitterர்

உள்நாட்டுப் போர்

1918 - பிரெஸ்ட் - லிடோவ்ஸ்க் உடன்படிக்கையின் படி, ரஷ்யா தன்னுடைய பல நிலப் பகுதிகளை ஜெர்மனியிடம் கொடுத்தது. பின்லாந்து, எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா, உக்ரேன், ஜார்ஜியா, ஆர்மேனியா, அசர்பைஜான் ஆகிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து சுதந்திரமடைந்த நாடுகளாக தங்களை அறிவித்துக் கொண்டன.

1918 - 20 - போல்ஷ்விக்ஸுக்கு (Bolsheviks) எதிராக உள்நாட்டுப் போர் வெடித்தது. அது சிவப்பு மற்றும் வெள்ளைக்கு எதிரான போராக வெடித்தது. ரஷ்யாவின் வடக்குப் பகுதியில் உள்ள முர்மான்ஸ்க் (Murmansk) மற்றும் அர்சாங்கெல் (Archangel) ஆகிய பகுதிகளை, பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் 1919ஆம் ஆண்டு வரை கைப்பற்றி வைத்திருந்தன. ரஷ்யாவின் கிழக்குப் பகுதியான விலாடிவோஸ்டாக்கை, ஜப்பான் 1922ஆம் ஆண்டு வரை,தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

1918 - 21 - போர் கம்யூனிசக் கொள்கைகள் கொண்டு வரப்பட்டன. அரசு தான் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் கட்டுப்படுத்தியது. டான் பகுதியிலிருந்த லட்சக் கணக்கிலான விவசாயிகளின் விவசாய அறுவடைகளை ராணுவத்தினர் தங்கள் சொந்த தேவைக்காகவும், நகரவாசிகளின் தேவைக்காகவும் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.

1920 - போலாந்துடன் போரிட்டது ரஷ்யா

1921 - போலாந்துடன் ஓர் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டது ரஷ்யா.

1921 - புதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிவிக்கப்பட்டன. ரஷ்யப் பொருளாதாரம் கொஞ்சம் சந்தைப் பொருளாதாரத்தை நோக்கித் திரும்பியது. ரஷ்ய பொருளாதாரம் கொஞ்சம் நிலைபெறத் தொடங்கியது.

சோவியத் யூனியன்

Ukraine - Russia War : பெரும் கடனில் ரஷ்யா; எதிர்காலம் என்னாகும்? | Podcast

Russia in map

Russia in map

Twitter

ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள்

1922 - ரஷ்யா, உக்ரேன், பெலாருஸ், டிரான்ஸ்காகஸ் ஆகிய பகுதிகள் சோவியத் ஒன்றியங்களாக ஒருங்கிணைக்கப்பட்டன. 1936ஆம் ஆண்டு, இந்த பகுதிகள் தான் ஜார்ஜியா, ஆர்மேனியா, அசர்பைஜான் ஆகிய நாடுகளாகத் தனியாகப் பிரிந்தன.

1922 - சோவியத் யூனியனை அங்கீகரித்தது ஜெர்மனி.

1924 - சோவியத் யூனியன் ப்ரோலெடரியட் சர்வாதிகார அடிப்படையிலான அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது. லெனின் மறைவுக்குப் பிறகு, ஜோசப் ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.

1928 - என்ன செய்ய வேண்டும் என்கிற முன்னுரிமைப் பட்டியல்களோடும், அரசு நிர்ணயித்த இலக்குகளோடும் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தைப் பின்பற்றத் தொடங்கியது சோவியத்.

Collectivisation of agriculture என்றழைக்கப்பட்ட ஒருங்கிணைந்த விவசாயத் திட்டம் தொடங்கப்பட்டது. லட்சக் கணக்கிலான செல்வச் செழிப்பான விவசாயிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டு, அவர்களது நிலங்கள் அபகரிக்கப்பட்டன.

1936 - 38 - லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையில், ஸ்டாலின் ஆட்சிக்கு எதிரான சதி கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆயுதப்படைகள், கம்யூனிஸ்ட் கட்சி, அரசாங்கத்தில் இருந்த, ஸ்டாலினுக்கு எதிரான ஆயிரக்கணக்கான அதிருப்தியாளர்களுக்கு மரண தண்டனை அல்லது நீண்ட கால சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

1933 - அமெரிக்கா சோவியத் ஒன்றியத்தை அங்கீகரித்தது.

1934 - சோவியத் யூனியன் லீக் ஆஃப் நேஷன்ஸ்-ல் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

1939 ஆகஸ்ட் - சோவியத் யூனியனும் நாசி ஜெர்மனியும் கையெழுத்திட்ட ஆக்கிரமிப்பு மேற்கொள்ளக் கூடாது என்கிற உடன்படிக்கை முடிவுக்கு வந்தது. ஜெர்மனி போலந்தை ஆக்கிரமித்ததால், இரண்டாம் உலகப் போர் வெடித்தது.

1939 செப்டம்பர் - சோவியத் துருப்புகளும் போலந்திற்குள் நுழைந்தன, அது ஜெர்மனிக்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையில் பிரிக்கப்பட்டது.

1939 - 40 - ஃபின்லாந்து தன் நாட்டில் ஒரு பகுதியைச் சோவியத் ஒன்றியத்திற்கு விட்டுக்கொடுத்ததால், ரஷ்யா - ஃபின்னிஷ் போர் முடிவடைந்தது - தற்போது அப்பகுதி ரிபப்ளிக் ஆஃப் கரெலியாஎன்றழைக்கப்படுகிறது.

சோவியத் யூனியன்

Ukraine - Russia War : பெரும் கடனில் ரஷ்யா; எதிர்காலம் என்னாகும்? | Podcast

Joseph Stalin

Joseph Stalin

Twitter

இரண்டாம் உலகப் போரும் - அதற்குப் பிறகான பின்விளைவுகளும்

1940 - சோவியத் துருப்புகள் லிதுவேனியா, லாட்வியா, எஸ்தோனியாவை கைப்பற்றி அவை சோவியத் ஒன்றியத்தில் இணைக்கப்பட்டன; பெசராபியா, வடக்கு புகோவினாவை சோவியத் ஒன்றியத்துக்கு விட்டுக்கொடுத்தது ரொமேனியா. அது மால்டோவியன் சோவியத் சோசியலிஸ்ட் குடியரசு உருவாக வழிவகுத்தது. அது தான் இன்று ரிபப்ளிக் ஆஃப் மால்டோவா என்றழைக்கப்படுகிறது.

1941 ஏப்ரல் - சோவியத் யூனியனும் ஜப்பானும் ஆக்கிரமிப்பைக் கையில் எடுப்பதில்லை என ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.1941 ஜூன் - ஜெர்மனி சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்தது. அவ்வாண்டின் இறுதியில் பெலாரஸ் மற்றும் உக்ரேனின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டது. அதோடு லெனின்கிராட் (தற்போதைய செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்) சுற்றியுள்ள பல பகுதிகளைக் கைப்பற்றியது. சோவியத் தன் வலுவான எதிர்த்தாக்குதல் மூலம் மாஸ்கோவைக் காப்பாற்றினாலும், ஜூன் 1942 வரை ஜெர்மன் நாட்டுப் படைகள் ஸ்டாலின்கிராட் (தற்போது வோல்கோகிராட் என்று அழைக்கப்படுகிறது) மற்றும் காகசஸ் எண்ணெய் வயல்களுக்கு அருகில் இருந்தனர்.

1943 - ஜெர்மனி ராணுவம் ஸ்டாலின்கிராட்டைக் கைப்பற்றத் தவறியது. சோவியத் துருப்புக்கள் ஒரு எதிர் தாக்குதலைத் தொடங்கி 1945 மே மாதம் பெர்லினைக் கைப்பற்றியதில் இரண்டாம் உலகப் போர் ஒரு முடிவுக்கு வந்தது.

1945 - சோவியத் யூனியனும் நேச நாடுகளும் யால்டா மற்றும் போஸ்ட்டாம் உச்சி மாநாடுகளின் போது ஐரோப்பாவில் போருக்குப் பிறகு, எந்த பகுதியில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்பது குறித்து ஒரு புரிதலை ஏற்படுத்திக் கொண்டனர்.

1945 ஆகஸ்ட் - சோவியத் யூனியன் ஜப்பான் மீது போர் அறிவித்தது, இறுதியில் சகலின் மற்றும் குரில் தீவுகளிந் தெற்கு அரைப் பகுதியை தன்னோடு இணைத்துக் கொண்டது.

1948 - 49 - பெர்லின் முற்றுகை: மேற்குப் படைகளால், சோவியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பெர்லின் நகரத்துக்குள் பொருட்கள் விநியோகிக்கப்படுவதைத் தடுக்கும் பணியில் சோவியத் தோல்வியடைந்தது.

1949 - சோவியத் யூனியன் தனது முதல் அணு சாதனத்தை வெடிக்கச் செய்தது; சீனாவில் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை அங்கீகரித்தது.

1950 - சோவியத் யூனியனும் சீனாவும் 30 ஆண்டு கால கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

1950 - 53 - சோவியத் யூனியனுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறிப்பிடத்தக்க அளவில் மோசமடைந்ததைக் காண்பித்தது கொரியப் போர்.

1953 மார்ச் - ஸ்டாலின் காலமானார், அவருக்குப் பிறகு ஜார்ஜி மலென்கோவ் பிரதமராகவும், நிகிதா குருஸ்சேவ் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் முதல் செயலாளராகவும் பதவியேற்றார்.

1953 - சோவியத் யூனியன் தனது முதல் ஹைட்ரஜன் குண்டை வெடிக்கச் செய்தது.

1955 - ஜார்ஜி மலென்கோவுக்குப் பதிலாக நிகோலாய் புல்கானின் சோவியத் பிரதமரானார்.

1955 - வார்சா ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.

1956 - ஹங்கேரியில் எழுச்சியை நசுக்க உதவியது சோவியத் துருப்புக்கள்.

ருஸ்சேவ்

ருஸ்சேவ்

Twitter

ஸ்டாலினுக்குப் பின்

1956 பிப்ரவரி - ஸ்டாலினின் சர்வாதிகார ஆட்சியையும் தனி மனித வழிபாட்டையும் கண்டித்து 20வது கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் குருஸ்சேவ் ரகசிய உரை நிகழ்த்தினார்.

1957 - ஸ்புட்னிக் என்கிற முதல் செயற்கைக் கோள் பூமியைச் சுற்றி வந்தது.

1958 - புல்கானினை பதவி நீக்கம் செய்த பின்னர், குருஸ்சேவ் சோவியத்தின் பிரதமர் ஆனார்.

1950களின் பிற்பகுதியில் - பல்வேறு கருத்து வேறுபாடுகள் காரணமாக, சோவியத் யூனியன் - சீனா இடையிலான உறவு முறிந்தது.

1960 - சோவியத் யூனியன் பிரதேசத்தின் மீது அமெரிக்க உளவு விமானமான U - 2 பறந்த போது சுட்டு வீழ்த்தப்பட்டது.

1961 - யூரி ககரின் முதன்முதலில் விண்வெளிக்குச் சென்ற மனிதரானார்.

1962 - கியூபாவில் சோவியத் ஒன்றியத்தின் ஏவுகணைகள் இருந்ததால் கியூபா 'ஏவுகணை நெருக்கடி' என்றழைக்கப்பட்ட பிரச்சனை வெடித்தது.

1963 - அமெரிக்கா மற்றும் பிரிட்டனுடன் இணைந்து வளிமண்டல அணுசக்தி சோதனைகளைத் தடை செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது சோவியத் யூனியன். அமெரிக்கா மற்றும் சோவியத்துக்கு இடையில் "ஹாட் லைன்" இணைப்பு உருவாக்கப்பட்டது.

சோவியத் யூனியன்

Ukraine - Russia War : ரஷ்யாவில் Instagram, Facebook தடை; புதின் எடுத்த முடிவு - காரணம்?

சோவியத்

சோவியத்

Twitter

ப்ரஷ்னெவ் சகாப்தம்

1964 - குருஸ்சேவ் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலாளராக லியோனிட் ப்ரெஷ்னெவ்வால் நியமிக்கப்பட்டார். அலெக்ஸி கோசிகின் பிரதமரானார்.

1968 - சோவியத் மற்றும் வார்சா ஒப்பந்தத் துருப்புகள் தாராளமயமாக்கள் போக்கைத் தடுக்க செக்கோஸ்லோவாக்கியா மீது படையெடுத்தன; "ப்ரெஷ்னெவ் கோட்பாடு", சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தை அச்சுறுத்தும் பிற கம்யூனிஸ்ட் நாடுகளின் கொள்கைகளில் தலையிடும் உரிமையை கம்யூனிஸ்ட் நாடுகளுக்கு வழங்கியது.

1969 - சோவியத் மற்றும் சீனப் படைகள் மோதிக்கொண்டன.

1972 - சோவியத் யூனியனும் அமெரிக்காவும் SALT - 1 ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

1974 - சோவியத் யூனியன் அமெரிக்காவின் விருப்பமான நாடுகள் (Most Favoured Nation) - வர்த்தக நிலைக்கு ஈடாக, அதன் குடியேற்றக் கொள்கைகளைத் தளர்த்த ஒப்புக்கொண்டது.

1977 - புதிய அரசியலமைப்பின் கீழ் ப்ரெஷ்னெவ் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1979 - சோவியத் யூனியனும் அமெரிக்காவும் SALT - 2 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. சோவியத் துருப்புகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது, மேற்கு நாடுகளுடனான உறவுமுறையை சுமுகமாக்கும் பேச்சு வார்த்தைகளை அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டு வந்தது சோவியத்.

1980 - கோசிகின் பிரதமராக நிகோலாய் டிகோனோவ்வால் நியமிக்கப்பட்டார்; கோசிகின் காலமானார்.

1982 - ப்ரெஷ்னெவ் காலமானார், அவருக்குப் பதிலாக கேஜிபி தலைவர் யூரி ஆண்ட்ரோபோவ் நியமிக்கப்பட்டார்.

1984 - ஆண்ட்ரோபோவ் காலமான பிறகு, அவருக்குப் பதிலாக கான்ஸ்டான்டின் செர்னென்கோ நியமிக்கப்பட்டார்.

கோர்பச்சேவ்

கோர்பச்சேவ்

Twitter

கிளாஸ்னோஸ்ட், பெரெஸ்ட்ரோயிகா மற்றும் செர்னோபைல் விபத்து

1985 - செர்னென்கோ காலமானார், அவருக்குப் பதிலாக மிக்கேல் கோர்பச்சேவ் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்; ஆண்ட்ரே க்ரோமைகோ அதிபரானார். கோர்பச்சேவ் மதுவுக்கு எதிரான பிரசாரத்தைத் தொடங்கினார். மேலும் வெளிப்படைத்தன்மையையும் (கிளாஸ்னோஸ்ட்) ஆதரித்தார் மற்றும் கட்சிக்குள் மறுசீரமைப்பு (பெரெஸ்ட்ரோயிகா) கொள்கைகளையும் ஆதரித்தார்.

1986 - செர்னோபைல் அணுமின் நிலையம் வெடித்து, உக்ரேன், பெலாரஸ் மற்றும் அதற்கு அப்பாலும் கதிரியக்கம் பரவியது.

1987 - சோவியத் ஒன்றியமும் அமெரிக்காவும் இடைநிலை அணுகுண்டு ஏவுகணைகளை அகற்ற ஒப்புக்கொண்டன. சீர்திருத்தங்களின் வேகத்தை விமர்சித்ததற்காக போரிஸ் யெல்ட்சின் மாஸ்கோ கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

1988 - க்ரோமைகோவுக்குப் பதிலாக கோர்பச்சேவ் அதிபரானார்; கஜகஸ்தான், பால்டிக் குடியரசுகள், ஆர்மேனியா, அசர்பைஜான் போன்ற பகுதிகளில் இருந்த அதீத தேசியவாதிகளுக்கு சவாலாக நின்றார். தனியார் துறையை அனுமதிக்கும் விதத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு மாநாடு ஒப்புதல் வழங்கியது.

1989 - மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் சோவியத்தால் திணிக்கப்பட்ட கம்யூனிச ஆட்சிகள் கவிழத் தொடங்கின. போலாந்தில் தொடங்கிய இந்நிகழ்வு ஹங்கேரி, கிழக்கு ஜெர்மனி, பல்கேரியா, செக்கோஸ்லோவாக்கியா, ருமேனியா என வரிசையாகத் தொடர்ந்தன. அதற்கு முன் பல வெகுஜன மக்கள் பேரணிகள் நடந்தன. அதனைத் தொடர்ந்து, கிழக்கு ஜெர்மனியில் நவம்பர் 9 அன்று பெர்லின் சுவர் இடித்துத் தள்ளப்பட்டது.

ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் துருப்புக்கள் வெளியேறின. ஜார்ஜியாவில் தேசியவாதக் கலவரங்கள் அடக்கப்பட்டன; லிதுவேனியாவைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து தனித்ததாக, சுதந்திரமான கட்சியாகத் தன்னை அறிவித்துக் கொண்டது. புதிய மக்கள் பிரதிநிதிகள் காங்கிரஸுக்கு அல்லது நாடாளுமன்றத்திற்கு வெளிப்படையாகப் போட்டியிட்ட முதல் தேர்தல் அது.

சோவியத்

சோவியத்

Twitter

சோவியத் யூனியன்

Russia - Ukraine war : இந்தியாவுக்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெய் தர ரஷ்யா முடிவு ?

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி

1990 - ஆர்மேனியர்களுக்கும் அஸெரிஸ்களுக்கும் இடையிலான இன ரீதியிலான மோதலைத் தடுக்க சோவியத் துருப்புக்கள் அசர்பைஜானுக்கு அனுப்பப்பட்டன; ஒரு கட்சி ஆட்சிக்கு முடிவு கட்ட கம்யூனிஸ்ட் கட்சி வாக்களித்தது. கோர்பச்சேவ் பால்டிக் நாடுகளின் சுதந்திரத்தை எதிர்த்தார், அதோடு லிதுவேனியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தார். போரிஸ் யெல்ட்சின் ரஷ்யாவின் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார்.

1991 ஆகஸ்ட் - பாதுகாப்பு அமைச்சர் டிமிட்ரி யாசோவ், துணை அதிபர் ஜெனடி யானயேவ், உள்துறை அமைச்சகத்தின் தலைவர்கள், கேஜிபி அமைப்பால் அவருக்குச் சொந்தமான கிரிமியாவில் உள்ள அவரது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த கோர்பசேவ். இவர்கள் அனைவரும் பின்னாளில் கைது செய்யப்பட்டனர். போரிஸ் யெல்ட்சின், ரஷ்யாவில் உள்ள சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்தார். பால்டிக் நாடுகளின் சுதந்திரத்தை ஆதரித்தார் யெல்ட்சின். உக்ரேனைத் தொடர்ந்து பல நாடுகள் தங்களைச் சுதந்திர நாடுகளாக அறிவித்துக் கொண்டன.

1991 செப்டம்பர் - மக்கள் பிரதிநிதிகளின் காங்கிரஸ் சோவியத் யூனியனைக் கலைக்க வாக்களித்தது.

1991 டிசம்பர் 08 - ரஷ்யா, உக்ரேன், பெலாரஸ் தலைவர்கள் காமன்வெல்த் சுதந்திர நாடுகளை அமைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

1991 டிசம்பர் 25 - கோர்பச்சேவ் சோவியத் அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்; மீதமுள்ள சோவியத் குடியரசுகளின் சுதந்திரத்தை அமெரிக்கா அங்கீகரித்தது.

1991 டிசம்பர் 26 - சோவியத் ஒன்றிய அலுவலகங்களை ரஷ்ய அரசாங்கம் கைப்பற்றியது.

logo
Newssense
newssense.vikatan.com