இறந்த தன் குட்டியை சாப்பிட்ட தாய் குரங்கு - அறிவியலாளர்கள் சொல்லும் காரணம் என்ன?

சற்றும் குழந்தை அசையவில்லை. மறுநாள் குமாசி தன் குழந்தையை சாப்பிடத் தொடங்கியது. மீதம் இருந்த உடல்பாகங்களை வலுக்கட்டாயமாக பூங்கா ஊழியர்கள் அகற்றும் வரை குரங்கு சாப்பிட்டுள்ளது.
இறந்த தன் குட்டியை சாப்பிட்ட தாய் குரங்கு - அறிவியலாளர்கள் சொல்லும் காரணம் என்ன?
இறந்த தன் குட்டியை சாப்பிட்ட தாய் குரங்கு - அறிவியலாளர்கள் சொல்லும் காரணம் என்ன?ட்விட்டர்
Published on

இறந்த தனது குட்டியை தாய் குரங்கு ஒன்று சாப்பிடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. குரங்குகளில் இத்தகைய நடவடிக்கை இதுவே முதன்முறை என்பதால், இச்செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பேசப்படும் வீடியோ செக் குடியரசில் அமைந்துள்ள ஒரு விலங்கியல் பூங்காவில் பதிவு செய்யப்பட்டது.

பல காரணங்களுக்காக பாம்பு, புலி, சில சமயங்களில் சிங்கம் போன்ற விலங்குகள் தங்களின் குட்டிகளை உண்ணும் என்பது நாம் அறிந்ததே. சில நேரங்களில் சிம்பான்சிகளும் தங்களது குட்டிகளை உண்ணும்.

எனினும் மாண்ட்ரில்லஸ் லுகோபேயஸ் வகை குரங்குகளில் இந்த செயல்பாடு இதுவே முதல் முறை என்கின்றனர். இந்த வகை குரங்குகளை டிரில்ஸ் என்றும் அழைக்கின்றனர். இவை மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் அதிகமாக காணப்படும் குரங்கு வகையாகும்.

செக் குடியரசில் உள்ள ப்ராக் நகரின் வடகிழக்கில் உள்ள Safari Park Dvůr Králové இல் வசித்து வருகிறது குமாசி என்கிற குரங்கு.

இது கடந்த ஆகஸ்ட் 2020ல் தனது குட்டியை ஈன்றெடுத்தது. ஆனால் அந்த குட்டி பிறந்த சில தினங்களிலேயே இறந்துவிட்டது. இதன் மரணத்திற்கான காரணம் தெரியவில்லை.

தன் குட்டியின் சடலத்தை சில தினங்களுக்கு தன்னுடனே வைத்திருந்த குமாசி குரங்கு, ஒரு கட்டத்தில் அதனை உட்கொள்ள ஆரம்பித்துள்ளது.

இந்த வீடியோ 2020ல் பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த தன் குட்டியை சாப்பிட்ட தாய் குரங்கு - அறிவியலாளர்கள் சொல்லும் காரணம் என்ன?
Adipurush: தியேட்டரில் FDFS பார்க்க வந்த குரங்கு - ”ஜெய் ஸ்ரீ ராம்” என கோஷமிட்ட ரசிகர்கள்!

இச்சமப்வம் குறித்த அறிக்கை பிரைமேட்ஸ் என்ற ஜர்னலில் வெளியாகியுள்ளது. அதில், ”குழந்தை பிறந்தபோதே அதன் உடல்நலம் சரியாக இல்லை. சில தினங்களில் அது இறந்துவிட்டது. இறந்த குட்டியின் உடலை அந்த தாய் குரங்கு தனியே சாப்பிட்டது.

தாயின் நடத்தையின் பின் இருக்கும் காரணம் பற்றி நாம் உறுதியான முடிவுகளை எடுக்க முடியாது” என்று தெரிவித்துள்ளனர்.

முதலில் குமாசி மற்ற குரங்குகளுடன் இணைந்து தன் குட்டியை அங்குமிங்குமாக இழுத்தும், தூக்கிக்கொண்டும் செல்வதை பூங்கா ஊழியர்கள் கவனித்திருக்கின்றனர். குட்டியின் உடலில் உயிர் இருக்கிறதா என்பதை உறுதி செய்யவே குரங்குகள் இவ்வாறு செய்துள்ளன.

சற்றும் குழந்தை அசையவில்லை. மறுநாள் குமாசி தன் குழந்தையை சாப்பிடத் தொடங்கியது. மீதம் இருந்த உடல்பாகங்களை வலுக்கட்டாயமாக பூங்கா ஊழியர்கள் அகற்றும் வரை குரங்கு சாப்பிட்டுள்ளது.

பல நாட்களாக கூண்டுக்குள்ளேயே அடைத்துவைக்கப்பட்டு இருப்பதால் கூட இந்த செயல்பாடு உண்டாகியிருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் இல்லை

இறந்த தன் குட்டியை சாப்பிட்ட தாய் குரங்கு - அறிவியலாளர்கள் சொல்லும் காரணம் என்ன?
ஜப்பான் : ஆண் துணை இல்லாமல் குட்டி போட்ட குரங்கு - மர்மத்தை விலக்கிய பூங்கா ஊழியர்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com