பூனைகள் மனித உயிரை பறிக்குமா? உலகின் மிக ஆபத்தான பூனைகள் இவை தான்!

இந்த பூனைகள் சற்று ஆபத்தானவையும் கூட. தன்னை கவனிக்கவில்லை என்றால் வீட்டு பூனையே நம்மை சரமாரியாக அடிப்பதை இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் பார்த்திருப்போம். உண்மையில், உலகில் மிகவும் ஆபத்தான பூனை இனங்கள் இருக்கின்றன. அவற்றைக் குறித்து இங்கு காணலாம்
பூனைகள் மனித உயிரை பறிக்குமா? உலகின் மிக ஆபத்தான பூனைகள் இவை தான்!
பூனைகள் மனித உயிரை பறிக்குமா? உலகின் மிக ஆபத்தான பூனைகள் இவை தான்!canva

உலகில் அதிகம் விரும்பப்படும் செல்லப் பிராணிகளில் பூனைகளுக்கு ஸ்பெஷல் இடம் உண்டு.

க்யூட்டாக பெரிய பெரிய கண்களுடன், அப்பாவி போல முகத்தை வைத்துக்கொண்டிருக்கும் நான்கு கால் உயிரினம்.

நாய்களை பராமரிப்பதை விட இவைகளை நாம் கொஞ்சம் அதிகமாகவே கவனிக்கவேண்டும், கொஞ்சம் அதிகமாகவே கொஞ்சவேண்டும்.

ஆனால் இந்த பூனைகள் சற்று ஆபத்தானவையும் கூட. தன்னை கவனிக்கவில்லை என்றால் வீட்டு பூனையே நம்மை சரமாரியாக அடிப்பதை இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் பார்த்திருப்போம்.

உண்மையில், உலகில் மிகவும் ஆபத்தான பூனை இனங்கள் இருக்கின்றன. அவற்றைக் குறித்து இங்கு காணலாம்

Black-footed Cats

இந்த பூனை 35 முதல் 52 செண்டிமீட்டர் அதாவது 14 முதல் 20 இன்ச் தான் இருக்கிறது. எடை 1 முதல் 2.45 கிலோகிராம் தான்.

இவை வேட்டையாடி தான் உணவுகள் உண்கின்றன. இரவு நேரங்களில் வெளிவரும் இந்த பூனைகள், ஒரு இரவில் குறைந்தது 14 உயிரினங்களை (உணவு) வேட்டையாடுகின்றன.

பெங்கால் பூனைகள்

ஆசிய சிறுத்தை பூனைகளுடன் உள்நாட்டு பூனைகளின் கலப்பில் உருவான இந்த பெங்கால் பூனைகள் தனது உரிமையாளரிடம் மிகவும் பாசமாகவும், நேர்மையாகவும் இருக்கின்றன.

இவற்றின் தோற்றமும் சிறிய சைஸ் சிறுத்தை போல தான் இருக்கிறது

இவற்றிற்கு மனிதர்கள் செய்யும் ஒரு சில வேலைகளை கற்றுக்கொள்ளும் திறன் இருக்கிறது. ஆனால், காட்டு பூனைகளுக்கு மிக நெருக்கமாக இருப்பதால், முதல் மற்றும் இரண்டாம் தலைமுறை பூனைகள் ஆபத்தானவையாக பார்க்கப்படுகின்றன.

இவற்றிற்கு வேட்டையாடும் திறனும் அதிகம்

இதனால் அமெரிக்காவின் சில பகுதிகளில் பெங்கால் பூனைகள் தடை செய்யப்பட்ட இனமாகும். மற்ற சில நாடுகளிலும் இவற்றை வளர்ப்பதில் கட்டுப்பாடுகள் உள்ளன

பூனைகள் மனித உயிரை பறிக்குமா? உலகின் மிக ஆபத்தான பூனைகள் இவை தான்!
பூனை குறுக்கிடுவது முதல் கண்ணாடி உடைவது வரை - கெட்ட சகுனங்களுக்கு பின்னிருக்கும் அறிவியல்!

சவானா பூனைகள்

இதனை மினி டைகர் என்று தான் அழைக்கின்றனர். செர்வல் இன பூனைகள் மற்றும் வீட்டு பூனையின் கலவையில் பிறந்தவை.

இது வீட்டு பூனை இனங்களில் வைத்து மிகவும் பெரிய பூனை. 8 முதல் 20 பவுண்ட் எடை, மற்றும் இதன் வால்கள் 13 முதல் 20 இன்ச் நீளம் இருக்கும்.

கிராஸ் ப்ரீட் பூனை என்பதால், இவற்றின் முதல் தலைமுறை பூனைகள் மிக ஆபத்தானதாக கருதப்படுகின்றன.

இந்த செர்வல் என்பது ஆப்பிரிக்க காடுகளில் காணப்படும் பூனைகளாகும்.

ஆஸ்திரீலியாவில் இவை தடை செய்யப்பட்ட பூனை இனமாகும். அமெரிக்காவின் 16 மாகாணங்களில் செர்வல் பூனையை வீட்டில் வளர்க்க சட்ட அனுமதி உண்டு.

வடக்கு கரோலினா, அலபாமா, நெவாடா மற்றும் விஸ்கான்சினில் உரிமம் இல்லாமல் கூட இவற்றை வளர்க்கலாம்.

பிக்ஸி பாப்

8 முதல் 17 பவுண்ட்கள் எடையுள்ள இந்த பூனைகளுக்கு கொஞ்சம் நாயினை போன்ற குணாதிசியம் இருக்கிறது. இவற்றின் பாதங்கள் மற்ற பூனைகளை போல அல்லாமல், விரல்கள் சற்று அதிகமாகவே உள்ளன. மேலும் மிகச் சிறியவால்கள் கொண்டவை இந்த பூனைகள்

இதன் கூர்மையான நகங்கள் தான் பிக்ஸி பாப் பூனைகளின் பலமே. இவற்றின் பெரிதான தோற்றம் மற்றும் கூர்மையான நகங்கள் இவற்றினை ஆபத்தான பூனைகளின் பட்டியலில் சேர்க்கின்றன

பூனைகள் மனித உயிரை பறிக்குமா? உலகின் மிக ஆபத்தான பூனைகள் இவை தான்!
புலியின் எச்சில் மருந்தாக பயன்படுகிறதா? இந்தியாவின் தேசிய விலங்கு குறித்த ஆச்சரிய தகவல்கள்

சௌசி

ஆபத்தான பூனைகள் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் இவை, 15 முதல் 30 பவுண்ட் எடையுள்ளவை. இவை மிகவும் புத்திசாலியான, உடல் வலிமை அதிகம் உள்ள பூனைகள்.

பாப் பூனைகள்

இவை மிகவும் வலிமையான பூனைகளில் ஒன்று. மனிதர்களை கொல்லும் அளவு வலிமையுடைவை.

கூர்மையான பற்களும், நகங்களும் தான் இவற்றின் வலிமையே

பூனைகள் மனித உயிரை பறிக்குமா? உலகின் மிக ஆபத்தான பூனைகள் இவை தான்!
The Elephant Whisperers: தும்பிக்கை இல்லாமல் யானைகளால் வாழ முடியாதா? wow facts

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com