Ukraine War: Russia அழித்த உலகின் மிகப்பெரிய விமானத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன தெரியுமா?

கடந்த 24ம் தேதி முதல் ரஷ்யா உக்ரைனில் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டு எல்லைக்குள் புகுந்து தாக்கி வரும் ரஷ்ய இராணுவம் அங்கு பலத்த சேதங்களை ஏற்படுத்தியிருக்கிறது
Antonov An-225 Mriya

Antonov An-225 Mriya

Twitter

Published on

கடந்த 24ம் தேதி முதல் ரஷ்யா உக்ரைனில் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டு எல்லைக்குள் புகுந்து தாக்கி வரும் ரஷ்ய இராணுவம் அங்கு பலத்த சேதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. தலைமை செயலகம், குடியிருப்பு பகுதிகள், விமான நிலையங்கள் என பல இடங்களை நாசமாக்கியிருக்கும் ரஷ்ய இராணுவம், உலகிலேயே மிகப்பெரிய விமானத்தை தாக்கி அழித்துள்ளதாக உக்ரைன் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Antonov An-225 Mriya

Antonov An-225 Mriya

Facebook

Antonov An-225 Mriya என்ற அந்த விமானம் அதிக அளவிலான சரக்குகளை ஏற்றிக்கொண்டு செல்லக்கூடியது. “வானில் ஒரு சரக்கு கப்பல்” போல மிதக்கும் என அதனை வர்ணிக்கிறார்கள்.

1980-களில் அன்டோனோவ் என்ற நிறுவனம் தயாரித்த இந்த விமானம் சோவியத் ஆட்சியில் விண்கலத்தை எடுத்துச் செல்ல பயன்பட்டது.

நான்கு எஞ்ஜின்களைக் கொண்ட கார்கோ விமானமான ஆண்டனோவ் ஏ.என் – 124 ரஸ்லன் விமானத்தின் மேம்படுத்தப்பட்ட டிசைனுடன் இந்த விமானம் தயாரிக்கப்பட்டது. இதனை தயாரிக்க மட்டுமே மூன்று ஆண்டுகள் செலவழித்திருக்கிறது அன்டனோவ் நிறுவனம்.

1989ல் நடந்த சோதனை பறத்தலிலேயே 160 உலக சாதனைகளை சொந்தமாக்கியது இந்த விமானம்.

Antonov An-225 Mriya

Ukraine Russia War : உக்ரைன் போரில் இந்திய மாணவர் பலி - அதிர்ச்சியில் வெளியுறவுத் துறை

Antonov An-225 Mriya

Antonov An-225 Mriya

Twitter

ம்ரியா விமானத்தின் மேலே வின்கலத்தை வைத்து எடுத்துச் செல்வதற்காக ரஷ்யா இதனை உருவாக்கியது. ஆனால் 1990களில் சோவியத் யூனியன் உடைந்ததால் பயன்பாடின்றி நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. மீண்டும் 2001ம் ஆண்டிற்கு பிறகு பயன்படுத்த தொடங்கினர். சரக்குகளை மட்டுமே முழுவதும் ஏற்றிச் சென்றதனால் அதன் மேல் புறத்தின் சுமை தாங்கும் திறன் உபயோகிக்கப்படவில்லை.

விமானத்தின் மூக்கு எனச் சொல்லப்படும் முன் பகுதிவழியாக சரக்குகளை ஏற்றுவதனால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு மிக லாவகமானதாக இருந்தது ம்ரியா.

ம்ரியா என்னும் வார்த்தைக்கு கனவு என்று பொருள். இதனை குறிப்பிட்டு விமானம் அழிக்கப்பட்ட அன்று ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர், “அவர்கள் உலகின் மிகப் பெரிய விமானத்தை அழித்திருக்கலாம். ஆனால், வலுவான, சுதந்திரமான மற்றும் ஜனநாயக ஐரோப்பிய அரசின் கனவை ஒருபோதும் அழிக்க முடியாது. நாங்கள் வெற்றி பெறுவோம்!" எனக் கூறினார்.

மிகப் பெரிய மற்றும் அதிக கனமான பொருட்களை இதில் ஏற்ற முடிந்ததால் இது வணிக ரீதியில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. 747 கார்கோ விமானங்களில் ஏற்ற முடிந்ததை விட இரண்டு மடங்கு கார்கோ இந்த விமானத்தில் ஏற்ற முடியும்.

ம்ரியா பழைய தயாரிப்பானதால், விமானத்தை இயக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கும் காக்பிட் பகுதியானது பெரியதாக இருக்கும்.

சரக்கு விமானம் பயன்படுத்தப்படும் போது பைலட், கோ பைலட், நேவிகேடர், ரெடார் ஆப்பரேட்டர், மற்றும் இரண்டு ஃப்லைட் எஞ்ஜினியர்கள் என்று மொத்தம் ஆறு பணியாளர்கள் மட்டுமே இந்த விமானத்தில் இருப்பார்கள்.

Antonov An-225 Mriya

Rahul Gandhi : 'நான் தமிழன், என் ரத்தம் இங்கே கலந்திருக்கிறது'- ராகுல் நெகிழ்ச்சி

பொதுவாக ராணுவ டேங்குகள் சிறு சிறு விமான பாகங்கள், ரயில் பெட்டிகள் போன்றவை இந்த விமானத்தில் ஏற்றிச் செல்லப்படுவதுண்டு.

ஆறு எஞ்சின்களும் 16 ஜோடி லேண்டிங்க் கியர் வீல்களும் கொண்டுள்ளது இந்த ராட்சச விமானம். இதன் காலி எடை கிட்டத்தட்ட 285 டன், அதிகபட்ச டேக் ஆஃப் எடை 616 டன் ஆகும்.

மொத்தம் 84 மீட்டர் நீளம் உள்ள இந்த விமானத்தின் இரண்டு இறக்கைகளின் நீளம் 88 மீட்டர் ஆகும்.

இதுவரை உலகில் இயக்கத்தில் இருக்கும் விமானங்களில் 6 எஞ்சின் கொண்டுள்ள ஒரே விமானம் இதுவே ஆகும். வானில் 600 டன் எடையை சுமந்து கொண்டு மணிக்கு 850 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்க இந்த என்ஞ்சின்கள் இன்றியமையாததாக இருக்கின்றன.

சாதாரணமாக இதில் 250 டன் சரக்குகளை ஏற்றலாம். சரக்குகளை ஏற்றுவதற்கு 43.35 மீட்டர் நீளம், 6.4 அகலம், 4.4 மீட்டர் உயரத்தில் இடமிருக்கிறது. இவற்றுடன் 3000 கிலோ வரை தூக்க முடிந்த க்ரேன் அமைப்பும் இந்த விமானத்தில் உள்ளது.

இந்த விமானத்தை வாடகைக்கு எடுப்பதனால் ஒரு மணிநேரத்திற்கு 30000 அமெரிக்க டாலர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.

உலகில் இதுவரை வன்வழியாக எடுத்துச் செல்லப்பட்ட அதிக எடைக் கொண்ட பொருள் கேஸ் பவர் ப்ளாண்டிற்கு தேவையான ஜெனரேட்டராகும். இதன் எடை 189 டன். 2009 ம் ஆண்டு இதனை வான் வழியாக எடுத்துச் சென்று சாதனை படைத்தது ம்ரியா!

ராட்சத அளவிலான இந்த விமானத்தை எல்லா விமான நிலையங்களிலும் இறக்கிவிட முடியாது. இந்தியாவில் 2016ம் ஆண்டு ஒரே ஒரு முறை தரையிறங்கியிருக்கிறது ம்ரியா.. விமானப் போக்குவரத்து வரலாற்றில் 27.01.2022 கருப்பு தினமாக கருதப்பட வேண்டும் ம்ரியாவின் இழப்பு அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் ஒரே ஒரு விமானம் தான் இருந்தது.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com