அவ்வை சண்முகி வேடத்தில் வங்கியை கொள்ளையடித்த நபர் - எங்கே? எப்போது?

பெண் போல வேடம் அணிந்து வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார் ஒரு நபர். அதன் புகைப்படங்கள் இணையதளத்தில் பகிரப்பட்டதிலிருந்து, பலவிதமான கமென்ட்டுகளை தெரிவித்து வருகின்றனர் இன்டெர்னெட் வாசிகள்.
Robbery
RobberyPexels
Published on

வங்கிக்கொள்ளைகள் எப்போதும் பயங்கரமானதாக இருக்கும். நாம் பார்த்த பேட்மேன் படங்கள், மனி ஹைஸ்ட் போன்ற தொடர்களில் அதை த்ரில்லராக காட்சியமைத்திருப்பார்கள். ஆனால், ஹாலிவுட்டில் குவிக் சேஞ்ச் என்ற படத்திலும் சரி, தமிழில் வெளியான ருத்ரா திரைப்படத்திலும் சரி, வங்கிக்கொள்ளை ஒரு நகைச்சுவையான காட்சியாக படமாக்கப்பட்டிருக்கும்.

இவ்விரண்டு படங்களிலும், வங்கியை கொள்ளையடிக்கும் நபர் ஒரு ஜோக்கரை போல வேடமணிந்து வந்திருப்பதே அதற்கு காரணமாகும். இங்கும் ஒரு நபர் வங்கிக்கொள்ளையில் ஈடுபட்டுள்ளது, கொஞ்சம் நகைச்சுவையான ஒரு முறையை கையாண்டுள்ளார்.

Quick Change - Rudra
Quick Change - RudraCanva

ஜார்ஜியா நாட்டில் வயதான பெண் போல வேடமணிந்துகொண்டு, வங்கியினுள் சென்ற ஒரு நபர் அங்கிருந்த பணத்தைக் கொள்ளையடித்துள்ளார். இவரை வலைவீசி தேடி வருகிறது காவல்துறை.

அந்த நபர், வங்கிக்குள் வந்து, ஒரு சீட்டில், பணம் தருமாறு எழுதிக்கொடுத்துள்ளார். மேலும் தான் துப்பாக்கி வைத்திருப்பதாகவும் அறிவிக்கச் சொல்லியுள்ளார். பணம் கைக்கு வந்த பிறகு அவர் அங்கிருந்து தப்பிவிட்டார். வங்கியிலிருந்த சிசிடிவி இல் அந்நபர் ஒரு கவுன், தலைமேல் விக் மற்றும் ஒரு கருப்பு நிற முகக்கவசமும், கையில் ஆரஞ்சு நிற கிளவுஸ் அணிந்திருந்தது பதிவாகியிருந்தது.

Man dressed as elederly woman robs bank
Man dressed as elederly woman robs bankFacebook
Robbery
Money Heist : மணி ஹெய்ஸ்ட் தொடர் உலக ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்தது எப்படி?

சிசிடிவியில் பதிவான அந்தப் புகைப்படங்களை, McDonough காவல் தூறை சமூக வலைத்தளங்களில் பகிர, பலரும் பலதரபட்ட கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதிலும் முக்கியமாக இவர் தனியாக இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது பலரையும் கவர்ந்துள்ளது.

ஒரு சிலர், Mrs.Doubtfire படத்தில் ராபின் வில்லியம்ஸ் கையாண்ட யுக்தி ஆனால், இது வேறு காரணத்திற்காக என்றும் கிண்டலடித்து வருகின்றனர். Mrs.Doubtfire படம் தான் தமிழில் அவ்வை சண்முகி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த நபர் இப்படி வித்தியாசமாக உடையணிந்து வந்திருந்தது, யாருக்கும் விசித்திரமாகத் தோன்றவில்லையா எனவும் சிலர் கேள்வியெழுப்பிவருகின்றனர்.

கொள்ளையடித்துவிட்டுத் தப்பிச் சென்ற அந்த நபரைத் தேடி வருகிறது காவல்துறை

Robbery
வங்கி கணக்கிற்கு தவறுதலாக வந்த பணம் : தர மறுக்கும் நபர் - இத்தனை லட்சமா? | அடடா நிகழ்வு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com